விசா இன்றி தொடர்ந்து லெபனானில் நிர்க்கதி நிலையில் உள்ள இலங்கை பணிப்பெண்களை அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்து ள்ளது.
விசா காலம் கடந்துவிட்ட நிலையில் லெபனானில் தங்கியுள்ள இலங்கை பணிப்பெண்களுக்கு மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக மூன்று மாத பொதுமன்னிப்பு காலத்தை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருந்தது.
அந்த மன்னிப்பின் கீழ் 100 பேர் அண்மையில் இலங்கையை வந்தடைந்தனர். இவர்களுக்கான விமான டிக்கட் மற்றும் இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களது வீடுகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்து கொடுத்திருந்தது.