ஐ.நா.ஆலோசனை குழு நியமனத்துக்கு இலங்கை கண்டனம்

uno.jpgஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடு என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

30 வருடங்களுக்கு மேலாக இலங்கை பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வன்முறைகளும் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக அது விளங்கியது.

நீண்ட கால மற்றும் சிரமமான போராட்டத்தின் பின் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து அரசாங்கம் நாட்டை மீட்டெடுத்தது. தற்போது நாட்டையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் படிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை விசாரணை சட்ட விதிகளின் கீழ் நியமித்துள்ளார். இலங்கை சட்டத்தின் கீழ் அமைக்கப்படக் கூடிய ஆகக் கூடிய நியதிச் சட்ட ஆணைக்குழுவாக இது அமைகிறது. இந்த ஆணைக்குழுவானது தேசிய ஒற்றுமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.

இலங்கை மனித உரிமைகளை தொடர்ந்து ஊக்குவித்தும், பாதுகாத்தும் வந்துள்ளது. இதனை ஐ.நா. போன்ற முறையான அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க ப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடாகும்.

அத்துடன் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை க்கு எதிரான தரப்பினர் இதன்மூலம் முறையற்ற வகையில் பயனடையவும் இதனால் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அந்த விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்; இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இராணுவ செயற்பாடுகளின்போது பாரிய அளவிலான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறது என்று வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

இதேவேளை மேற்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டமை தேவையற்றது என ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை பலமான அரசியலமைப்புடன் கூடிய இறைமையுள்ள நாடாகும். அரசியலமைப்புப்படி நிறைவேற்று அதிகாரமும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் அதிகாரமும் கொண்ட ஜனநாயக நடைமுறை எமக்கு உள்ளது. அத்துடன் துடிப்புடன் இயங்கும் நீதித்துறையும் உள்ளது. நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளதுடன் அவர்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறுகிறார்.

மோதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராயும் அதி காரத்துடன் கூடிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளார். இந்நிலையில் அதற்கு சமாந்தரமாக ஒரு விசார ணையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த முற்படுவதானது இலங்கை அதன் தேசிய நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற் படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாக ஆரம்பித்துள்ள நடைமுறையை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகை யிலானதும் குறைத்து மதிப்பிடும் வகையிலானதுமாகும்.

அங்கத்துவ நாடொன்றின் விருப் பத்தை கவனத்திற்கொள்ளாது ஐக் கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் மூவர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார். தேவையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள இது வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறி யுள்ளதாக அரச தகவல் திணைக்கள அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

Show More
Leave a Reply to Ajith Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Ajith
    Ajith

    Tamils faced 60 years of terrorism from Sinhala state and it has to be stopped. The State is only represent Sinhala only interest. The international community helped Sri Lanka to end the war. It is the duty of international community to punish the Sinhala state for its part of terror and bring justice to tamils.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழரை வழிநடத்திய அரசியல்வாதிகழும், ஆயுதப்போராட்டமும் எங்கு கொண்டு வந்து தமிழரை இன்று நிறுத்தியுள்ளது. இந்த நிலமையில் இலங்கை அரசை எதிர்ப்பதற்கு எவ்வளவு பலத்துடன் ஈழ்த்தமிழர் உள்ளனர். ஈழத்தமிழரை தவறாக வழிநடத்திய தலைவர்களையும் பெரும் அழிவிற்குக் காரணமாக் இருந்தோரையும் கூட ஈழத்தமிழர்கள் வாயினால் கூட தண்டிக்க முடியாத நிலமையே உலகமெங்குமுள்ளது.

    விடுதலை போராட்டம், உருமைப்போராட்டம் என்பதெல்லாம் ஈழத்தமிழர்களிற்கும், சிங்கள மக்களிற்கும் அழிவினையே பரிசாகக் கொடுத்துச் சென்றுள்ளன.

    குற்ரம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் குற்ரம் செய்தவர்களையே கடவுளாகவும், தேசியத் தலைவர்களாகவும் போற்ருவோர், இராஜ்பக்சவை தண்டிக்கும்படி எவ்வாறு குரல் கொடுக்கின்றார்கள்? புலிகளின் ஆதரவாளர்கள் தாங்கள் செய்த கொடூரக் கொலைகள் யாவும் தமிழரின் விடுதலைகென்று வாதிடும்போது, சிங்கள அரசு செய்த குற்ரங்கள் சிங்கள மக்களிற்காகவே என்று வாதிடுவதில் என்ன தவறுண்டு?

    முதலில் புலிகள் தமிழ்மக்கள் மீது செய்த கொடூரங்களிற்கு காரணமாக இருந்தவர்களை தண்டியுங்கள். அத்ன் பின்னர் எல்லோருமாக அரசின் குற்ரஙகளிற்காக குரல்கொடுப்போம்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    Mr Thurai,
    Are you really talking of justice. Let tell us who started violence in Sri Lanka. When was LTTE violence started and when Sinhala violence started? Why don;t you give your voice first against Sinhala state? at least you should have raise the voice together against both violences but why first LTTE?
    This shows that you want to join Sinhala to eliminate tamils first then what?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…முதலில் புலிகள் தமிழ்மக்கள் மீது செய்த கொடூரங்களிற்கு காரணமாக இருந்தவர்களை தண்டியுங்கள். அத்ன் பின்னர் எல்லோருமாக அரசின் குற்ரஙகளிற்காக குரல்கொடுப்போம்….//

    இங்கே விசாரணையில் புலிகளின் தவறுகளும் உள்ளடக்கப்படும் எனச் சொன்னதை நீங்கள் அறியவில்லையா? இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்படித்தண்டிக்க ஒரு அமைப்பை ஏன் நீங்கள் ஆரம்பிக்கக்கூடாது? உங்கள் கருத்தெல்லாம் வெறுகருத்தாக தேசத்தில் எழுதப்படுவதுடன் நின்று விடுகிறது. இதுவரை இதற்காக எந்த அமைப்புடன் நீங்கள் இயங்கி இருக்கிறீர்கள் எனச் சொல்வீர்களா? எப்போதும் கேள்வியே கேட்கிறீர்கள், ஏதாவது விடயத்தில் உங்களின் செயற்பாடுகளைக்காட்டி இருக்கிறீர்களா? அவ்வாறு செய்திருந்தால் முதலில் எனது நன்றிகள்!

    Reply
  • thurai
    thurai

    தமிழர் மீது படையெடுத்ததும், தமிழர் சிங்களவ்ர் மீது படையெடுத்ததும் வரலாறு. இதுவே இன்றைய போரிற்கும் காரணம். இடையில் வந்த அந்நியர்களால் இரு இனமும் ஓர் நாட்டின் இனமாக்கப்பட்டது. ஆங்கிலம் அரச் அரச மொழி இரு இனமும் இதனை ஏற்ரே வாழ்ந்தனர்.

    ஆங்கிலேயரிற்கு சேவகம் செய்வதில் சிங்கள்வ்ரை விட ஈழ்த்தமிழரே முன்னணியில் நின்று செயற்பட்டனர். இதுவே மலையகத்திலும், மலேசியாவிலும் தமிழகத் தமிழர் கூலிகளாக இன்றும் வாழ்வதும், ஈழத்தமிழர் சமூகம் அரச நிர்வாகங்களிலும் பணியாற்றுவதுமாகும்.

    இந்த ஈழ்த்தமிழர்களிற்கு 100 வருடத்திற்கு முன் வராத தமிழர் மீதான் உணர்வு ஏன் சிங்களவரிடம் அரசாழுமுருமை கைமாறிய பின் வந்ததெனக் கூறமுடியுமா?

    பல சமூகப்பிரிவுகளைக் கொண்டதே ஈழத்தமிழர். இதில் மலையகமும், முஸ்லிம்கழும் மிகப்பெரிய பங்களிப்பிலுள்ளவ்ர்கள். இவர்களைப்பற்ரி
    தமிழரின் உருமை விடுதலை பற்ரிப் பேசுவோர் எவ்வளவு அக்கறையுடன் இருந்தனர், இருக்கின்றனர் எனக் கூறமுடியுமா?

    இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களிற்கு, தலைமைத்துவம் யாழ்குடாநாட்டினரென்பதும், அவ்ர்களில் குறித்த சமூகப்பிரிவினரே அத்ற்கு
    உருமையானவ்ர்களென்பதுமேயாகும். இதுவே தமிழரின் உருமை, அரசியல் என்பவற்ரை பயங்கரவாதமாக்கி இன்று தமிழரை அழித்ததென்பதை உலகில் அறிவுள்ளவர்கள் அறிந்திருப்பார்கள்.

    எங்கள் வீட்டிலுள்ள் ஒருவரை நாங்களே கதிரையில் அமரக்கூடாதென்று மறுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரன் எங்களை சரிசமனாக இருக்க விடுகின்றானில்லை என்று வீதியில் நின்று கூறுவது தான் தமிழரின் உருமைப் போராட்டமாகியது.

    புலிகளின் விடுதலைப் போரினால் உலகமுழுவதும் தமிழரைத் தமிழரே ஏமாற்ரி எத்தனை கோடி பணங்களையும் உயிர்களையும் அழித்துள்ளார்கள்.இதற்கும் சிங்கள அரசாகாரணம்?

    தமிழர்களிற்கு சிங்களவ்ரிடமிருந்து உருமை கேட்கு முன் , ஒருநேர உணவிற்கும்,உடைகளிற்கும், கஸ்டப்படுவோரையும்,தாய தந்தையற்ர அநாதைகளையும், விதவைகளையும் பற்ரி சிந்தியுங்கள்.

    இதனை மறுப்பவர்கள். 100 வருடத்திற்கு முன் ஆங்கிலேயருடன் சேர்ந்து பதவிக்கும், புகழிற்கும் நாட்டை விற்றுப் பிழைத்தவ்ர்களேயாகும்.

    துரை

    Reply
  • thurai
    thurai

    //எப்போதும் கேள்வியே கேட்கிறீர்கள், ஏதாவது விடயத்தில் உங்களின் செயற்பாடுகளைக்காட்டி இருக்கிறீர்களா? அவ்வாறு செய்திருந்தால் முதலில் எனது நன்றிகள்//சாந்தன்

    உலகில் அருளாமல் ஆயிரம் முட்டையிடும் ஆமையுமுண்டு.

    துரை

    Reply