புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 30 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இம்முறை ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் சுகயீனமுற்ற 30 பேரை விடுவிக்க நட வடிக்கை எடுத்திருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.
மோதல்களின் போது புலி உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் சரணடையுமாறு இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கமைய சரணடைந்த பல்வேறு வயதிற்குட்பட்டவர்கள் வெவ் வேறு புனர்வாழ்வுநிலையங்களின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் வயதெல்லை அடிப்படையில் இவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரையில் 3080 முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்குரிய விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் கடும் சுகயீனமுற்ற 30 பேரே அடுத்த கட்டமாக விடுவிக்கப்படவிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.
இதேவேளை, அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து சட்டபூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 59 குடும்பத்தாருக்கு சுய தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தோட்டப் பயிர்ச் செய்கைக்கான உபகரணங்கள், மரக்கன்றுகள், களை நாசினிகள் ஆகியனவும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு அமை ச்சுடன் இணைந்து விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.