இந்தியாவின் அழைப்பின் பேரில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறுவர் அடங்கிய குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு இந்தியா சென்றுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையிலான இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
மூன்று நாள் பயணமாக செல்லும் இக்குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இந்தியப் பிரதமரையும் சந்திக்கும் வாயப்பு கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அகிய விடயங்களுக்கே இச்சந்திப்பில் முதன்மை கவனம் செலுத்தப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது