நாளை மறுதினம் 25ம் திகதி பொஸ்ன் நோன்மதி தினத்தை முன்னிட்டு யாழ். நைனாதீவு நாகவிகரையில் அதனைக் கொண்டாடுவதற்காக இரண்டாயிரம் பௌத்த யாத்திரிகர்கள் நாளை 24ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளனர். பௌத்த சங்கம் ஒன்றின் ஏற்பாட்டில். நைனாதீவு நாகவிகரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காகவே இந்த யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர். இவர்கள் கிரிமலைக்கும் உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு, தங்குமிடம், உணவு வசதிகள் போன்றவற்றை அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, போர் முடிவிற்கு வந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதன் பின்னர் வடபகுதிக்கான சிங்களப் பொதுமக்களின் சுற்றுலா வருகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கந்தையா
நாட்டு நடப்புகளைப் பார்த்தால் ஜரோப்பாக் குளிருக்கை நிண்டு கஸ்ரப்படாமல் ஊருக்குப் போய் பெட்டிக்கடை போட்டாலே நல்லாய் உழைக்கலாம் போலிருக்கு
Nackeera
கந்தையா அண்ணை சொல்லுறதும் உண்மைதான். முக்கியமான குறிப்பொன்று நாகவிகாரை சிங்களப் பெளத்தர்களினுடையது அல்ல. தமிழ் பெளத்தர்களான நாகமன்னர்கள் காலத்தைச் சேர்ந்தது. இது தமிழர்களுக்குரிய பெளத்தவிகாரை. யாத்திரிகர்கள் வருகிறார்கள் என்றால் ஊருக்குக் காசு வருகிறது என்று தானே அர்த்தம். வரட்டும் வரட்டும்