சரணடைந்துள்ள முன்னாள் போராளிகள் 12,000 பேருள் 7980 பேர் மட்டுமே தற்போது புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் 364 பேர் பரீட்சை முடிவடைந்ததும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார்.