நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில் அநுராதபுரம் மகாஇலுப்பளம என்ற இடத்திலேயே இக்கல்வீச்சு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், குறித்த பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வரும் பஸ்களுக்கு சிங்களப்பகுதிகளில் வைத்து சிலரால் கல்வீச்சு நடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவ்வாறு வரும் பஸ்களில் கூடுதலாக தமிழர்கள் மட்டுமே பயணித்தனர். போர் முடிவிற்கு வந்த பின் தற்போது தென்பகுதிகளிலிருந்து அதிகளவிலான சிங்களப் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தருகின்றனர். இந்நிலையில், இக்கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kumar
கல்வீச்சுகளுக்குக் காரணம் வெறும் சிங்கள இனவாதம் மாத்திரம் அல்ல. வடபகுதிகளுக்குச் செல்லும் சொகுசு பஸ்களின் அதீத வேகத்தால் அர்த்த சாமத்தில் கொதிப்படைந்த கிராமத்து வால்களின் விளையாட்டாகவும் இருக்கலாம். அல்லது பஸ் நடத்துநர்களுக்கிடையேயான எரிச்சல் பொறாமையாகவும் இருக்கலாம். இனவாதமே முழு வடிவமாகி அங்கிங்கெணாதபடி அரசொச்சும் இக்காலத்தில் வெறும் கல்வீச்சுகளால் தமிழ் மக்களுக்கு “தகவல்” அனுப்பத் தேவையில்லை.
Anonymous
The History is repeating like just before the 83 Riots.
Singalavar never ever going to treat Tamils equal to them
pandithar
கல் வீச்சு ஒரு விளையாட்டுத்தனம். அல்லது விசமத்தனம்.
அதற்கு இனவாதம் என்று முத்திரை குத்தி அழுது புலம்ப யாரும் விரும்ப வேண்டாம். இதையெல்லாம் ஒரு அதிரடி தகவலாக செய்தி வெளியிடுவது செய்தி பற்றாக்குறையால் தவிக்கும் ஊடக வியாபாரிகளின் சேட்டை. வரணியில் பாம்பு கடித்து 40 வயது யுவதி மரணம் என்றெல்லாம் இப்போது செய்திகள் தலைப்புச்செய்தியை அலங்கரிக்கின்றது. பாவம் ஊடக வியாபாரிகள். ஆகவேதான் கடத்தம்> கப்பம் என்றெல்லாம் சில நாட்களாக கதை விட்டார்கள்.
chandran.raja
வண்டிலில் டக்டரில் ஆளைவைத்து கல்லேற்ருவது அந்த காலம். ஆளை வைத்து கல்லெறிந்து கட்சி நடத்துவது இந்தக் காலம்.
rohan
“ஆகவேதான் கடத்தம்> கப்பம் என்றெல்லாம் சில நாட்களாக கதை விட்டார்கள்”. என சொல்லும் பண்டிதருக்கு ஊர்நிலைமைகள் தெரியாது என்று தெரிகிறது. அவரது குடும்பத்தில் யாருக்கும் இப்படி ஒருநிலை வராது இருப்பதாக.