இலங்கைக்கு சல்மான்கான்கள் வருவதால் கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றார்கள். வறுமையை ஒழிப்பதற்குப் பிச்சைக்காரர்களை ஒழித்துப் பயனில்லையென்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சட்டத்தின் ஆதிக்கத்தை அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். ஆனால், அண்மைய சம்பவங்கள் வேறுமாதிரியாகவுள்ளன. கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொங்கிறீட் கட்டைகளால் தாக்கிக் கொல்லப்படுகின்றனர். தற்போது கொழும்பில் கொங்கிறீட் கட்டைக் கொலைக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து சல்மான்கான் படம் தயாரிக்க வரும் போதுதான் இந்தப் பிச்சைக்காரர் கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பிச்சைக்காரர்கள் இன்று சுதந்திரமாக பிச்சையெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சல்மான்கான் வருவது பிரச்சினையல்ல. ஆனால், “பிச்சைக்கான்’கள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை.
பார்த்திபன்
இதைத்தான் மொட்டைத்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப் போடுவதென்று சொல்வதோ??
chandran.raja
பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கிந்திநெத்தி வருடத்தில் எத்தனை தடவை பத்திரிக்கை வாசிப்பவர் நாட்டுமக்களின் நிலைகளை கண்டறிபவர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சல்மான்கான் படப்பிடிப்பு நடைபெறப்போவதாக வெளிவந்த செய்திகளுக்கு முன்பே மர்மமான முறையில் கொல்லப்படுவதாக செய்திகள் வந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பிச்சைக்காரர்கள் தூங்கிகொண்டிருக்கும் போதே பாரிய கல்லைத்தூக்கி போட்டு கொன்றதாகவும் அவர்களின் பிச்சைஎடுத்த பணத்தை கொள்ளையடிப்பதற்கே நடந்தாகவும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைதி செய்தாகவும் வெளிவந்தது. இது நடைபெற்றது ஒருமாதத்திற்கு மேற்பட்டது.
சென்ற கிழமைகளில் வந்த செய்திகளில் ஒருசில பிச்சைக்காரர்கள் அதிஷ்ரலாப சீட்டுகள் விற்றும் பணத்தை தேடுபவர்கள். அதை களவாடுவதற்காக கொலைகள் நடப்பதாக செய்திகள் வந்தது. ஒருநாட்டில் பிச்சைஎடுத்து தெருப்பாதையில் படுத்துறங்க முடியவில்லையென்றால அந்தநாடு எவ்வளவு கசடுகளை உள்ளடிக்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
எதிர்கட்சிக்காரார்கள் பாராளமன்றத்திற்கு சென்று இப்படியான கோமளிக்கதைகளை கதைப்பதற்கு மக்கள் அனுப்பி வைக்கவில்லை. இப்படியான கதைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கதைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.
பிச்சைகாரன்- பிச்சைகாரனாக பிறந்தது முதல் இருந்ததில்லை. சமூகத்தின் வெறிகொண்ட ஆதாயஓட்டத்தால் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டவர்கள். நாட்டை வறுமைநிலையில் தள்ளிவிடுவதற்கு இலங்கையில் ஐக்கியதேசியகட்சி பாரிய பங்காற்றி இருக்கிறது.இதை புரிந்து கொள்வதற்கு நாட்டுமக்களில் கொஞ்சமாவது கருசரணை இருக்க வேண்டும். ஏகாதிபத்திய ஆதரவுகளுக்கு இந்த நற்சிந்தனை இருப்பது சந்தேகமே!.