பெண்கள் வசமாகும் குடாநாட்டு நிர்வாகம்

jaffna.jpgயாழ். குடாநாட்டின் சிவில் நிர்வாகம் தற்போது மகளிர் வசமாகிவரும் நிலையில் யாழ்.அரச அதிபராக இன்று வியாழக்கிழமை திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்கவுள்ளார். குடாநாட்டின் பல பகுதிகளிலும் மிக முக்கிய பதவிகளில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அவர்களில் சிலரது விபரங்கள் வருமாறு;

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகரமேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீஷன், சங்காணை பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி, யாழ்ப்பாண கல்விப்பணிப்பாளர் திருமதி.கே.வேதநாயகம், யாழ்.பிராந்திய மாகாண ஆணையாளர் திருமதி எஸ். சிவலிங்கம், யாழ்.பிராந்திய உதவிப் பதிவாளர் திருமதி மகாராணி இராஜரத்தினம், புவிச்சரிதவியல் சுரங்கப்பணிகள் அகழ்வு பணிப்பாளர் எந்திரி கே.யோககௌரி, வலிகாமம் தெற்கு பிரதேசசபை செயலாளர் சுலோசனா முருகேசன், யாழ்ப்பாண சித்தமருத்துவத்துறை தலைவர் திருமதி சிவஞானமணி பஞ்சராசா என பெரும்பாலான சிவில் நிர்வாகப்பகுதிகளுக்கு பெண்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • SUDOKKU
    SUDOKKU

    வாழ்க பெண்ணினம்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பழைமைக்கும் புதுமைக்கும் ஆனபோராட்டம் காலங்காலமாக நடந்துவருகிறது. ஏன்? ஆண்டுக்கணக்கு மணிக்கணக்கு நிமிடக்கணக்கு வினாடிக்கணக்கு என்று குறுக்கியும் சொல்லமுடியும். ஐரோப்பா போன்றநாடுகளில் தொடர்ச்சியாக பல இலக்கியக்கூட்டங்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள்.இதில் சாதி ஒடுக்குமுறை பற்றியோ பெண்னியத்தை பற்றியோ கேள்வி எழுப்பாமல் கட்டுரை வாசிக்காமல் எந்த சந்திப்பும் நிகந்ததில்லை. இதுவரை இப்படியான சந்திப்புகள் காலம் கடந்தாவது முக்கியத்துவம் பெறுகிறது.பெண்னியத்திற்கு யாரும் முக்கியத்தவம் கொடுத்து பேணபடவேண்டியதில்லை. அவர்கள் திறமைகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள். ஆககுறைந்தது. உங்களுக்கு இருக்கிற உரிமைகளை அவர்களும் கோர அனுமதியளியுங்கள்.

    இங்கு ஒருகட்சியை இழுத்தோ ஒரு தலைவனை இழுத்தோ நான் புகழ்பாடவரவில்லை. ஆனால் யதார்த்தைக் கண்டு கொள்ளுங்கள். முப்பது ஆண்டு கால யுத்தத்தை நடத்தியவர்களும் மற்றெரு இனத்தையும் மதத்தையும் பழித்து நையாண்டி செய்பவர்கள் இன்னும் “தமிழ்தேசியகூட்டமைப்பு” என்ற போர்வையில் மக்கள்மத்தியில் குடையுடன் உலாவருகிறார்கள். இவர்களே! தமிழ்மக்களின் பழைமைவாத சின்னத்தின் குறியீடுகள். இந்த பழைவாத சின்னங்கள் மனிதநாகரீகத்தின் வெப்பத்தில் உருகிஓடுவது தவிர்க முடியாதது. அப்போது சாதி அடக்குமுறையின் மூலக்கூறுகள் எல்லாம் அழித்தொழிக்கப்படும். 2009 மே 19 திகதிக்கு பிறகு இதுவரை அற்பவெற்றிகளே!
    இனிவரப்போவது…இன்னும் பலமடங்கு உயர்ந்தது என நினைப்பதற்கு அர்த்தம் உண்டு.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    குடாநாட்டு நிர்வாகத்தில் பெண்களும் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறான நிலை முன்பு ஏன் இருக்கவில்லை. இப்போது பெண்களைப் பங்குபற்ற வைத்த சந்தர்ப்பங்கள் என்ன என்பது ஆராயப்பட வேண்டியது. இங்கே பெண்ணியம் தலித்தியம் சமத்துவம் என்றெல்லாம் கதைப்பது பொருந்தாது என நான் நினைக்கறேன்.இவ்வளவு பெண்களில் எத்தனை பேர் வேலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்களோ? யார் கண்டது.

    இந்தச் செய்தி வாசிக்கையில் எனக்கு வடக்கு கிழக்கில் விதவைகளான 40000க்கு மேற்பட்டவர்கள்தான் நினைவுக்கு வந்தது. அவர்கள் வேலைக்குப் போனால்தான் வாழலாம் அதற்காக இப்ப தமிழ்ச் சமூகத்தில் நல்ல மாற்றம் என நாம் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது.

    ஜரோப்பிய நாடுகளில் அரசியற் கூட்டங்கள் என்றால் பங்கு பற்றும் பெண்கள் தொகை பெரும்பாலும் ஒரு கை விரலுக்குள்ளேயே அடங்கும்.

    Reply
  • palli
    palli

    கந்தையாண்ணா நீங்க சொல்லுவதில் ஒரு மாற்றம்
    புலி தவிர்ந்த கூட்டத்தில், தேசிய தலையை காக்க(மக்களையல்ல) தெருத்தெருவாய் ஒப்பாரி வைத்த பெண்களை மறக்கலாமோ;

    Reply
  • aras
    aras

    வேலைகளில் பங்கெடுப்பது தான் பெண்விடுதலையா? இந்தப் பெண்கள் வேலை முடிந்து வீடு சென்றவுடன் குறைந்த பட்சம் அவர்களுக்கான உணவு தயாராக இருக்குமோ தெரியாது.

    லீலாவதி என்ற பெண்ணும் இந்த சமூகத்தில் தான் இருந்தார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சந்தர்பவாத அமைப்புகள் அவற்றின் தன்மைகாரணமாக தொழிலாளவர்கத்தின் முன்னணி தட்டினர் மீதே தமது கவனம் செலுத்துவதால் இளைஞர்கள் பெண்தொழிலாளி இருவரையும் புறக்கணித்து விடுகின்றனர். எவ்வாறெனிலும் முதலாளித்துவத்தின் நாற்றமெடுப்பு தனது பளுவான தாக்குதலை ஒரு கூலிஉழைப்பாளி என்றரீதியிலும் வீட்டுப்பெண் என்றமுறையிலும் பெண்மீது தொடுக்கிறது.
    நான்காம் அகிலத்தின் பகுதிகள் தொழிலாளவர்கத்தின் மோசமாக சுரண்டப்படும் தட்டினரிடையே ஆதரவுதளங்களைத் தேடவேண்டும்…..பெண் தொழிலாளர்களிடையே தேடவேண்டும். இங்கு அவர்கள் விசுவாசம் சுயநலமின்மை தியாகத்திற்கான தயார் நிலைக்கான வற்றாத களஞ்சியங்களைக் கண்டுகொள்ளலாம்.
    அதிகாரமும் சுயநலமும் வீழ்க!பெண் தொழிலாளர் பக்கம் திரும்பு!!
    இச்சுலோகங்கள் நான்காம் அகிலத்தின் பதாகையில் பொறிக்கப்பட்டுள்ளது.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    தெருத்தெருவாய் ஒப்பாரி வைத்த பெண்களை மறக்கலாமோ;/
    மறக்கக் கூடிய விடயமா. உண்டு உணணாவிரதமிருந்த பேகர் பரமேஸ்வரனுக்கு ஆதரவாக ரேண் வைத்து வந்து கத்திக் கொண்டிருந்தவர்களுக்கு ரேண் வைத்து சமைத்துக்கொண்டு வந்து கொடுத்த தாய்க் குலங்களை மறக்க முடியுமா.

    அதுசரி நான் அரசியல்க் கூட்டத்தைப் பற்றி எழுத பல்லி பிக்னிக் பக்கம் கூட்டிக் கொண்டு போறார்.

    Reply
  • palli
    palli

    //அதுசரி நான் அரசியல்க் கூட்டத்தைப் பற்றி எழுத பல்லி பிக்னிக் பக்கம் கூட்டிக் கொண்டு போறார்.//

    அரசியலா அது எங்கு உள்ளது,.??
    புலம்பெயர் தேசத்தில் இருந்து வன்னிக்குபோவது அரசியல் செய்யவா?? கந்தையா அண்ணா மகிந்தா பலரை வீட்டோட்டு மாப்பிள்ளையாக்கி விட்டார்; அதனால் உங்கள் ஆசைபடி பிக்கினிக் பற்றியே பேசலாம்;

    Reply