வடமாகாண சபை அலுவலகங்கள் விரைவில் கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான அரசின் நிதி இன்னும் கிடைக்கப் பெறாமையால் இந்நடவடிக்கை தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி வடமாகாண சபையின் செயலாளர்களை நேற்று சந்தித்போது, இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சு அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம் மாற்றவது தொடர்பாக ஆராயும் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது, மாகாணசபை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைப்பது, கட்டடங்களைப் புனரமைப்பு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப்பணிகளுக்கு 200 தொடக்கம் 300 மில்லியன் ரூபா வரை தேவை என மாகாணசபை செயலாளர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அரசிடமிருந்த இந்நிதி கிடைக்கும் வரை மாகாணசபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் பணியை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.