பாராளு மன்றத்தில் அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் விவாதம் நடைபெற்ற வேளையிலே எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் காதர், உபேக்சா சுவர்ணமாலி, மனுஷா நாணயக்கார, ஏல் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் நில்வலா விஜயசிங்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவர்கள் அரசிற்கு 18 ஆவது அரசயல்யாப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரம் தமது கட்சிகளில் இருந்து ஆதரவளிப்பதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.