”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரிட்டன் பிரதித் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளனர்; நேற்று (June 28 2010) யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதித்தூதுவர் மார்டின் புட்டினிஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வேண்டுகோளை விடுத்தனர்.
”யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றபட்ட ஒரு லட்சம் வரையிலான மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள கொடிகாமம் இராமாவில் முகாமிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் மக்கள் முழுவதுமாக மீள்குடியேற்றப்படவில்லை.
வன்னியில் பரந்தளவு நிலப்பரப்புக்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அப்பகுதிகளில் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் நலன்களுக்கும் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது, ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இவ்வாறு செலவிடப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.”
இவ்வாறான விடயங்கள் கூட்டமைப்பினரால் விளக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
chandran.raja
பிரித்தானியருக்கும் இலங்கையருக்கும் நுhற்றாண்டு தொடர்புகள் பழக்க வழக்கங்கள் சமூகம் நீதியைபற்றிய சட்ட ஒழுங்குமுறைகள் நிறையவே இருக்கின்றன. சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும்.விழும். என்பதை கேட்டு வழிவந்தவர்கள். எங்களுக்கு சமூகப்புரட்சி கூட அங்கிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஏனெனில் தமிழ்மக்கள் மானிடயாதார்த்த வரலாற்றை ஸ்தூலமாக கண்டு கொள்ள முடியாதவாறு ஊனமுற்றவர்கள். பெரும்பான்மையை தமிழ்மக்களின் அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் கூட்டமைப்புபின் இந்த சந்திப்பு வாழையடிவாழையான நன்றிக்கடனே.