வன்னியில் சொந்தக் காணிகளையுடைய வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்கள் காணிகளைப் பொறுப்பேற்பதற்காக வன்னிக்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தங்கள் காணிகளை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கூட தற்போது வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறுவதால் அங்கு சென்று தங்களின் காணிகளைப் பொறுப்பேற்பதற்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் வசிப்பவர்களின் காணி, வீடுகளை கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் தம்வசப்படுத்தியிருந்தனர். சில காணிகளில் விடுதலைப்பலிகளின் முகாம்கள், அலுவலகங்கள் என்பன அமைக்கபட்டிருந்தன. அவ்வாறான காணிகளை தற்போது படையினர் தம் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். சில காணிகளில் ‘இரரணுவத் தேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்ட பலகைகளையும் காணமுடிகின்றது. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கள் காணி, வீடுகளைப் பொறுப்பேற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.