வேலணை மருத்தவமாது செல்வி ச.தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தர்சிகாவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கைதடி ஊற்றல் மயானத்திற்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி இரவு தொடக்கம் இப்பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதே வேளை, நேற்றும் (21-07-2010) ஊர்காவற்றுறை நீதிமன்றில் தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பலரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகலில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தர்சிகாவின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்துள்ளதோடு, தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடைபெற தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.