இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதுவரை 4 ஆட்டம் முடிந்துள்ளன. அதன்படி நியூசிலாந்து 7 புள்ளியுடனும், இலங்கை 6 புள்ளியுடனும், இந்தியா 5 புள்ளியுடனும் உள்ளன.
5-வது “லீக்” ஆட்டம் தம்புள்ளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிடும்.
கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாத யுவராஜ்சிங் உடல் தகுதி பெற்றுள்ளார். அவர் இடம் பெறும் பட்சத்தில் வீரட் கோக்லி அல்லது ரோகித் சர்மா நீக்கப்படலாம்.