கொம்யூனிஸ்ட் கார்திகேயன் நினைவுகள்

Karthikeyan_Communistஇலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களது மறைவின் 33வது வருட நினைவுகூரல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனில் நீண்டகாலமாக வாழ்ந்து தற்போது யாழ் சென்று பணிபுரிகின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் மூன்று சமூகங்களில் இருந்தும் பேச்சாளர்கள் கொம்யுனிஸ்ற் கார்த்திகேயனின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வை கொம்யுனிஸ்ற் கார்த்திகேயன் அறக்கட்டளை நிதியம்,  இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், யாழ் ஆய்வறிவாளர் அணியம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

காலம்:
19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணி.

இடம்:
யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடம்,
(யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்)
கே.கே.எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.

தலைமை:
திரு ரெங்கன் தேவராஜன், வழக்கறிஞர்.

பேச்சாளர்கள்:
திரு எஸ்.ஜி.புஞ்சிகேவா, வழக்கறிஞர்.
திரு எம்.ஜி.பசீர், ஜே.பி, யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர்.
கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர்.
திரு வீ.சின்னத்தம்பி, இளைப்பாறிய ஆசிரியர்.

ஏற்பாட்டாளர்கள்:
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியம்
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
யாழ் ஆய்வறிவாளர் அணியம்,
த.பெ.இலக்கம் 165,
யாழ்ப்பாணம்

தகவல்: ஆர் குகதாசன்

Show More

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • chandran.raja
    chandran.raja

    நான் படித்தகல்லூரி காலத்தில் 1960-70 காலப்பகுதியில் அவரை ஒரு ஆசிரிராகத் தான் அறிந்துகொண்டேன். அந்த நேரத்தில் அவருக்கிருந்த சமூகஅக்கறையை எனக்கு புரிந்து கொள்வதற்கு கிஞ்சித்தும் அறிவுகிடைக்கவில்லை அல்லது உந்துப்படவில்லை பின்நாளில் அவர் இருந்த நாச்சிமார்கோவில் வாசஸ்தலத்துக்கும் போய்வர வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்திலும் அவரின் பெருமைகளை சமூகத்தில் அவர் கொண்டிருந்த பற்று தியாக உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு எனது வயது போதாவையே!. பின்நாளில் நானும் பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்புககொண்டு சீனசார்பு கம்யூனிட் கூட்டங்களுக்கு சமூகம் அளித்தபோது எங்கோ ஓர்மூலையில் கலகலப்பில்லாமல் பணிபுரிவதைக் கண்டேன். இதில் குறிப்பிடக்கூடியது என்னவென்றால் அவர்காலத்தில் தாம்வரிந்தது கொண்ட பொதுவுடமைக் கட்சிக்காக சாதியால் பிளவுண்ட தமிழர்களும் தமிழ்முஸ்லீம் மக்களின் முன்னோடிகளும் அவர்களின் பின்னால் அணிதிரண்டிருந்தது தான்.
    காத்திகேயன் இறந்துவிட்டார். இறப்புக்கு பின்னால் நடந்தைவையை அவரால் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா? நிச்சியமாக இல்லை என்பதே எனது பதில். அப்படியென்றால் காத்திகேயன் வாழ்வு தியாகங்கள் தண்ணீரில் கழுவப்பட்தொன்றா? இல்லை. அந்த கழுவிய நீரில் தோன்றிய உயிரினமே நாம்.

    பிற்குறிப்பு. பொதுவுடமைத் தத்துவம். ஒருநாட்டிற்கு சொந்தமானவையல்ல அது மனிதகுலத்திற்கு சொந்தமாவை. காத்திகேயன் சீனபோராட்ட வழிகளில் குறிப்பாக மாவோவாதத்தில் கவனம் செலுத்தியிருந்தார். அது அவரின் குறையல்ல. அவரின் வாழ்வுமுறையையே கற்றுதேர்ந்து அதன்படி நடப்போமானால் அவரை உயர்ந்த இடத்தில் வைப்பதற்கான வழியை எம்மால் அமைக்க முடியும்.

    Reply
  • pandithar
    pandithar

    கார்த்திகேசன் மாஸ்ரர் சிறந்த ஒரு இடதுசாரி. தன் நகைச்சுவை கருத்துக்களால் மாணவர்களையே சிந்திக்க வைத்தவர்…

    ஒரு நாள் காலை வகுப்பறையில்…
    தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்புபவன் யார்?.. கேட்டார் தோழர் காத்திகேசன்..

    தந்தை செல்வநாயகம்> ஜி ஜி.பொன்னம்பலம் என்றார்கள் மாணவர்கள்.

    சீ>.. சீ.. என்றார் கார்த்திகேசன்….

    யாழில் இருந்து கொழும்பு நோக்கி புகைவண்டி போகும். கர்ப்பணி பெண்களுக்கோ> வயோதிபர்களுக்கோ தமிழர்கள் ஆசனத்தில் இடம் கொடுக்காமல் கால் நீட்டி வைக்கவும் அவர்களுக்கு ஆசனம் தேவை. அதில் நித்திரை வேறை…

    அனுராதபுரம் வந்ததும் பீடா> சோடா வடை எண்டு சிங்களவர்கள் கத்திக்கோண்டு புகைவண்டியில் ஏறுவார்கள்.

    அப்போதுதான் தமிழர்கள் திடுக்கிட்டு தூக்கம் கலைந்து விழிப்பார்கள்.வயோதிபர்களும்> கர்ப்பணி பெண்களும் அமர ஆசனம் அப்போதுதான் கிடைக்கும்.

    தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவர்கள் அனுராதபுரத்து சிங்களவர்கள் என்று கார்த்திகேசன் மாஸ்ரர் சொல்ல மாணவர்கள் சிரிப்பொலிக்க… இங்கு சமூகநிந்தனையும் பிறக்கும்…

    Reply
  • nantha
    nantha

    “காத்தார்” என்று நாங்கள் செல்லமாக அழைத்த கார்த்திகேசன் அவர்கள் “சமத்துவத்தை” யாழ் சூழலில் எப்படி கொண்டு வரலாம் என்று எங்களுக்குக் காட்டியவர். “ஈழ”நாசத்தோடு அவரின் அரும்பெரும் செயல்கள் அனைத்தும் காணாமல் போயின என்பது கவலைகுரிய விடயமே ஆகும்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..இறப்புக்கு பின்னால் நடந்தைவையை அவரால் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா? நிச்சியமாக இல்லை என்பதே எனது பதில்….//

    //….காத்திகேயன் சீனபோராட்ட வழிகளில் குறிப்பாக மாவோவாதத்தில் கவனம் செலுத்தியிருந்தார்….//

    என்ன சந்திரன் ராஜா, இறப்புக்குப்பின்னால் நடந்தவற்றைக் கற்பனை செய்வது இருக்கட்டும் அவர் உயிருடன் இருந்தபோது நவசீனாவில் அவரின் தலைவர் மாவோ செய்தனவற்ரையே அவரால் அறிய முடியாமல் போய்விட்டதே (கலாச்சார புரட்சி, முன்னோக்கிய நகர்வு போன்றவற்றினால் சீனாவின் கணிசமான மக்கள் தொகை பட்டினியாலும் 20 – 30 மில்லியன் சீனர்கள் கொலைசெய்யப்பட்டும் இறந்தனரே அவருக்கு தெரியாமல் போனதேன்) ”காத்தார்” இறந்தது 1977இல் மாவோவின் கலாச்சாரப்புரட்சி ஆரம்பம் 1966 !

    கார்த்திகேசு மாஸ்ரரைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல. ஆனால் மேலே சொன்ன கருத்துகளை நோக்கும் போது பதில் தேடவேண்டியுள்லது.

    //.. அது அவரின் குறையல்ல. அவரின் வாழ்வுமுறையையே கற்றுதேர்ந்து அதன்படி நடப்போமானால் அவரை உயர்ந்த இடத்தில் வைப்பதற்கான வழியை எம்மால் அமைக்க முடியும்…///

    உங்களுக்குப் பிடித்தவ்ர்களை ‘பாவங்கழுவுதல்’ மூலம் எங்கே வேண்டும் என்றாலும் வைக்கலாம். அது உங்கள் உரிமை!

    பண்டிதர்,
    //..இங்கு சமூகநிந்தனையும் பிறக்கும்……//

    எந்தச் சமூகத்தின் நிந்தனை எனச் சொன்னால் நல்லது! அடிவாங்கும் தமிழசமூகமா அல்லது அடிபோடும் சிங்களச் சமூகமா நிந்திக்கப்படுகிறது?

    Reply
  • pandithar
    pandithar

    அது நிந்தனை அல்ல. சிந்தனை என்று வந்திருக்க வேண்டும். எழுத்துப்பிழை….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அது நிந்தனை அல்ல. சிந்தனை என்று வந்திருக்க வேண்டும். எழுத்துப்பிழை..//
    பரவாயில்லை. அப்படியே இருந்தாலும் எச்சமூகத்தின் சிந்தனை எனவாவது சொல்லுங்கள், அடிபோட்ட சமுகத்துக்கு சிந்தனையா அல்லது அடிவாங்கிய சமூகசிந்தனையா, அல்லது கர்ப்பிணிக்கு இடம்கொடாமல் ’தமிழன்’ இருப்பதைப்பார்த்து மனம்கொதித்து சமூக நீதிகோரிய ‘சிங்கள சமூக’ சிந்தனையா? சொன்னால் நல்லது!

    Reply
  • pandithar
    pandithar

    தமிழ் சமூகத்தில் ஒரு மேல் தட்டு சிந்தனை என்பது எப்போதுமே தனக்குரிய சிந்தனையோடுதான் இருந்து வருகிறது. கார்த்திகேசன் மாஸ்ரர் போன்றோரின் கருத்துக்களை தமிழ் சமூகம் முழுமையாக ஏற்றிருந்தால் நிலமை வேறு விதமாக போயிருக்கும். ரெலோ போராளிகளை தெருத்தெருவாக உயிரோடு கொழுத்தி எரித்த புலிகளை பாராட்டி கொக்க கோலா பரிமாறி கழியாட்டம் நடத்தியதன் விளைவு 23 வருடங்கள் கழிந்து முள்ளிவாய்க்காலில் பழி தீர்ந்திருக்கிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…கார்த்திகேசன் மாஸ்ரர் போன்றோரின் கருத்துக்களை தமிழ் சமூகம் முழுமையாக ஏற்றிருந்தால் நிலமை வேறு விதமாக போயிருக்கும்…//
    உங்களுக்கு யார் சொன்னது புலிகள் கேட்கவில்லை என? காத்தாரிடம் யாழ் இந்துக்கலூரியில் பயின்றவர்களில் சிலர் பொன்னம்மான், யோகி, சிவகுமாரன் போன்றவர்கள். காத்தாரின் குரு மாவோ சேதுங் முன்னின்று வழிநடத்தி செயற்படுத்திய கலாச்சார புரட்சியைப் (20-30 மில்லியன் சீனர்களின் பரலோகம்) பின்பற்றியே முள்ளிவாய்க்காலுக்கும் இவர்கள் வித்திட்டார்களோ தெரியவில்லை. புலிகளில் சிலர் ஏற்றுக்கொண்டதால் முள்ளிவாய்க்கால் நிகழ்ந்தது நீங்கள் என்னடாவென்றால் முழுத் தமிழ்சமூகமும் ஏற்றிருந்தால் நிலமை வேறு விதமாகப் போய் இருக்கும் என்கிறீர்கள். சொல்லப்போனால் ஒரு வகையில் சரிதான். நிலமை ‘வேறு விதமாக’ போய்த்தான் இருக்கும்!!

    //….தமிழ் சமூகத்தில் ஒரு மேல் தட்டு சிந்தனை என்பது எப்போதுமே தனக்குரிய சிந்தனையோடுதான் இருந்து வருகிறது….//
    அப்போ அந்த ‘மேல்தட்டு சிந்தனையை’ அடக்கத்தான் அனுராதபுரத்தில் சிங்களவன் அடிபோட்டான் என்கிறீர்களா? வாழ்க பண்டிதரின் சிந்தனை, அவர் வழிமொழியும் காத்தாரின் சிந்தனை! பாவம் காத்திகேசு மாஸ்ரர்

    பின்குறிப்பு: இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும் வழக்கறிஞர் திரு ரெங்கன் தேவராஜன் கூட காத்தாரிடம் யாழ் இந்துவில் மாணவனாக இருந்தவர்தான்.(பொன்னம்மான் – குகன் இன் வகுப்புத்தோழன் என நினைக்கிறேன்) அவரும் மாபெரும் சீனப்புரட்சியையும் அதன் அங்கமான கலாச்சாரப் புரட்சியைப்பற்றியும் என்ன சொல்கிறார் என நிகழ்வில் எடுத்துரைப்பார் என நினைக்கிறேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பண்டிதருக்கு ஒரு எச்சரிக்கை!. இங்கு வரும் சாந்தன் இத்தளத்தில் மூன்று வருடமாக பரீட்சயமானவர். இவர் தமிழினத்தின் பழைமைவாதப் போக்கின் சிந்தனைவாதி. வன்னிமக்களை முள்ளிவாய்கலில் கொண்டுபோய் பலிகொடுத்தில் கணிசமான பங்கு இவருக்கும் உண்டு.
    சீனாவைப் பற்றியும் கார்த்திகேயனைப் பற்றியும் கேள்வி எழுப்புகிறது சீனா வரலாறு தெரியாது என்பதல்ல. போனநுற்றாண்டின் ஆரம்பதில் பஞ்சம் பசி பட்டினி நோய் சாக்காடு என்று ஒருநாட்டை பார்க்க வேண்டுமென்றால் சீனாவைப் பாருங்கள் என்று சொன்னார்கள். மாவோவாதிகளின் புரட்சிக்கு பிறகே! சீனா சொந்தகாலில் எழுந்து நிற்கத் தொடங்கியது. தவறுகளும் தப்புகளும் இல்லாமல் வரலாறு இல்லை. இது எமக்கு தெரியும். இது சாந்தனுக்கும் தெரியும். இதை சாந்தன் மறைக்கிறதும் சீண்டி விடுகிறதும் தனது சிங்களவெறி உணர்வை நியாயப்படுத்துவதற்கே! தனது சொந்த நாட்டு துரோகங்களுக்கு நியாயம் கற்பித்து கருத்துக்களை கயிறாக திரித்து மெய்யை பொய்யாக்க முயல்பவர்.

    காத்திகேயன் என்ற பொதுவுடைமைவாதியை சீனாவை இவர் ஏன் இழுக்கிறார் என்றால் தமிழ்மக்களின் பழமைவாதசிந்தனை புலியாகமாறி வால் அறுபட்டு முள்ளிவாய்காலில் பெற்றோல் கானையும் தொலைத்து சயினைட்டையும் கழற்றி எறிந்து புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்தையும் ஆயுதமாக மேற்குலதிற்கு தானம் வழங்கிவிட்டு மறைந்துபோன தேசியத்தலைவரின் துக்கம் சாந்தனின் தொண்டையை இன்னமும் அடைத்துக் கொண்டிருக்கிறது. இவர் இதிலிருந்து மீளநீண்ட காலம் எடுக்கும். சிலவேளை ஒருபோதும் மீளவும் மாட்டார். இவர் போன்றோர்பற்றி அவதானமாக இருப்பது பண்டிதருக்கு அவசியமானது.

    Reply
  • nantha
    nantha

    புலிகளுக்கும் மாவோ சிந்தனைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையே?

    “மக்களை அணி திரட்ட வேண்டும்” என்ற மாவோவின் கருத்தை ஈழநாசகாரிகள் பின்பற்றியதாக எந்த தகவலும் இல்லை!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…பண்டிதருக்கு ஒரு எச்சரிக்கை!. இங்கு வரும் சாந்தன் இத்தளத்தில் மூன்று வருடமாக பரீட்சயமானவர்…/
    நல்ல ‘எச்சரிக்கை’ பரவாயில்லை எச்சரிப்பது உங்கள் உரிமை. அனால் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது உங்கள் கடமை என்பதனையும் மறக்க வேண்டாம்.

    //..“மக்களை அணி திரட்ட வேண்டும்” என்ற மாவோவின் கருத்தை ஈழநாசகாரிகள் பின்பற்றியதாக எந்த தகவலும் இல்லை!…//
    அவ்வாறு ‘அணி திரட்டப்பட்ட’ 20- 30 மில்லியன் மக்கள் ஏன் இறந்தார்கள் என ‘பின்பற்றியவர்கள்’ சொல்லலாம் அல்லவா?

    எனக்கு என்ன பட்டத்தையும் நீங்கள் அளிக்கலாம் (பழமைவாதி, யாழ்மையவாதி, ஆணாதிக்கவாதி, ஏகாதிபத்தியவாதி, முதலாளித்துவவாதி, இனவாதி, புலிவாதி என இன்னோரன்ன பட்டங்கள் இணையத்தில் வழங்கிவிட்டனர்) ஆனால் என்கேள்விகள் இன்னும் கேள்விகளாக இருக்கின்றன.
    சந்திரன் ராஜா வேற எச்சரிக்கை விட்டு பண்டிதரின் பதில்களைத் தடுக்கிறார்.

    Reply
  • nantha
    nantha

    20-30 மில்லியன்களா? அமெரிக்காவின் பிரச்சாரத்தில் பத்திரிகைகளில் வந்த கொல்லப்பட்ட வியட் கொங் ஒரு கட்டத்தில் வியட்னாமின் சனத் தொகையை விட அதிகமாக இருந்தது.

    அமெரிக்க பிரச்சாரங்களை எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இன்னொரு விடயம் கார்த்திகேசு மாஸ்ரரிடம் கேட்கவேண்டும். 1959 இல் ஏன் திபெத் என்கின்ற பெளத்த நாட்டை ஆக்கிரமித்த மாவோவின் கொள்கைகளுடன் ஒத்துப்போனார் என்று. திபெத்தியர்களை சமூகசிந்தனைக்கு வழிவகுத்தாரா? அல்லது இதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியப் பிரச்சாரமோ?

    Reply
  • nantha
    nantha

    திபேத்தில் லாமாக்களுக்குக் கீழ் “படிப்பறிவு” இல்லாமல் இருந்த மக்கள் இன்று பல்கலைக் கழகம், ஆஸ்பத்திரிகள் என்ற வசதிகளுடன் வாழ்கிறார்கள்.

    ஆனால் லாமாக்களை அமெரிக்கா தூக்கித் திரியும் செயல்களைப் பார்க்கும் போது லாமாக்கள் அமெரிக்கர்களுடன் சீனத்துக்கு எதிராக செயல் பட்டார்கள் என்றே எண்ணலாம்!

    Reply