வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், இரணுவம் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முன் மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்கள் வசித்த காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும அவர்கள் பாம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர். இதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கொழும்பில் இந்தியத்தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாமளுமன்ற உறுப்பினர்களின் குழ இவ்விடயங்கள் குறித்து நிரபமா ராவிடம் தெளிவு படுத்தியது.
வன்னியில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதி முகாம்களிலும், இடைத்தங்கள் முகாம்களிலும் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர், திருமுறிகண்டி. விசுவமடு முதலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால தங்ககங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் இராணுவத் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன என கூட்டமைப்பினர் விளக்கினர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூட்டமைப்பினரிடம் நிருபமா ராவ் தெரிவித்ததாக கூட்டமைப்பின் நாமாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகள் குறித்த மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த நிருபமா ராவ் இவ்வீடுகளை அமைப்பதற்காக 20 ஆயிரம் இந்தியப் பணியாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
gothapaya
ஆமா, அங்கு தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, குடியேற்றங்கள் மும்முரமாக நடக்கின்றது, இந்த கூட்டமைப்பு சொல்லியா தேசம்நெற்றுக்கு தெரிய வேண்டும்??? ஆமா, எங்கே உந்த மாற்றுக்கருத்து தலைவர்கள்???? புலி அழிப்புடன் தமிழர்களின் உரிமைப்பிரட்சனை முடிந்து விட்டதா???