வேலணை மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று (16-07-2010)பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழப்பாண உயர் நீதிமன்றினால் இன்று இவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி வேலணை மருத்தவமனையில் மருத்துவ மாதுவாகப் பணியாற்றிய செல்வி சரவணை தர்சிகாவின் மரணத்தில் தொடர்பு பட்டதான சந்தேகத்தில் இவ்வைத்தியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய செய்தி: மருத்துவமாதுவின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியருக்கு எற்பட்டுள்ள நோய் குறித்து தெளிவில்லையாம்!
மருத்துவமாது சரவணை தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகத்தில் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் செனவிரட்ன தற்போது யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன நோய் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்.சிறைச்சாலையில் இருந்தபோது. சிலரால் தான் தாக்கப்பட்டதாக முதலில் அவர் கூறியிருந்தார். பின் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர் கடந்த பதன்கிழமை இரவு 8.30 மணியளவில் யாழ்.மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தடுப்புக்காவலில் உள்ள குறிப்பிட்ட மருத்துவரான பிரியந்த செனவிரட்ன யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவரின் உடல் நிலைப்பாதிப்பு குறித்து எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா மருத்துவமனை வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான வைத்தியரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த கோரிக்கையை நீதவான் மறுத்துள்ளார். அவரை யாழ். சிறைச்சாலையில் விசேட பாதுகாப்புடன் எதிர்வரும் 21ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சாந்தன்
என்ன நோய் எனக்கண்டுபிடிப்பது ஒரு வகையில் இலகு ஒரு வகையில் கடினம். சிங்கள பேரினவாதம் தான் அந்நோய். ஆனால் ஸ்ரீலங்காவில் அவற்றை அடையாளம் காண்பது கொஞ்சம் கடினம் ஏனென்றால் சிங்கள அரச ஊழியர், ராணுவத்தினர், பொலிசார் மற்றும் வெள்ளைவான் வால்பிடிகள் எல்லோருக்கும் அது இருப்பதால் வேறுபடுத்துவது கடினம்.