கொழும் பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ஸ துலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐ.நா. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தடுத்தனர். இதையடுத்து மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறெனினும் எவ்வளவு காலத்திற்கு ஐ.நா. ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவர் என்பது தெரியவில்லை.
இதேவேளை ஐ.நா. இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் நிய+யோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.நா. தனது கடுமையான ஆட்சேபனையை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
டெய்லி மிரர்
Appu hammy
A minister making such a statement brings disgrace for the govt, are you saying under your govt police are been bribed by UN. You must resign as a minister. This is the difference between west and Asia.
weerawansa’s JVP blood is thicker than water. the People who came with Wimal don’t know what the protest is for. They just came for liquor and packet of lunch.
Shame on the government for allowing this protest.
http://video.dailymirror.lk/videos/550/un-under-siege