இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்கள் கட்டம் கட்டமாக சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், அம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அரசாங்கத்துடன் அங்கம் வகிப்பவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் முதலானோர் அதிகம் முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடர்ந்த காடுகளாக இருந்த அப்பகுதிகள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் அமைக்கப்படுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. அப்பகுதிகளில் பல கட்டிடங்கள். குழாய் நீர் அமைப்பு என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் அந்நிலப்பரப்பு சிறந்த விவசாய நிலமாகவும் மக்கள் குடியிருக்கக்கூடிய பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் வேளையில், இந்நிலப்பரப்புக்கள் சிங்கள மக்களின் குடியேற்ற நிலமாக மாற்றப்படலாம் என்கிற தகவல்கள் முன்னரே வெளியாகியிருந்தன. இதேவேளை, அம்முகாம்களில் தங்கியிருந்த வன்னி மக்களில் சிலர் அப்பகுதிகளில் தங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டால் அங்கு நிரந்தரமாக தங்கவதற்கு விருப்பமான நிலையிலும் காணப்பட்டனர். ஆனால், தற்போது அரசாங்கத்தோடு தொடர்புடைய சிலர் சொந்த நிலமாக அதனை ஆக்கிரமிக்கும் நோக்கில் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Appu hammy
This means North will never come back to normal. does this government expect the Tamil people to be homeless forever? stupidity of this government will lead to another uprising by the Tamil people.