பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மீது அசிட் வீசப்பட்டதில் அந்தப் பெண் பலியாகியுள்ளதுடன் சிறுமியொருவரும் காயமடைந்த சம்பவமொன்று மீரிகம, பஹலகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, அசிட் வீச்சுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகள் எனத் தெரியவந்துள்ளது. வரக்காபொலையில் இருந்து மீரிகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி பெண்ணை இலக்கு வைத்து, அதே பஸ்ஸ¤க்குள் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவர் இந்த அசிட் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு அருகிலிருந்த அவருடைய மகளும் பாதிக்கப்பட்டநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசா ரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக வும் அவர் மேலும் கூறினார்.