அசினின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் அறிவிப்பு

Asin_Actressநடிகை அசினின் அண்மைய இலங்கை விஜயம் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டிருக்கின்ற போதிலும் அவரின் திரைப்படங்களைத் தமது உறுப்பினர்கள் பகிஷ்கரிக்கவுள்ளதாக வட அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனம் அசினின் சகல படங்களையும் பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் ஏனெனில் அவர் இலங்கைக்குச் சென்றதால் அவரின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் கூறியுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனத்தின் தலைவர் பழனி சுந்தரத்தின் அறிக்கையானது தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனமானது அமெரிக்காவிலுள்ள சுமார் 30 தமிழ்ச்சங்கங்களை ஒன்றாக இணைத்த கூட்டமைப்பாகும்.

கொழும்பில் இடம்பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட சங்கம் அறிக்கையொன்றை விடுத்திருந்தது. தமது தொழிற்துறையைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் இலங்கைக்குச் செல்லக்கூடாதென அந்த அமைப்புக் கூறியிருந்தது. பலர் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால், அசின் இலங்கைக்குச் சென்று கண்சிகிச்சை முகாமை நடத்தியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கமானது இந்த சர்ச்சைக்குரிய விடயத்திற்கு தீர்வுகாணும் பொறுப்பை கூட்டு கலந்தாலோசனைக் குழுவிடம் ஒப்படைத்திருந்தது.

நல்லெண்ண நோக்கத்துடனேயே தான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றதாக அசின் கூறியிருந்தார். நான் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர் சரத்குமாரிடம் பேசியிருந்தேன். கூட்டு கலந்தாலோசனைக் குழுவின் அறிவித்தல்களுக்கமைய செயற்படுவதை நான் விரும்பியிருந்தேன் என்று அசின் கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • thurai
    thurai

    கண்தெரியாதவர்களிற்கு கண்தெரிகின்றதே என்று சந்தோசப்பட இந்த அமைப்புகளிற்கு விருப்பமில்லை. பிரபாகரன் வழியில் நடந்த புலிகளின் பழிவாங்கும் குணம் இவர்களிடமுள்ளது. காரணம் தமிழின் பெயரால் தொடங்கிய உலக அமைப்புகள் பல புலிகளிற்கே சொந்தமானவை.

    இவர்களின் சிந்தனையற்ற, செயல்களே ஈழத்தமிழர்களிற்கு பேரழிவை ஏற்படுத்தியது. இதனை இன்னமும் இவர்கள் உணரவில்லை. தொடர்ந்து இவர்களின் போக்கினால் சிங்களவருடன் பகையை வளர்த்து தமிழர்களிற்கு வாங்கிக் கொடுத்தது போதாதென்று இந்தியாவிலும் இருப்போரிற்கு
    வழிகோலுகின்றார்கள். இவர்கள் வாழும்நாடுகளில் அந்த நாடுகளிற்கு எதிராக இலங்கையுடனான தொடர்புகளைத் துண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்தாலென்ன?

    துரை

    Reply
  • Varathan
    Varathan

    Who cares?

    Reply