தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளவத்தை கடற்கரை வீதிப் பகுதிகள் சோனையிடப்பட்டதோடு, காலி வீதியில் வானங்களும் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் சிறிது பதற்றமடைந்த போதிலும் இந்நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.