ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது கிழமையை “டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த வார நாட்களில் துப்புரவுபடுத்தும் நடவடிக்கைகள் டெங்குத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாநாட்டின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தேசிய டெங்கு தடுப்பு திட்டத்தின் ஓரங்கமாக சுத்தப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மாதத்தின் முதலாவது, இரண்டாவது திங்கள் கிழமைகளிலும் மூன்றாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த வருடம் மாத்திரம் டெங்கு நோயால் 158 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் 21 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.