”ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன்.” பேராசிரியர் என் சண்முகரட்னம் – நேர்காணல் : த ஜெயபாலன்

Shanmugaratnam Nயூன் 9 மற்றும் யூன் 11 – 15 வரை நோர்வேயில் இரு கருத்தரங்குகள் இடம்பெற்றது. பேராசிரியர் என் சண்முகரட்னம் இவ்விரு கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர் சண்முகரட்ணம் நோர்வேஜிய  வாழ்வியல் விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் (University of Life Sciences) சர்வதேசச் சூழல் மற்றும் அபிவிருத்தி கற்கைகள் (International Environment & Development Studies) ஆய்வுத்துறையின் தலைவர் (Head of Research). இவர் நோர்வேயில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பற்றியும் அதுதொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் தொடர்பாகவும் தொலைபேசியூடாக வழங்கிய நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.
 
தேசம்நெற்: யூன் 9 மற்றும் யூன் 11 முதல் 15 வரையான கருத்தரங்குகள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடவும்.
 
பேராசிரியர் சண்: நீங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு நிகழ்வுகளைப் பற்றி கேட்கின்றீர்கள். யூன் 9ல் போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும் (Post War Relief and Development) என்ற அடிப்படையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை Norwegian Centre for Peacebuilding (NOREF) என்ற அமைப்பு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நோர்வேயில் உள்ள வடக்கு கிழக்கின் மனிதத்துவ மற்றும் அபிவிருத்தியில் அக்கறையுடைய தமிழ் அமைப்புகளையும் தமிழ் ஆர்வலர்களையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
இதில் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களும் கலந்து கொண்டனர். எல்ரிரிஈக்கு ஆதரவான கருத்துடையவர்களும் அதற்கு முற்றிலும் எதிரான கருத்து உடையவர்களும் கலந்துகொண்டனர். இவற்றிலிருந்து மாறுப்பட்ட கருத்துடையவர்களும் அங்கு இருந்தனர். ஆயினும் கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது. இதில் தமிழர்கள் 25 பேரும் முஸ்லீம் ஒருவரும் கலந்துகொண்டனர்.
 
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய மற்றும் மனிதாபிமான மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இக்கலந்துரையாடலின் மையப்புள்ளியாக அமைந்தது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்பதும் ஆராயப்பட்டது. இக்கருத்தரங்கு மையப்புள்ளியில் இருந்து விலகாமல் செல்வதில் வெற்றியீட்டியதுடன்  இதில் கலந்துகொண்ட பலரும் ஆரோக்கியமான பங்களிப்பையும் செய்தனர் என நான் நினைக்கின்றேன்.
 
 யூன் 11 முதல் 15 வரை இடம்பெற்ற மாநாடு ‘சமாதானத்தில் நோர்வே’ – ‘Norway in Peace’ என்ற தலைப்பில் இடம்பெற்றது. விஞ்ஞானியாகப் பணிபுரிந்து மனித உரிமைகளை முன்னெடுத்த நான்சென் என்பவரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட Nansen Peace Centre – நான்சென் சமாதான மையம் என்ற அமைப்பினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  1938 ல் நான்சென் கல்வியியல் நிறுவனமாக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இந்த மாநாட்டில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நாடுகளின் தற்போதைய நிலை பற்றியும் அந்நாடுகளில் உள்ள முரண்பாடுகளின் எதிர்காலம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
 
தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகள் தொடர்பாகவும் உங்களின் மதிப்பீடு என்ன?
 
பேராசிரியர் சண்: இரு நிகழ்வுகளும் வேறு வேறு தளங்களில் நடைபெற்றது. யூன் 9 நிகழ்வு குறிப்பாக இலங்கையின் போருக்குப் பின்னான மனிதாபிமான உதவி வாழ்வியலைப் பலப்படுத்துவது  மற்றும் அபிவிருத்தி – இவற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாத்திரம் தொடர்பானது. இது இலங்கையின் வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

மற்றைய நிகழ்வு சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வேயின் சர்வதேசப் பங்களிப்பைப் பற்றியது. இது சர்வதேச ரீதியான நிகழ்வு. இலங்கையில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலும் தற்போது இலங்கை மீது சர்வதேசப் பார்வை திரும்பியுள்ள நிலையில் இலங்கை விவகாரம்  அதில் ஒரு அம்சமாக அமைந்தது.
 
இரு நிகழ்வுகளுக்கும் நான் அழைக்கப்பட்டு இருந்தேன். முன்னைய நிகழ்வின் ஒரு பிரிவுக்கு நான் தலைவராகவும் பயிற்சிப் பட்டறையின் ஒரு பிரிவை முன்னெடுப்பதற்கும் அழைக்கப்பட்டு இருந்தேன்.
 
பின்னைய நிகழ்வில் பேச்சாளராக அழைக்கப்பட்டு இருந்தேன். ‘இலங்கையின் 5வது சமாதானச் செயற்பாடுகளுக்கு ஒரு மீள்விஜயமும் மத்தியஸ்தராக நோர்வேயின் பாத்திரமும்’ – ‘Revisiting Sri Lanka’s Fifth Peace Process and Norway’s Role as Mediator/Facilitator’, என்ற தலைப்பில் எனது உரை அமைந்தது. எனது உரைக்கு முன்னதாக சமாதான ஆய்வு நிறுவனம் Peace Research Institute Oslo (PRIO) இன் இயக்குனர் உரையாற்றி இருந்தார். அவர் கடந்த கால சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் சமாதனச் செயன்முறை வடிவம்  Norway Model ஒரு பிரச்சினையானது என்ற கேள்வியை எழுப்பிச் சென்றார்.
 
அடுத்து உரையாற்றிய நான் நோர்வேயின் சமாதான நடவடிக்கைகளின் தோல்வியின் விளைவாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் எல்ரிரிஈ இன் தோல்வி பற்றியும் குறிப்பாக தற்போது சிலர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு “இலங்கையின் பயங்கரவாத அழிப்பு வடிவம்” ஒன்றை Sri lanka Model யை உருவாக்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். எனது உரையின் சாரம்சத்தை அருகில் உள்ள இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம்.
 
இக்கருத்தரங்கிற்கு நோர்வேயின் சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் காணப்பட்ட அறிவியல் விவாதம் என்னை வியப்படைய வைத்தது. இதில் பல பெண்களும் இளையவர்களும் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்தவர்கள் உலகின் பல்வேறு பாகங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகள் பற்றி மிகவும் அறிந்து கொண்டவர்களாக இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக விஞ்ஞானத்துறையில் கற்கின்ற மூன்று மாணவர்களும் மருத்துவப் பிரிவில் கற்கின்ற ஒரு மாணவியுமாக நான்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடனான உரையாடல் மாறுபட்டதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.
  
தேசம்நெற்: இந்நிகழ்வுகளின் பின்னணியில் எல்ரிரிஈ அல்லது அதன் முன்னணி அமைப்புகளின் தொடர்புகள் இருப்பதாக சில குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
 
பேராசிரியர் சண்: இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இவை சில தகவலறியாத கற்பனாவாதிகளின் கண்டுபிடிப்புகளே. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இவ்விரு நிகழ்வுகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. ஓன்று Norwegian Centre for Peacebuilding (NOREF) – நோரெப் இனால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. மற்றையது நான்சென் சமாதான மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டிலும் நான் உரையாற்றியது தான் குற்றம்சாட்டுபவர்களுக்கு இரண்டு நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக  ஒன்றாகத் தெரியக் காரணம். அதைவிட அவர்களுக்கு எதுவும் தெரியாது. 
 
நான்சென் சமாதான மையம் என்னை அழைத்ததற்குக் காரணம் அவர்கள் இலங்கை மற்றும் நாடுகள் தொடர்பாக எனது கல்வியியல் செயற்பாடுகள் பற்றி அறிந்திருந்தனர். நோர்வே, ஐரொப்பா, ஆசியா, ஆபிரிக்கா என உலகின் பல பாகங்களிலும் முரண்பாடுகளும் அபிவிருத்தியும் பற்றிப் பொதுவாகவும் சுடான், இலங்கை பற்றிக் குறிப்பாகவும் பல கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் நான் பேசியுள்ளேன். நான் இரு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன் என்பதற்காகவே சிலர் சம்பந்தமில்லாத இரு நிகழ்வுகளை ஒன்றாகப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.    
 
‘போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலுக்கு நோரெப் பல்வேறு அரசியல் பின்னணியை உடையவர்களையும் அழைத்து இருந்தது. அந்த நிகழ்வில் எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகளும் எல்ரிரிஈ உடன் முரண்பட்ட கருத்துடைய  அமைப்பினர் மற்றும் என் போன்ற தனிநபர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் இலங்கையில் செயற்படுகின்ற நோர்வேஜிய என்ஜிஓக்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர். நோர்வேஜிய வெளிவிவகார அமைச்சில் இருந்தும் சிலர் பார்வையாளராகக் கலந்துகொண்டனர்.
 
மொத்தத்தில் இச்சந்திப்பு ஆரோக்கியமானதாகவே அமைந்தது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் விசேட பிரிதிநிதியாகக் கலந்துகொண்ட எரிக் சோல்ஹெய்ம் போருக்குப் பின்னான வடக்கு கிழக்கின் மீள்கட்டுமானத்திற்கு  நோர்வே உதவும் என்றும் அதேசமயம் மனித உரிமைகள் விடயத்தில் ஐ நா வின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் சோல்ஹெய்ம் தனது உரையின் முடிவில் வெளியேறிவிட்டார். 
 
‘சமாதானத்தில் நோர்வே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாடு உலகின் பல்வேறு பாகங்களிலும் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பற்றிய மீளாய்வாகவும் எதிர்காலத்தில் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாகவும் அமைந்தது. இதில் எல்ரிரிஈ இன் அல்லது அதன் முன்னணி அமைப்புகள் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதாக நான் அறியவில்லை. இங்கு அப்கானிஸ்தான், சறிஜேவோ, சேர்பியா மற்றும் முரண்பாடுள்ள பிரதேசங்களின் சூழ்நிலை, சமாதானத்தை ஏற்படுத்தும் அனுபவங்கள், நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கை என்ற விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. யூன் 12ல் நான் மாநாடு முடிவடைவதற்கு முன்னரேயே வேறு நிகழ்வு காரணமாக வெளியேற இருந்ததால் அதன் பின்னர் இடம்பெற்ற விடயங்களை அறிந்திருக்கவில்லை.    
 
தேசம்நெற்: யூன் 9 நிகழ்வுக்கு உங்களை அழைத்திருந்தது யார்? உங்களை நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் கந்தையா பஞ்சகுலசிங்கம் அழைத்ததாக தமிழரங்கம் இணையத்தில் தீவான் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதே கட்டுரையில் வஇச ஜெயபாலன், இசையமைப்பாளர் ரவிக்குமார், சுவடுகள் தம்பா, இளவாலை விஜேயேந்திரன் போன்ற உங்களுடைய நண்பர்கள் பற்றியும் அவர்கள் எல்ரிரிஈ க்கு விலைபோய்விட்டதாகவும் கட்டுரையாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
 
பேராசிரியர் சண்: தீவான் என்ற பெயரில் கட்டுரையை எழுதியவர் மிக மோசமான பொய்யான விடயங்களை எழுதி உள்ளார். நோர்வே ஈழத் தமிழர் பேரவையோ அல்லது பஞ்சகுலசிங்கம் கந்தையாவோ இந்நிகழ்வுக்கான அழைப்பிதழில் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நாங்கள் நோரெப் இனாலேயே அழைக்கப்பட்டு இருந்தோம். அந்த அமைப்பின் பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வாறான நிகழ்வுகளையும் சமாதானத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளையும் நோரெப் ஒழுங்கு செய்த வருகின்றது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்கர் ஒருவரினாலேயே தலைமை தாங்கப்படுகின்றது.
 
எழுந்தமானமான குற்றச்சாட்டை வைத்துள்ள தீவான்  எவ்வித ஆதாரங்களையும் வைக்கவில்லை. வைக்கவும் முடியாது. ஏனெனில் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அதில் சம்பந்தப்பட்டவருடன் தொடர்பு கொள்ளாமல் இதனை இணையம்  வெளியிட்டது அதன் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயம். தீவானுக்கோ இதனை வெளியிட்ட இணையத்திற்கோ அடிப்படை விதியான தகவல்களில் இருந்து உண்மையைத் தேடிக்கண்டு பிடிக்கும் உணர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதுவே அடிப்படையற்ற ஊடகவியலுக்கு பொதுவான உதாரணமாக உள்ளது. இது அம்பலப்படுத்தப்படுவதுடன் கண்டிக்கப்பட வேண்டும்.
 
தீவான் யூன் 9 கருத்தரங்கை நோரெப் ஏற்பாடு செய்வதற்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவை நோரெப் க்கு நிதி வழங்கியதாக மிகமோசமான ஆதாரமற்ற தகவலை வெளியிட்டுள்ளார். மிகவும் அறியப்பட்ட அமைப்புக்கு எதிராக மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு இது. வஇச ஜெயபாலன், ரவிக்குமார், இளவாலை விஜேயேந்திரன் ஆகியோர் யூன் 9 நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் – சமாதானத்தில் நோர்வே – மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை. தம்பா யூன் 9 கருத்தரங்கில் மட்டும் கலந்துகொண்டார்.
 
தேசம்நெற்: எல்ரிரிஈ அல்லது அதன் முன்னணி அமைப்புகள் இவற்றின் பின்னணியில் இல்லாத நிலையில் இந்த நிகழ்வுகள் அல்லது குறிப்பாக யூன் 9ல் இடம்பெற்ற நிகழ்வு நீங்கள் எல்ரிரிஈ உடன் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் நீங்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் என அறியப்படும் நெடியவனுடன் செயற்படுவதாகவும் வந்துள்ள குற்றச்சாட்டுக்கள்….. ?
 
பேராசிரியர் சண்: இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமான விசமத்தனமான குற்றச்சாட்டுக்கள். எல்ரிரிஈ இன் சர்வதேச உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் வேண்டப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவதாக எவ்வித ஆதரமும் இன்றிக் குற்றம்சாட்டுவது உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும். ஆதாரத்தை வைக்க வேண்டிய பொறுப்பு குற்றச்சாட்டை வைப்பவருக்கே உண்டு.
 
நான் நீண்டகாலமாக எல்ரிரிஈ மீது விமர்சனம் கொண்டவன். ஏல்ரிரிஈ இனுடைய இராணுவவாதத்தையும் குழுவாதத்தையும் விமர்சித்துள்ளேன். எல்ரிரிஈ முற்போக்கு அரசியலை முன்நிறுத்தவில்லை. அதன் விளைவுகள் மிக அழிவுகரமானது. அதனை இப்போது உலகம் கண்டுள்ளது. அதனுடைய குறும் தேசியவாதம் காரணமாக அதனால் சர்வதேச ரீதியாக முற்போக்கு சக்திகளையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சக்திகளையும் வென்றெடுக்கும் ஆற்றல் அற்றதாக இருந்தது.
 
மேலும் எல்ரிரிஈ தமிழீழம் என்று அமைக்கும் விடயத்திற்கும் நான் ஆதரவாளனல்ல. ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன். இதனை நான் மிக அண்மையாக கடந்த மாதம் ரான்ஸ்கறன்ட் இணையத்திலும் எழுதி இருந்தேன். தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கேள்வியில் நான் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளேன் என்பது எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அறிவார்கள்.
 
தேசம்நெற்: தமிழ்நெற் இணையத்திற்கும் உங்களுக்குமான உறவு என்ன?
 
பேராசிரியர் சண்: தமிழ்நெற்க்கும் எனக்கும் எவ்வித உறவும் கிடையாது. நான் தமிழ்நெற்க்கு பேட்டி கொடுத்ததாக தமிழரங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நான் அவ்வாறு எந்தப் பேட்டியையும் தமிழ்நெற் க்கு வழங்கவும் இல்லை, அவர்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. இது மீண்டும் நிராகரிப்பை அடிப்படையாகக்கொண்டு மற்றுமொரு பொய்மையும் அல்லது அழமான வன்மத்துடன் வேண்டுமென்றோ அல்லது இரண்டுமாக சேர்ந்து எழுதப்பட்டு உள்ளது.
 
தேசம்நெற்: அவ்வாறு எனில் நீங்கள் தமிழ்நெற் இல் கருத்து வெளியிட்டதாக பி இரயாகரன் தமிழரங்கத்தில் மூன்று அல்லது நான்கு கட்டுரைகளே எழுதி உள்ளார்?
 
பேராசிரியர் சண்: இரயாகரனுடைய அறியாமைக்கு நான் பதிலளிப்பது சற்றுக் கடினம். ‘சமாதானத்தில் நோர்வே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் முன்னரே குறிப்பிட்டது போல உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தேன். அதற்காக நான் தயாரித்த உரையின் ஒளித்திரைக் குறிப்புக்கள் (powerpoint presentation) மாநாட்டு குழுவினரால் வெளியிடப்பட்டும் உள்ளது. அதனை வைத்துக் கொண்டு தமிழ்நெற் ஒரு கட்டுரையை எழுதி யூன் 17ல் வெளியிட்டு இருந்தது. தமிழ்நெற் எனது ஒளித்திரைக் குறிப்புக்கள் இல் இருந்து சில பகுதிகளைத் தெரிவு செய்து கட்டுரை எழுதியுள்ளது. எனது ஒளித்திரைக் குறிப்புக்களைப் பார்ப்பவர்கள், நான் எல்ரிரிஈ மீதும் விமர்சனம் கொண்டுள்ளதை காணலாம். அதே கட்டுரையில் தமிழ்நெற் ‘Tamil Circles’ – ‘தமிழ் வட்டங்கள்’ இனுடைய கருத்துக்களையும்  சேர்த்துக் கொண்டுள்ளது.
 
தமிழ்நெற் கட்டுரையின் ஒரு பந்தியை மொழிபெயர்த்த இரயாகரன் ‘‘ ….. சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். ….. ’’ என்று நான் கூட்டிணைக்கும் ‘தமிழ் வட்டங்கள்’ கூறுவதாகக் கூறி என் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, தனிநபர் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
 
இரயாகரன் தனது கட்டுரையில் என் தரப்பில் இருந்து வந்ததாகக் கூறும் கருத்துக்கள் போன்று நான் ஓரிடத்திலும் எழுதவோ பேசவோ இல்லை. நான் கூறியதாக இரயாகரனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நெற்றில் ‘தமிழ் வட்டாரங்கள்’ (Tamil Circles – இது இரயாகரன் நடத்தும் இணையத்தைக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.) குறிப்பிட்டதாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தமிழ் வட்டங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இரயாகரன் என்னைத் தாக்கி உள்ளார். எனக்கு அந்த தமிழ் வட்டாரங்கள் யார் என்ன என்பது தெரியாது.

இரயாகரன் தமிழ்நெற் இல் இருந்த கட்டுரையை சரியாகப் விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டார் (மொழிப் பிரச்சினையாகவும் இருக்கலாம்?) அல்லது வேண்டுமென்றே அடிப்படையற்று, தனது  வாசகர்களைத் திசை திருப்புவதற்காக நான் ஒருபோதும் சொல்லாத எழுதாத கருத்துக்களை, எனது கருத்துக்களாக்க முயன்றிருக்கிறார்.
 
இராயாகரன் திறந்த மனதுடன் தமிழ்நெற் இல் உள்ள கட்டுரையை மீண்டும் ஒரு தடவை கவனமாக வாசிப்பாரேயானால் அவரால் அதனை விளங்கிக்கொள்ள முடியும். கருத்துக்களின் மூலத்தையும் விளங்கிக்கொள்வார். தமிழ்நெற் கட்டுரையையும் எனது ஒளித்திரைக் குறிப்புக்களையும் பார்ப்பவர்கள் (ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள்) தமிழ்நெற் கூறும் தமிழ் வட்டங்களின் கருத்துக்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
 
இராயாகரனுடைய சிறுபிள்ளைத்தனமான எழுத்துக்களுக்கும் மூன்றாம்தர விமர்சனங்களுக்கும் பதிலளிப்பது அர்தமற்றது. தகவலையும் தகவல் மூலத்தின் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டிய குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாது செயற்படுபவர்களை என்னவென்பது.
 
தமிழ்நெற், தமிழரங்கம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள் ஏற்படுத்திய குழப்பமும் சர்ச்சையும் பற்றி என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக்களையும் பதில்களையும் நீங்கள் பதிவு செய்கின்றீர்கள். அதனை நான் மதிக்கின்றேன். ஆனால் தீவானோ அல்லது இராயாகரனோ என்னையோ அல்லது அர்களுடைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மற்றவர்களையோ தொடர்புகொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை. இதிலிருந்து அவர்களுடைய நோக்கம் சேறடிப்பதே என்பது தெரிகின்றது. அவர்கள் இந்த வகையான  ஊடகத்துறையை வைத்துக் கொண்டு வெகுதூரம் செல்ல முடியாது. தமிழ் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதற்கு இது எவ்வகையிலும் பயன்தராது.
 
தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்த நோர்வே அரசின் நோக்கம் அல்லது மறைமுக நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
 
போராசிரியர் சண்: நான் முன்னமே குறிப்பிட்டது போல் இரு நிகழ்வுகளும் வோர்வேஜிய அரசால் ஏற்பாடு செய்யப்படவில்லை. இது இரு வேறு சட்ட ரீதியாகவும் அதற்கு வழங்கப்பட்ட ஆணைப்படியும் வேறுபட்ட அரசசார்பற்ற அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
 
நோர்வேஜிய அரசாங்கத்துக்கு மறைமுகமான நிகழ்ச்சிநிரல் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, ஓவ்வொரு அரசாங்கமும் தனக்கான வெளிப்படையான நிகழ்ச்சி நிரலையும் வெளித் தெரியாத நிகழ்ச்சிநிரலையும் கொண்டிருக்கும். எந்த ஒரு அரசாங்கத்தினதும் அரசியலை விமர்சன ரிதியாகப் பார்க்கின்ற சிந்தனை ஒருவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

என்னால் சொல்லக் கூடியது, நான் விரிந்த ஜனநாயகத் தளத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் கேள்விக்கு பேச்சுவார்த்தை, விவாதம் ஊடாக எவ்வாறு தீர்வுகாணலாம் என்பதிலேயே ஆர்வமாக உள்ளேன். மேலும் தாயகத்தில் சமூக, பொருளாதார பாதுகாப்பு, மக்களுடைய சுதந்திரம் – ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் (தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் மற்றும் ஏனையவர்கள்) தொடர்பாகவே எனது ஆர்வம் உள்ளது. இந்த வகையில் எங்களுடைய பணி ஐரோப்பாவில் உள்ள சம்பந்தப்பட்ட அரசுடன் அரசு சார்மற்ற முகவர்களுடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடவது.
  
தேசம்நெற்: இறுதியாக இன்றைய இலங்கை நிலைமைகள் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
 
பேராசிரியர் சண்: இலங்கையில் இன்னமும் போருக்குப் பின்னான சூழலையே (post war situation) காண்கின்றோம். இது முரண்பாட்டுக்கு பின்னான சூழலாக (post conflict situation) இல்லை. இவ்விரு சொல்லாடல்களுக்கு இடையேயும் பெரும் இடைவெளி உள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து உள்ளதே அல்லாமல் இலங்கையின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் ரீதியில் முடிவுக்கு வரவில்லை. இலங்கை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அதனுள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அதனுள் அடக்கிவிடலாம் என்ற போக்கில் செயற்படுகின்றது. இது மிகவும் ஆபத்தானது.

நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச ரீதியாகவும் பெருமளவிலான தமிழர்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். காணி குடியேற்றம் போன்ற அரசின் கொள்கைகள் தேசிய இனப்பிரச்சினை கேள்வியை வேறொரு தளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு நகர்த்தி உள்ளதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 30 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு இருந்த தேசிய இனப்பிரச்சினைக்கான கேள்வியின் நிலை இன்றில்லை. இது இன்னுமொரு நேர்காணலுக்கோ அல்லது கருத்தரங்கிற்கோ உரியவிடயம். நான் இப்போது அதற்குள் செல்ல விரும்பவில்லை.

தமிழ் பகுதிகளில் அப்பகுதி மக்களின் ஈடுபட்டுடன் ஜனநாயக ரீதியான அபிவிருத்தி அவசியம். அதேசமயம் ஜனநாயக ரீதியாக தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசு முன் வைக்க வேண்டும். இவையிரண்டும் நிகழும் பொழுதே இனங்களிடையேயான மீளுறவு ஏற்பட்டு நிரந்தர சமாதானம் சாத்தியமாகும்.

Show More
Leave a Reply to P.V.Sri Rangan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

35 Comments

  • sritharan
    sritharan

    சண்முகரட்னம் அவர்கள் ஒரு நீண்டகால அனுபவம் கொண்ட மாக்சியவாதி. அவரிடமிருந்து இலங்கைப் பிரச்சனை குறித்து குறிப்பாக ஜக்கியஇலங்கை- தமிழீழம் சம்பந்தமாக கருத்துக்கள் பெற்று பிரசுரம் செய்யும் தேசம் நெற் பணி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. முடியுமாயின் தயவு செய்து பின்வரும் விடயங்கள் தொடர்பாக அவரின் பதிலை பெற்று பிரசுரம் செய்யவும்.
    (1)தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறீர்களா?
    (2)அங்கீகரிக்கிறீர்களாயின் அதன் அடிப்படையில் தமிழீழம் பிரிவதை ஏன் மறுக்கிறீர்கள்?
    (3)தமிழீழம் ஏன் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு இல்லை என்று கருதுகிறீர்கள்?
    (4)இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் குறிப்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என என்ன அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    (5)ஜக்கிய இலங்கையில் தீர்வு காண்பதாயின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக எதனை முன்வைக்க விரும்புகிறீர்கள்?அதாவது மாவட்ட சபையா? அல்லது மாகாண சபையா? அல்லது மாநில சபையா?அல்லது பிரதேச சுயாட்சியா?அல்லது இவை எல்லாவற்றையும் விட வேறு ஏதாவதா?
    (6)இவ்வாறு எந்தவிதமான தீர்வையும் தருவதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை எனில் அதன் பின் எந்த வழியை நீங்கள் முன்மொழிவீர்கள்?

    Reply
  • Suban
    Suban

    திரு. சண்முகரட்ணம் அவர்களிடமிருந்து நாகரீகமாக பதிலளிக்கும் பண்பை இணைய எழுத்தாளர் பலரும் கற்றுக்கொள்ளவேண்டும். சிறீதரனின் ஆறாவது கேள்வியைத்தவிர மற்றையவற்றிற்கு திரு. சண் அவர்கள் பதிலளிப்பதன்மூலம் நல்லதொரு ஆரோக்கியமான விவாத்தை உருவாக்கலாம்.

    Reply
  • Kannan
    Kannan

    சீறிதரன் சொல்வதுபோல் சமுத்திரன் எனும் சண்முகரட்ணம் என்று நல்ல சித்தாந்த சாஸ்திர மாக்சிசவாதிதான். ஆனால் புலிகள் வலுப்பெற்றிருந்த காலங்களில் அவர்கள் பக்கம் சார்ந்து பேசியவராவர். ஒரு இடதுசாரி அமைப்பின் கீழ் எந்த இனமும் முரண்பாடுகளுடன் கூட சமாதானமாக வாழலாம் என்பதை நன்கு அறிந்த சண்முகரட்ணம் அவர்கள் புலிகளுக்கு முன்னணியில் இல்லாமல் பின்னணியில் பேசிவந்ததை அறிந்தபோது மனம் வருந்தியவர்களின் நானும் ஒருவன். காற்றின் பக்கம் சாய்ந்து கொள்ளும் அரசியலில் இவர் செய்தது பெரியவிடயம் இல்லைத்தான் இருந்தாலும் சித்தாந்தம் நம்பிக்கை என்பனவல்லவா ஆட்டம் கண்டு விடுகிறது.

    இரசியாவில் மேற்படிப்மை மேற்கொண்ட சமுத்திரன் தன்வாழ்க்கையை ஏன் வலதுசாரி நாடுகளில் மையம் கொள்ளப்பண்ணியுள்ளார். திருமணம் கூட முதலாளித்துவ அடிப்படையில் இயங்கும் யப்பானில் நடந்தது. சுயவிருப்பு குடும்பம் பிறைவேட் என்று குதப்புவது முட்டாள்தனமானது. அதிகமாக இடதுசாரத்துவதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர்கள் எல்லோரும் வலதுசாரித்துவ: முதலாளித்துவ நாடுகளிலேயே தான் வாழத்துடிக்கிறார்கள் ஏன்? உ.ம் சண் எனும் சண்முகரட்டணமும் ஒரு சாட்சி.

    Reply
  • Ajith
    Ajith

    Prof. Shunmugaratnam (a well educated professional) has responded very well to Mr. Jeyapalan’s purposely targetted questions. The questioner tried to establish that the two meetings Shun attended in Norway were organised by LTTE. Shun made it very clear the truth. As Suban pointed out thesamnet journalists should learn and behave civilised way in responding to comments or writing or publishing materials from various sources.
    The way Mr.Jeyapalan structured questions was shows his unprofessional behaviour.For example, I donot understand the the ultimate motive of the following questions.
    தேசம்நெற்: தமிழ்நெற் இணையத்திற்கும் உங்களுக்குமான உறவு என்ன?
    தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்த நோர்வே அரசின் நோக்கம் அல்லது மறைமுக நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

    Reply
  • கந்தையா
    கந்தையா

    கண்ணன் போன்றவர்கள்தான் புலிகளின் ஆதரவாளர்களும் மதியுரைஞர்களுமாவார்.
    கண்ணன் நீங்கள் எப்படி ஒருவரின் தனிப்பட்டவாழ்க்கை தெரிவு பற்றி இங்கே கரத்தாடல் செய்ய முடியும் வாழ்க்கை தெரிவு என்பது பல விதமானது மனைவி குழந்தைகள் உறவுகள் சம்பந்தப்பட்டது மற்றும்படி மாக்ஸீயவாதிகள் கம்யூனிஸ நாட்டில்தான் வாழவேண்டும் என்றால் நீங்கள் மாக்ஸீயத்தை தவறாகவே விளங்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதாகும்.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    //சமுத்திரன் எனும் சண்முகரட்ணம் என்று நல்ல சித்தாந்த சாஸ்திர மாக்சிசவாதிதான்//

    மார்க்சிசவாதி!! ஆகா அண்ணனுக்கு மார்க்சிசம் பற்றி தெரிந்திருக்கு 19 நூற்றாண்டையொட்டி…

    Reply
  • BC
    BC

    //Kannan -அதிகமாக இடதுசாரத்துவதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர்கள் எல்லோரும் வலதுசாரித்துவ முதலாளித்துவ நாடுகளிலேயே தான் வாழத்துடிக்கிறார்கள் ஏன்? //

    அவர்கள் யதார்த்ததிற்கு ஏற்ப வாழுகிறார்கள். எழுதுவதற்கு இடதுசாரத்துவம். வாழ்வதற்கு முதலாளித்துவம்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நண்பர் அஜித் ஒருவரை நேர்காணல் செய்யும் போது அந்த நேர்காணல் என்ன நோக்கத்தின் அடிப்படையில் இருக்கிறது என்பதை வைத்தே அதற்கேற்ப கேள்விகள் தொடுக்கப்படும் நேர்காணலின் நோக்கம் முதலாவது பந்தியிலேயே உள்ளது. //இவர் நோர்வேயில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பற்றியும் அதுதொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் தொடர்பாகவும் தொலைபேசியூடாக வழங்கிய நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.//

    கொஞ்சம் அசந்தால் நான் எழுதித்தருகிற கேள்விகளைத் தான் கேட்க வேண்டும் என்று சுப தமிழ்ச்செல்வன் பாணியில் சொல்வீர்கள் போல் உள்ளது.

    தமிழ்நெற்றில் வெளியான செய்தியை வைத்து தமிழரங்கத்தில் நான்கு அல்லது ஐந்து கட்டுரைகள் பேராசிரியர் சண்முகரட்ணத்தின் மீது தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டு எழுதப்பட்டு உள்ளது. பேராசிரியர் சண்முகரட்ணம் புலிகளுக்கு விலைபோய்விட்டதாகவும் நோர்வே கருத்தரங்கு புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற வகையிலுமே தமிழரங்க செய்திக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

    இதன் உண்மைநிலையை வெளிக்கொணரவே பேராசிரியர் சண்முகரட்ணத்தினுடைய நேர்காணல் வெளியிடப்பட்டது.

    நுனிப்புல் மேய்ந்துவிட்டு அவசரக் குடுக்கை போல் கருத்து எழுத முற்பட்டால் கேள்வியின் நோக்கம் மட்டுமல்ல எதுவுமே விளங்கிக்கொள்ள கஸ்டமாகத்தான் இருக்கும்.

    இந்த நேர்காணலுக்கு தமிழரங்கத்தில் இன்னும் நான்கு அல்லது 5 கட்டுரைகள் வர உள்ளது அதனையும் படியுங்கள் உங்களுக்கு முழுமையாக அனைத்தும் புரியும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //thesamnet journalists should learn and behave civilised way in responding to comments or writing or publishing materials from various sources.// அஜித்

    //தமிழ்நெற், தமிழரங்கம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள் ஏற்படுத்திய குழப்பமும் சர்ச்சையும் பற்றி என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக்களையும் பதில்களையும் நீங்கள் பதிவு செய்கின்றீர்கள். அதனை நான் மதிக்கின்றேன். // போராசிரியர் சண்

    Reply
  • ந.பத்மநாதன்
    ந.பத்மநாதன்

    வணக்கம்!
    நான் நோர்வேயில் நடந்த 9.ம் திகதி கலந்துரையாடலில் குறுகிய கால அழைப்பில் கலந்து கொண்டேன். கருத்தரங்கு முடிவுற்றதும் தமிழரங்கத்தினருக்கு அங்கு நடைபெற்ற விடயங்களை சொல்ல முயற்சித்தேன். அக்கறையுடன் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் விரும்பியிருந்தால் உண்மையில் என்ன நடந்தது என்று கூறியிருபேன். ஆனால் அவர்கள் வேறு யாரிடமோ இருந்து பெற்ற நிகழ்ச்சி நிரலையும் சில எமது நண்பர்கள் பெயரையும் இணைத்து, தமக்கு காழ்ப்புணர்ச்சி உடையவர்களையும் இணைத்து – தமிழ் நெற்றில் இல் வந்த வேறு கட்டுரைகளையும் இணைத்து-பின்பு நடந்த வேறு கலந்துரையாடலையும் இணைத்து, ஏதோ பொய்கள் எழுதியுள்ளார்கள். இது எனக்கு மிகவும் மனக் கவலையையும் தமிழரங்கத்தின் நேர்மை மீது கேள்வியை உண்டாக்கியது. கோப மிகுதியால் , தமிழரங்கத்திற்கு திட்டி ஒரு கடிதம் அனுப்பினேன்(கடுமையான வர்த்தைகள் தான்). அங்கு வந்திருந்தவர்கள் 2 பேர் மாத்திரமே NCET அமைப்பினர். அவரிடமும் அக்கூட்டதில் வைத்து , துரம்சோவில் (நோர்வே) அந்தப் பெண்ணை பயமுறுத்தியது யாரெனவும் கேட்டேன். வழமையான முறையில் அவர் அதைத் தெரியாது என்று சொன்னாலும் , அவரது முகம் மாறி விட்டது. அங்கு என்போன்றவர்களின் புலி எதிர்ப்புக் கருத்துகளும், மக்கள் சார்பான கருத்துக்களுமே மேலோங்கி இருந்தது. இலங்கைத் தமிழ் மக்களிற்கு சார்பான கருத்தரங்கமாகவே அதை நான் பார்க்கின்றேன். இது போண்ற பல கலந்துரையாடல்கள் தேவை என்பதே எனது கருத்துமாகும். இப்படியான கலந்துரையாடல்கள் தான் மக்களை எங்களுடன் ஒன்றிணைக்கும். வெறும் சேறு பூசலும், காழ்ப்புணர்ச்சியும் மக்களை விட்டு அன்னியப்படவே வைக்கும். கலந்துரையாடலுக்கு பேராசிரியர் சண்முகரத்தினத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியதே.
    இப்படிக்கு
    உண்மையுடன்
    ந.பத்மநாதன்

    Reply
  • George
    George

    பத்மநாதன் ஐயா தமிழரங்கத்திற்கு அனுப்பி பிரசுரிக்கப்படாத கடிதத்தை நீங்கள் தேசம்நெற் க்கு அனுப்பி வைக்கலாமே. தேசம்நெற் பதம்நாதனின் கடிதத்தை எடுத்துப் பிரசுரிக்க வேண்டும்.

    Reply
  • Kannan
    Kannan

    சிறிரங்கனைத்தவிர மற்ற எவருக்கும் மாக்சிசம் தெரியக்கூடாதோ? எந்த நூற்றாண்டில் மாக்சிசம் பற்றித் தெரியவேண்டும் என்று கூறுங்கள் அந்த நூற்றாண்டில் நானோ நீரோ உயிரோடிருந்தால் பார்க்கலாம். சண்முகரட்ணம் ரஸ்யாவில் படித்தாலும் பீக்கிங் மாக்சிஸ்ட் ஏன் மாவேசிஸ்டாகவும் இருக்கலாம்.

    கந்தையா- இடதுசாரிகள் இடதுசாரி நாடுகளில்தான் வாழவேண்டும் என்பது முக்கியமில்லைதான். இடதுசாரிக் கொள்கைகளைக் காதித்து சாமியாடுபவர்கள் எப்படி முற்றிலும் முரணான கொள்கை நடவடிக்கை அரசில் முறைகளைக் கொண்ட வலதுசாரி நாடுகளில் முழுமனத்துடன் தனிப்படவே முதலைச்சேர்த்து முதளையாக வாழமுடிகிறது என்பதான் எனது கேள்வி. தயவுசெய்து சன்னை இதற்குள் தொடர்பு படுத்தாதீர்கள்.

    Reply
  • உண்மையான தீவான்
    உண்மையான தீவான்

    தம்பி ஜெயபாலன்;
    பொது எதிரியை தாக்குவதற்காக நீரும் சண்முகரத்தினதாரும் கூட்டு சேர்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் !
    ஆனல் ராஜாவும், தீவான் என்ற நம்மவூர் பொடியனும் சொல்லுறதில சில நியாயம் இருக்கு தம்பி. அவங்கள் சொல்லுறது போல புலி காசு குடுத்த தென்று நான் நம்ப இல்ல. இதுக்கு பின்னுக்கு யார் இருக்கிறது என்னது அவங்க கேட்கிரான்கள். அவங்கள் கேட்கிற கேள்வி இவைகள் தான் :
    1. தமிழர்களை அழைத்து தமிழில் அரசியல் பட்டறையும், கருத்தரங்கும் நடத்தியதன் பின் உள்ள சக்தி யார்?
    2. நோர்வேஜியன் அரசா? வேறு யாராவது தன்ஆர்வ தொண்டு நிறுவனமா?
    3. அச் சக்திக்கு தமிழில் தமிழர்களை அழைத்து இன் நிகழ்வை நடத்த வேண்டிய தேவை என்ன?
    4. அச் சக்திக்கு இலங்கை அரசியலில் ஈடுபடுவதர்கான தேவை என்ன?
    5.அச் சக்தியின் இலங்கை சம்பதமான நிகழ்ச்சி நிரல் என்ன?
    இக்கேள்விக்கு மழுப்பாமல் சன்முகரத்தினதாரால் பதில் சொல்ல முடியுமா?
    முடிந்தால் பிரச்சினை தீர்ந்தது !

    Reply
  • Ajith
    Ajith

    நண்பர் அஜித் ஒருவரை நேர்காணல் செய்யும் போது அந்த நேர்காணல் என்ன நோக்கத்தின் அடிப்படையில் இருக்கிறது என்பதை வைத்தே அதற்கேற்ப கேள்விகள் தொடுக்கப்படும் நேர்காணலின் நோக்கம் முதலாவது பந்தியிலேயே உள்ளது

    இவர் நோர்வேயில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பற்றியும் அதுதொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் தொடர்பாகவும் தொலைபேசியூடாக வழங்கிய நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.//
    Dear Jeyapalan: Can you explain how the following questions related to your argument.
    தேசம்நெற்: தமிழ்நெற் இணையத்திற்கும் உங்களுக்குமான உறவு என்ன?
    தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்த நோர்வே அரசின் நோக்கம் அல்லது மறைமுக நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

    Jeyapalan:
    கொஞ்சம் அசந்தால் நான் எழுதித்தருகிற கேள்விகளைத் தான் கேட்க வேண்டும் என்று சுப தமிழ்ச்செல்வன் பாணியில் சொல்வீர்கள் போல் உள்ளது.

    What is the relationship to Supa Thamilchelvan and your sarcastic response. This where you find difference between an educated gentleman like Shun and you. Shun respected you as a journalist though your questions are to accuse him where as you behave like Kehaliya Rambukana or Gotapaya Rajapakse without any relavance . This shows your third class mentality and attitude where you cannot respect the comments against you and your web.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நீங்கள் உண்மையான தீவானா அல்லது அரைகுறைத் தீவானா என்பது எனது ஆர்வத்திற்கு அவசியமற்றது. தமிழரங்கத்தின் தாக்குதலுக்குக் காரணம் தாக்குதலின் நோக்கம் நோர்வே நோர்வேஜிய என்ஜிஓக்கள் பற்றிய உண்மையைக் கொண்டு வருவதல்ல. தமிழரங்கம் உண்மையை அறிய விரும்பியிருந்தால் அதற்கு கொஞ்சம் வீட்டுவேலை (ஹோம் வேர்க்) செய்திருந்தால் உண்மை அறியப்பட்டு இருக்கும். ஆனால் தமிழரங்கத்தின் நோக்கம் உண்மையை அறிவதல்ல.

    உங்களுடைய கேள்விகள் பேராசிரியரிடம் என்னால் கேட்கப்பட்டு அதற்கு அவர் நேரடியாகப் பதிலும் அளித்துள்ளார்.

    //1. தமிழர்களை அழைத்து தமிழில் அரசியல் பட்டறையும்இ கருத்தரங்கும் நடத்தியதன் பின் உள்ள சக்தி யார்?
    2. நோர்வேஜியன் அரசா? வேறு யாராவது தன்ஆர்வ தொண்டு நிறுவனமா?
    3. அச் சக்திக்கு தமிழில் தமிழர்களை அழைத்து இன் நிகழ்வை நடத்த வேண்டிய தேவை என்ன?
    4. அச் சக்திக்கு இலங்கை அரசியலில் ஈடுபடுவதர்கான தேவை என்ன?
    5.அச் சக்தியின் இலங்கை சம்பதமான நிகழ்ச்சி நிரல் என்ன?
    இக்கேள்விக்கு மழுப்பாமல் சன்முகரத்தினதாரால் பதில் சொல்ல முடியுமா?

    போராசிரியர் சண்: நான் முன்னமே குறிப்பிட்டது போல் இரு நிகழ்வுகளும் வோர்வேஜிய அரசால் ஏற்பாடு செய்யப்படவில்லை. இது இரு வேறு சட்ட ரீதியாகவும் அதற்கு வழங்கப்பட்ட ஆணைப்படியும் வேறுபட்ட அரசசார்பற்ற அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. ஓன்று நோரெப் இனால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. மற்றையது நான்சென் சமாதான மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நோர்வேஜிய அரசாங்கத்துக்கு மறைமுகமான நிகழ்ச்சிநிரல் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, ஓவ்வொரு அரசாங்கமும் தனக்கான வெளிப்படையான நிகழ்ச்சி நிரலையும் வெளித் தெரியாத நிகழ்ச்சிநிரலையும் கொண்டிருக்கும். எந்த ஒரு அரசாங்கத்தினதும் அரசியலை விமர்சன ரிதியாகப் பார்க்கின்ற சிந்தனை ஒருவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

    ._._._._._.
    சுவிஸில் இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழ் கட்சிகளையும் அழைத்து ஒரு மாநாடு இடம்பெற்றது. அதனை என்ன நோக்கத்திற்காக எப்படிக் கூட்டினார்கள் என்பதை ஆதாரங்குளுடன் நிறுவி இருந்தோம். ஆனால் தமிழரங்கத்தின் கட்டுரை வெறும் தனிநபர் காழ்ப்புணர்வுடன் கற்பனையாகவே எழுதப்பட்டு உள்ளது. முதலில் தகவல்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிய முற்பட வேண்டும். ஒருவரிடம் உள்ள காழ்ப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தேடுவது உண்மையை அறிய உதவாது.

    உண்மையான தீவான் அண்ணா தம்பி என்ற அழைத்தமைக்கு நன்றி.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நண்பர் அஜித்க்கு நான் எதற்கு இந்தக் கேள்வியைக் கேட்டு இருந்தேன் என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.
    //தேசம்நெற்: தமிழ்நெற் இணையத்திற்கும் உங்களுக்குமான உறவு என்ன?
    தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்த நோர்வே அரசின் நோக்கம் அல்லது மறைமுக நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?//

    இதே போன்ற கேள்விகளுக்கு பேராசிரியர் ஏன் பதிலளிக்கவில்லை என உங்களுடைய சிந்தனைக்கு முற்றிலும் எதிர்மாறான சிந்தனையுடைய உண்மையான தீவான் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்?
    //1. தமிழர்களை அழைத்து தமிழில் அரசியல் பட்டறையும்இ கருத்தரங்கும் நடத்தியதன் பின் உள்ள சக்தி யார்?
    2. நோர்வேஜியன் அரசா? வேறு யாராவது தன்ஆர்வ தொண்டு நிறுவனமா?
    3. அச் சக்திக்கு தமிழில் தமிழர்களை அழைத்து இன் நிகழ்வை நடத்த வேண்டிய தேவை என்ன?//

    தேசம்நெற் ஒரு பொதுத் தளம். அது அஜித் போன்ற சிந்தனை உடையவர்களுக்காக மட்டுமோ அல்லது உண்மையான தீவான் போன்ற சிந்தனை உடையவர்களுக்காக மட்டுமோ நடத்தப்படுவதில்லை.

    உண்மைகளை வெளிக்கொணருவதற்காக ஊடகவியல் விதிகளை மதித்து பரந்துபட்ட குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்காக நடாத்தப்படுகின்றது.

    அஜித் சு ப தமிழ்ச் செல்வன் ஹெகலிய ரம்புக்வெல கோதபாய ராஜபக்ச அனைவரும் அடிப்படையில் ஒரே மாதிரியானவர்கள். ஆனால் அவர்கள் பேசும் மொழியும் இருந்த இருக்கின்ற மொழியும் தான் வேறானது. அதனால் தான் இந்த யுத்தத்தின் இடையே எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் பிரபாகரன் ஒரு சிங்கள ராஜபக்ச என்றும் ராஜபக்ச ஒரு தமிழ் பிரபாகரன் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

    உங்களுடையது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கருத்தையும் மதிக்கின்றோம். அதனால் தான் நீங்கள் யார் என்று தெரியாது போனாலும் கருத்தை கருத்தாக மதித்து உங்களுடைய கருத்துக்களுக்கு பதில் தருகின்றேன். அதற்காக நீங்கள் சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்களை சோடித்து சேறடிக்க மற்றக் கன்னத்தையும் தருவதற்கு நான் புத்தர் யேசு காந்தியல்ல.

    பேராசிரியர் சண் கற்றறிந்த மதிப்பிற்குரியவர் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அஜித் ‘எடியுகேற்றற் ஜென்டில்மன்’ என்ற உங்களுடைய சிந்தனைமுறை இருக்கின்றதே அது மிகவும் ஆபத்தானது. இதுவே யாழ்மையவாதச் சிந்தனை. அந்தச் சிந்தனை தான் உங்களைப் போன்றவர்கள் தாயத்துச் சிறார்களை பள்ளிக்குச் செல்லவிடாமல் முள்ளிவாய்க்காலில் தள்ளியது. நீங்கள் யார் என்பது தெரியாவிட்டாலும் உங்களுடைய சிந்தனை அம்மணமாக வெளிப்படுகிறது.

    Reply
  • palli
    palli

    தீவான் அதென்ன உண்மையான தீவான்; விளக்கம் தரவும்;
    நாமெல்லாம் என்ன வட்டிக்கு பெயர் வாங்கியா இங்கு எழுதுகிறோம்;??

    Reply
  • Ajith
    Ajith

    ஆனால் அஜித் ‘எடியுகேற்றற் ஜென்டில்மன்’ என்ற உங்களுடைய சிந்தனைமுறை இருக்கின்றதே அது மிகவும் ஆபத்தானது.
    The sarcasting and biased journalism is much dangerous than my யாழ்மையவாதச் சிந்தனை. I dont deny that you are also eductaed one but it is your indecent behaviour that makes to judge you in the same category of Gotapaya.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தங்களுக்கு விருப்பமான படி எழுதுகின்ற ஊடகங்களை போற்றிப்பாடுவதும் தங்கள் மீது விமர்சனம் வைக்கின்ற ஊடகங்களை மூன்றாம்தர ஊடகம் என்பதும் அதன் ஊடகவியலாளர்களைத் துரோகிகள் என்பதும் சு ப தமிழ்ச் செல்வனுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் ஒன்றும் புதிய விடயம் அல்ல. அஜித் இந்தத் தன்மையுடனேயே நீங்களும் இருக்கின்றீர்கள். உங்களுடைய கருத்தை ஆதரிக்காவிட்டல் அது மூன்றாம்தர ஊடகம். நீங்கள் வைக்கும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வந்ததும் அதனை அப்படியே விட்டுவிட்டு வேறு குற்றச்சாட்டுக்களை வைப்பது. பின்னர் மூன்றாம்தர ஊடகம் என்பது.

    நண்பர் அஜித் நீங்கள் போட்டுக்கொள்ளும் கண்ணாடியின் வர்ணத்தில் தான் காட்சிகள் அமையும். காட்சிகள் ஏன் அந்த வர்ணத்தில் இருக்கின்றது என்று குற்றம்சாட்டுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. வர்ணமற்ற கண்ணாடி அணிந்து காட்சிகளை கருத்துக்களை தெளிவாக பார்க்க முற்படவும்.

    Reply
  • murukesan
    murukesan

    ஒருநபர் சில கருத்துக்களை தெரிவித்தால் முதலில் அந்த கருத்துக்கள் பற்றிய விமர்சனத்தை தெரிவிக்க வேண்டும். அதன்பின்னரே அந்த நபர் தான் தெரிவித்த கருத்துக்களுக்கு விசுவாசமானவரா என பார்க்கவேண்டும். இதுவே ஆரோக்கியமான விமர்சன அணுகுமுறையாகும். அதைவிடுத்து அவர் மாக்சியவாதியா? அவர் எங்கு எப்படி வாழ்கிறார்? என்றெல்லாம் தமக்கு தெரிந்த அறிவையெல்லாம் காட்டுவது நல்லதல்ல என்பதே என் கருத்தாகும்.

    இங்கு சண்முகரத்தினம் அவர்கள் பல கருத்துக்களை கூறியுள்ளார். அது பற்றி எதுவம் பேசாது அவர் நோர்வேயில் வாழ்வதை தவறாக ஒருவர் முன்வைக்கிறார். சண்முகரத்தினம் அவர்கள் ஒரு சிறந்த மாக்சியவாதியா என்பது குறித்து என்னால் சொல்லமுடியாது என்றாலும் ஒரு மாக்சியவாதி முதலாளித்துவ நாட்டில் வாழக்கூடாது என்ற கருத்து தவறானது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

    ஏனெனில் மாக்சியத்தை முன்வைத்த மாக்ஸ் எங்கெல்ஸ் போன்றோர் இறக்கும்வரை லண்டனில்தான் வாழ்ந்துள்ளனர். அதன் பின்னர் லெனின் புரட்சி வெல்லும்வரை வெளிநாட்டில்தான் வாழ்ந்துள்ளார். (சில காலங்கள் லண்டனிலும் வாழ்ந்துள்ளார்) அதன்பின் “சே” அவர்கள் கியூபா புரட்சியின் பின்னர் வேறு நாடுகளுக்கு சென்று இறக்கும்வரை போராடியுள்ளார. அதன்பின்னர் சண்முகதாசன் அவர்கள் தனது இறுதிக்காலத்தில் இங்கிலாந்தில்தான் வாழ்ந்துள்ளார். எனவே முதலாளித்துவ நாடுகளில் வாழ்ந்ததற்காக இவர்களை யாரும் மாக்சியவாதிகள் அல்ல என்று கூறுவதில்லை. அதலால் இதில் இருந்து உணர்ந்து கொள்ளக்கூடியது என்னவெனில் ஒருவர் எங்கு வாழ்கிறார் என்பதை வைத்து அல்ல மாறாக எப்படி வாழ்கிறார் என்பதைவைத்தே அதாவது புரட்சிக்காக வாழ்ந்தாரா என்பதை வைத்தே அவர் மாக்சியவாதியா என்பது கணிக்கப்படுகிறது. எனவே இங்கு சண்முகரத்தினம் அவர்கள் நோர்வேயில் வாழ்வது தவறல்ல மாறாக அவர் புரட்சிக்காக பங்களிக்கிறாரா என்பதே பார்க்கப்படல் வேண்டும்.

    மாக்சின் “மூலதனம்” புத்தகத்தை இரண்டுமுறை படித்து ஏற்றுக்கொள்பவனே உண்மையான மாக்சியவாதி என லெனின் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் மாவோ அவர்கள் மாக்சியத்தை படித்தால் மட்டும் போதாது அதற்காக உழைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்பவனே உண்மையான மாக்சியவாதி என்று கூறுகிறார். எனவே இன்று சண்முகரத்தினம் அவர்களைப் பார்த்து மாக்கியவாதி அல்ல என்று கூறுபவர்கள் முதலில் தங்களை தாங்களே இதற்கு பொருத்திப் பார்க்கட்டும்.

    Reply
  • thurai
    thurai

    என்றோ ஒருநாள் தமிழினம் என்றொரு இனம் ஓரினமாகத்தான் இருந்தது. இன்று தமிழ் மொழியைப் பேசினாலும் ஓரினமாகவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். உடைந்து, உடைந்து சிறு, சிறு துரும்புகளாக போய்க்கொண்டிருக்கின்றோம்.நம் முன்னுள்ள சமுதாயத்தைப் பாருங்கள். சாதிகளாகவும், சமயங்களாகவும் பிளவுபட்டிருந்த எஙக்ளின் நிலமை இன்று எவ்வாறுள்ளது.

    சேர, சோழ, பாண்டியர் தவறு விட்டார்கள் என்று அன்றும் இன்றும் பேசும் எம்க்குள் எத்தனை பிரிவுகள். இதற்கான காரணங்கள் என்ன? படித்தவர்கள், மற்ரவரிலும் பார்க்க அறிவிற் சிறந்தவர்கள் என்போர் தமிழரின் ஒற்ருமையை குலைத்தவர்கள யார் என்பதையும் அதற்கான காரணங்களையும் மக்கள் முன் கொண்டு வருவார்களா? அல்ல சிங்களவன் எமக்கு பகைவன், சிங்களவனுடன் சேர்பவர்கள் துரோகிகள். என்னும் துவேசத்தை வளர்த்து அழிவிற்கு வழிகோல்வார்களா?

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அவரவர்கள் தத்தமது புலமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புலமைகளில் சான்றிதழ் பெறுவதாக இருந்தால் தம்மை மாக்கிஸிவாதிகளாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது போலிருக்கிறது இக் காலகட்டத்தில். முப்பதில்லிருந்து ஐம்பது காலப்பகுதிகள் வரை தலைசிறந்த மாக்ஸியவாதிகளை இலங்கை பெற்றெடுத்தை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “வேக்கஸ்லீக்” வெளியிடும்
    பத்திரிகை மூலம் தான் புலம்பெயர்நாட்டில் முப்பதுவருடங்களுக்கு மேலாக வசிக்கும் தமிழ் இனத்தை சேர்ந்த நான் அறியக்கூடியதாக இருக்கிறது.
    இலங்கையில் மாக்ஸிவாதிகள் மாக்ஸியகட்சிகள் என்பதற்கு குறைவே இருந்ததில்லை. கடகம் கடகமாக கொட்டிக்கிடந்தது. ஆனால் அதை பொறிக்கி தின்பார் யாரும் இல்லை. ஆகக்குறைந்தது ஒருமாக்ஸியவாதி இருந்தால் கூடா இலங்கையில் எனது தாய்மண்ணில் முப்பதுவருடகால யுத்தத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

    முதாலிளித்துவத்தின் சூழ்ச்சிவலைகளில்லிருந்து எமது மக்களை பாதுகாத்திருக்க முடியும். இன்றைய நிலையில் மாக்ஸியம் என்றால் என்ன? ஒருநாட்டில் ஐக்கிய பட்டு வாழக்கூடிய பலஇனமக்களுக்கு துரோகமாக-பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதா? என்பதே!.
    மாக்ஸியம் சர்வதேச தொழிலாளிவர்கத்தின் ஐக்கியத்தையும் அவர்களின் ஒருமித்த ஒத்துழைப்பையும் கோருகிறது. இந்த ஒத்துழைப்பால் மட்டுமே சர்வதேச மூலதனத்தை தோற்கடிக்க முடியும் என்றும் பிரகடனப்படுத்துகிறது.
    றாயாகரன் ஏற்கனவே எம்மால் அறியப்பட்டவர். புலியும் பாசிசம். மகிந்தாராஜய பக்சாவும் பாசிசம் என இன்றவரை சொல்லி கொண்டிருப்பவர். இருநாட்டில் இரண்டும் பாசிசமாகயிருந்தால் இந்தநாட்டுமக்கள் யாரிடம் போய் அடைக்கலம் தேடுவது? பிரான்ஸ்சில் இருக்கும் றாயாகரனிடமா?
    றயாகரன் இலங்கையில்லுள்ள மக்களை மட்டுமல்ல பரீஸ்லுள்ள மக்களையும் தனது வரட்டுத்து தத்துவவாதத்தால் பகைத்துக் கொண்டவர். அவருக்கு ஒரு கூட்டம் இருக்குமென்றால் மத்தளஒலி கேட்டு மலைப்பாம்பு தையிலம் வாங்கும் கூட்டமாகவே இருக்கமுடியும். இவரடிக்கும் மாக்சியமத்தள ஒலியை கேட்பார் யாரும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். அப்படியிருந்தால் அவர்களையும் எதிர்கொள்ளுவோம்.

    பேராசியர் சமுத்திரம் என்கின்ற சண்முகரட்ணம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு-ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகரீதியில் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று முன்மொழிவார்ரானால் அவரை முற்போக்காளராகத் தான் அடையாளம் காணவேண்டியுள்ளது. இலங்கை மக்களின் ஐக்கியத்தை கோருபனாலேயே இலங்கை தொழிலாளி வர்கத்தையும் ஸ்தாபிக்கிற பொறுப்பையும் எதிர்பார்க்க முடியும்.

    ஒருகாலத்தில் ஒன்பதுமான பேரும் புலிகளாக தான் இருந்தார்கள். இன்றைய நிலை அதுவல்ல. புலிகளும் ஒன்றுபட்ட இலங்கைக்கா ஒத்துழைக்கலாம். றயாகரனின் குற்றச்சாட்டையும் மீறி.
    சிறுகுறிப்பு: றயாகரனின் கதைகளை ஒரு பொருட்டாக எடுத்து தேசம்நெற்றில் பிரசுரித்த தேசம்நெற்றிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இனியாவது முற்றுப்புள்ளி வையுங்கள். அவர் தன்னளவில் மாக்ஸியவாதிதான். அப்படியே இருந்து விட்டு போகட்டும்.

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடீ…..

    முப்பது வருட ‘மேற்குலக மாக்சிசம்’ இலங்கையில் யதார்த்த நடைமுறையில் இருந்ததில்லை! அன்பரே!..

    ” றயாகரன் இலங்கையில்லுள்ள மக்களை மட்டுமல்ல பரீஸ்லுள்ள மக்களையும் தனது வரட்டுத்து தத்துவவாதத்தால் பகைத்துக் கொண்டவர். அவருக்கு ஒரு கூட்டம் இருக்குமென்றால் மத்தளஒலி கேட்டு மலைப்பாம்பு தையிலம் வாங்கும் கூட்டமாகவே இருக்கமுடியும். இவரடிக்கும் மாக்சியமத்தள ஒலியை கேட்பார் யாரும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். அப்படியிருந்தால் அவர்களையும் எதிர்கொள்ளுவோம்.”

    நன்றி நண்பரே…

    உங்களின் ‘பகைத்துக்கொள்ளாத’ தத்துவப் போராட்டம் எங்கே வர்கப்போராட்டத்தை திறந்தது…??

    ‘சமுத்திரனின்’, ”இலங்கை யுத்தம் தொடர்பாக…” நடைமுறைரீதியான – இறுதி யுத்த நடைமுறை ரீதியான இவர்களின் அரசியற்கோரிக்கை மற்றும் – ”அடையாளத்தை” -பின்னூட்டக்காரனின் கருத்துப்படி – எப்படி எடுத்துக் கொள்வது??

    ‘சமுத்திரன்’ நோர்வேயில் இருந்தகாலத்தில் ….
    ”புரட்சிகர அசியல் முதன்மை பெற வேண்டடின் ” (நோர்வே வெயியீடு)

    இதுவே அவருக்கான….
    அவரே, தனக்காக எழுதிய ‘சுயவிமர்சனத்தின்’— ஒரு பகுதியாக காலத்தால் அழியாமல் பதிந்துமுள்ளது…..

    கடைசியாக…
    ” ஒருகாலத்தில் ஒன்பதுமான பேரும் புலிகளாக தான் இருந்தார்கள். இன்றைய நிலை அதுவல்ல. புலிகளும் ஒன்றுபட்ட இலங்கைக்கா ஒத்துழைக்கலாம். றயாகரனின் குற்றச்சாட்டையும் மீறி.”

    இதுவே chandran.raja on June 25, 2010 11:49 am இறுதிச் சாட்டையடி!!

    இதைத்தன் சொல்லுவதோ… ‘வர்க்க ஐக்கியம் என்று’ ….

    ப்பிரசன்னா-25 06 10

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // உங்களின் “பகைத்துக் கொள்ளாத ” தத்துவபோராட்டம் எங்கே வர்க்கப் போராட்டத்தை திறந்தது..??.// ப்பிரசன்னா…
    வர்க்கப் போராட்டத்தை நடத்துவது ஒரு தனிமனிதனின் செயல்பாடுகள் அல்ல. அது சமூக பொருளாதர உறவுகளில் ஏற்படும் ஈடையூறுகள் பின்னடைவுகளின் பிரதிபலிப்பு. இதற்கு தனியொரு மனிதன் பொறுப்பேற்க முடியாது. வர்க்க போராட்டத்திற்கு பொறுப்பு எடுக்கிற ஸ்தாபனத்தின் கடமை.கட்சியின் கடமை. இதில் சந்திரன்.ராஜா வின் பாத்திரம் மிகமிக அற்பமானது. துரும்பானது. இதன் அர்த்தம் எந்த சமூகத்தின் உறவுகளின் போக்கையும் ஒரு தனிமனிதனால் கட்டுப்படுத்தி விட முடியாது.

    உலக சமூகபொருளாதர வெடிப்புகளில் இருந்தே வர்க்கப்போராட்டம் விருத்தி கொள்ளும். வர்கப்போராட்டத்தை அபிவிருத்தி செய்வது ஒருசர்வதேச கட்சியாகத்தான் இருக்க முடியும்.இதனால் மட்டுமே! வாக்கப்போராட்டத்தை வெற்றிக்கிட்டு செல்ல முடியும். ஒரு வர்கப்போராட்டத்தை இலங்கை அரசியலிருந்து அணுகுவதும் தவறானதே! அது சர்வதேசியத்துடன் இணைக்கப்பட்டு ஒன்றாகக் கலந்து பிரிக்க முடியாதவாறு இருக்கிறது. இதில் இருந்தே இலங்கை வர்கப்போராட்டத்தை தீர்மானிக்க முடியும்.

    Reply
  • Suban
    Suban

    பேராசிரியர் சண்முகரத்தினம் போன்றவர்கள் ஒரு திறந்தவிவாதத்தில் பங்குகொள்ளமுடியாத அளவிற்கு தேசம்நெற் தளம் பலவீனமாக இருக்கிறது. தனிநபர் நோக்கத்தைச் சிதைக்கிற பின்னூட்டங்களே அதிகமாக வருகின்றன. ஒரு விவாத்தை நேராக நடத்துகிற பொறுப்பு அக்கறையுள்ளவர்களுக்கு மட்டுமே உண்டு. தயவு செய்து கவனத்தில் கொள்க.
    பேராசிரியர் சண்முகரத்தினம் திரு. சிறீதரனின் கேள்விகளுக்கு பதிலளப்பதன் மூலம் நல்ல கருத்துக்களத்தை உருவாக்கலாம். நீங்கள் பதில் சொல்லதேவையற்ற கேள்விளென கருதுபவைகளை தவிர்த்துப்போகவும் உங்களுக்கு உரிமையுண்டு.
    சிறீதரனின் கேள்விகள்..
    1)தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறீர்களா?
    (2)அங்கீகரிக்கிறீர்களாயின் அதன் அடிப்படையில் தமிழீழம் பிரிவதை ஏன் மறுக்கிறீர்கள்?
    (3)தமிழீழம் ஏன் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு இல்லை என்று கருதுகிறீர்கள்?
    (4)இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் குறிப்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என என்ன அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    (5)ஜக்கிய இலங்கையில் தீர்வு காண்பதாயின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக எதனை முன்வைக்க விரும்புகிறீர்கள்?அதாவது மாவட்ட சபையா? அல்லது மாகாண சபையா? அல்லது மாநில சபையா?அல்லது பிரதேச சுயாட்சியா?அல்லது இவை எல்லாவற்றையும் விட வேறு ஏதாவதா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அரசியல் கேள்விபதில் வந்தால் பின்னோட்டங்களும் பலதும் பத்துமாக தான் வரும். சிறீதரன் கேள்வி மட்டும் தான் பொன்னான கேள்வி மற்றவர்களின் கருத்து மண்னானவை பேராசியர் சண்முகரத்தினம் அதற்கு தான் பதில் சொல்ல வேண்டுமென்பதும் நோக்கத்தை சிதைக்கிறது என்பதும் அசட்டுதனமானது சுபன்.
    சிறீதரனின் கேள்வி உங்களுக்கு பொன்னாக இருந்தால் இன்னொருவருக்கு அசட்டுத்தனமாக இருக்கும் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    இது பொதுத்தளம். இலங்கை அரசியலைப் பற்றியே விவாதம் நடக்கிறது. இதை நீங்கள் தனிப்பட்ட உறவாகக் கருதினால் மூன்றுபேரும் தொலைபேசியூடாக உரையாடிக் கொள்ளுங்கள். அதை யாரும் சிதைக்கமாட்டார்கள்.

    Reply
  • Suban
    Suban

    மன்னிக்கவும். சந்திரன்ராஜா.

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    chandran.raja
    முக்கியமாக… ”ஒரு வர்கப்போராட்டத்தை இலங்கை அரசியலிருந்து அணுகுவதும் தவறானதே!”

    ”அது சர்வதேசியத்துடன் இணைக்கப்பட்டு ஒன்றாகக் கலந்து பிரிக்க முடியாதவாறு இருக்கிறது. இதில் இருந்தே இலங்கை வர்கப்போராட்டத்தை தீர்மானிக்க முடியும்.”
    (அடிக்கோடு என்னுடையது)

    இவ்வாறான கருத்தை சமுத்திரனே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது எனது கணிப்பு… இருக்கவும்,
    இந்தப் பின்னூட்டங்கள் சண்’னின் தலையங்கத்துக்கும் சொல்லவருகிற கருத்துக்குமாக இருக்கிறது…

    தலையங்கத்தைப் பொறுத்தவரை எல்லா இடதுசாரிகளும் பிவினையை விரும்பியதோ, ஆதரித்ததோ கிடையாது. இது ஒரு புதுவிசயமல்ல…
    அன்று சமுத்திரனால் இலங்கைத் தேசிய இனப் பிரச்சனை பற்றி, சிங்கள பெருந் தேசிய இனவாதம் – அதன் அடிப்படைகளும், மேலாதிக்கமும் என்னும் தலைப்புடன் ஒரு நுாலை எழுதியிருந்தார்.

    தேசிய இனப் பிரச்சனையை புதியஜனநாயகப் புரட்சியாக முன்னெடுத்த ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’யின் அரசியல் அறிக்கை, திட்டத்தை விமர்சனம் செய்த சமுத்திரன், ‘புரட்சிகர அரசியல் முதன்மை பெற’ என்ற விமர்சனத்துடன் அதை ஏற்றுக்கொண்டிருந்தார். இருப்பினும் சமுத்திரன் தொடர்ந்தும் பார்வையாளராகவே இருந்தார்… (ஒரு பத்திஜீவியாக?!)

    2006 ஆம் ஆண்டளவில் சமுத்திரன் போன்றவர்கள் புலிகளை தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டிருந்தனர். (எனக்குத் தெரிந்த அளவில்)முள்ளிவாக்காலின் இறுதி யுத்தத்தில் இவர்கள் மக்கள் தரப்பின் கோரிக்கையை ”மக்களைப் புலிகள் விடவேண்டும்” என்ற கோரிக்கையை சர்வதேசங்களும் முன்வைத்தபோதும்.. இவர்கள் புலிகளின் கோரிக்கைக்காக வீதிக்கு வந்தார்கள்..

    இது அவரவரின் அரசியற் பார்வை…

    ஆனால் நோர்வேயில் பல சுயாதீனமான குழுக்கள் கடந்த காலத்தில் பத்திரிகை, அரசியற் சந்திப்புக்கள், ஜனநாயகத்துக்கான குரல்… போன்ற காத்திரமான பங்களிப்பை முன்னெடுத்து வந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

    முள்ளிவாக்காலின் பின்..
    மேற்குலகின் ‘இறகுச் சூட்டை’ விரும்புவது முனைப்புப் பெற்று வருவது, வருத்தத்துக்குரியது. வெளிப்படையான விமர்சனமும், நிபந்தனையும் இல்லாத எந்தக் கூட்டும் பலவீனமானது. இருக்கவும் இறுதி யுத்தக் காலத்தில் புலம் பெயர்ந்த மக்களின் மேற்குலகு மீதான எதிர்பார்பை (எசமான் நேசத்தை) சொந்தப் பலமாக மாற்றாத எந்தப்போக்கும் சரியானதுமல்ல…

    நேர்வேயின் அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை பிரச்சனை தொடர்பாக தனித்த ஓர் தேசிய இனத்தை கவணத்தில் கொள்வதும், புலம் பெயர் சிங்கள மற்றும் முஸ்லீம், மலையக…. மக்களை விலத்திய செயற்பாடுகளையும், ”ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்” என்று கூறும் சமுத்திரன்: இங்கே எதைச் செய்துள்ளார்?

    அன்று சண்முகதாசனுடன் ஏற்பட்ட தத்துவ வேறுபாட்டுக்குக் கூட ‘இனவாதத்தை’ பயன்படுத்தியதை தோலுரித்துக்காட்டிய சத்திரனின் புத்தகக் கருத்துக்கள்: இன்று தலையங்கத்துக்கும் – நடைமுறைக்கும் இடையே ஏன் கேள்விகளை மட்டும் விட்டுவைக்கிறது?

    ” உள்நாட்டு யுத்தம் இடம்பெறும் போது பொதுமக்களின் அன்றாட வாழ்வு முற்றாகச் சீர்குலைக்கப்படுகிறது. அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பெறுதல் – குறிப்பாக மிகவும் அடிப்படையான உணவு, உடை, மருந்துகள் போன்றவை மிகவும் கடினமாகிறது. இந்த நிலையில் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் பல வடிவங்களைப் பெறுகின்றன. உதாரணமாக பாசிசம் வெற்றி கொண்ட நிலைகளிலெல்லாம் (இங்கு இத்தாலி, ஸ்பெயின், போன்ற நாடுகளையும் சமீப காலத்தில் பல மூன்றாம் உலக நாடுகளையும் மனதிற்கொள்ளலாம்)

    நடுத்தர சக்திகள் பாசிசத்தின் பக்கமே சென்றன. இந்த நடுத்தர சக்திகளே அதன் வெகுஜன அடிப்படையாகியது, அத்துடன் நம்பிக்கையிழந்த நிலையில் கீழ்மட்ட வர்க்கத்தினர் நியதிவாதத்துக்குப் பலியாகினார்கள். சமூகசக்திகளின் சமன்பாடு எதிர்ப் புரட்சிக்கு சாதகமாகியது. ஆரம்பகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னேறிய புரட்சி எதிர்ப் புரட்சியால் தோற்கடிக்கப்பட்டது. எனவே உள்நாட்டு யுத்தத்தின் விளைவு எப்படி அமையும் என்பதை ஆரம்பநிலைகளை வைத்துச் சொல்லுவது சுலபமில்லை. போதிய அளவு அரசியல் உணர்வும் ஸ்தாபனமாக்கலும் அடிப்படைத் தேவைகளின் ஆகக்குறைந்தளவு பூர்த்தியும் இல்லாத நிலையில் பரந்துபட்ட சமூகப் பிரிவுகள் குறிப்பாக நடுத்தர வர்கதஇதினர், சிறு உற்பத்தியாளர்கள் அடக்குமுறை போதாமை போன்றவற்றின் தாக்கத்தாலும், இயக்கங்கள் சிலவற்றின் தீவிரவாதத்தாலும், மக்களிடம் இருந்து பிரிந்து செயற்படும் இராணுவவாதப் போக்குக்களாலும் தெிர்ப் புரட்சியின் பக்கம், பாசிசத்தின் பக்கம் போய்விடும் அபாயம் எப்போதும் உண்டு. வரலாறு மீண்டும் ஒரு தடவை புரட்சிக்கு அதே சந்தர்ப்பத்தைக் கொடுப்பதில்லை என்பது பொது விதி….”

    நன்றி: – ‘புரட்சிகர அரசியல் முதன்மை பெற’ – சமுத்திரன் –

    இவ்வளவு தெளிவாகச் சொன்ன சமுத்திரன் நடைமுறையில் எங்கே போய் நின்றார்??

    ப்பிரசன்னா 26 06 10

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சுபன்! உங்கள் பெரும்தன்மைக்கு மதிப்பளிக்கிறேன். ஆங்கிலத்தில் கெளரவ வார்தையாக பயன் படுத்துவார்களே “யூவார் ஜென்டில்மென்” அது உங்களுக்குரியது தான். நன்றி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தோழர்! ப்பிரசன்னா நீங்கள் வெகுதூரம் போய்விட்டீர்கள் என்றே கருதுகிறேன். இது தான் உண்மை. எனக்கு பேராசியர் சண்முகரத்தினத்தை தெரியாது. ஆகக் குறைந்தது ஒரு கட்டுரையை கூடப்படித்தது கிடையாது. அப்படியிருக்கும் போது அவரைப்பற்றி எப்படி நான் மதிப்பீடுசெய்ய முடியும்?. எனக்கு தெரிந்தது தேசம்நெற்-சண்முகரத்தினத்தின் பேட்டி மட்டும் தான். அதில் இருந்து வந்தவையே எனது கருத்துக்கள்.

    புலிகளும்- நோர்வேயும் எப்பவும் எனது நுhறு வீத சந்தேகத்திற்கு உட்பட்டவை. (நோர்வே அரசைத்தான் சொல்லுகிறேன். நோர்வே மக்களை அல்ல) ஐக்கியபட்ட இலங்கைக்குள் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு பற்றியதே! (ஒன்றை சொன்னால் ஆச்சரியப்படாதீர்கள். தமிழ்மக்களுக்கு என்ன தீர்வு வேண்டுமென்று இன்றை வரைக்கும் எனக்கு தெரியாது) புலிகளுக்கு முந்திய காலத்தில் லஞ்சம் வாங்காத தமிழ்பொலீஸ்சையோ லஞ்சம் வாங்காத தமிழ் விதானையோ கொள்ளையடிக்காத தமிழ் ஓவிசியரையோ நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

    தமிழ்மக்களின் வறுமையைவிட சிங்களமக்களே கூடுதல் வறுமையில் வாடுவதாககருதுபவன் நான். ரோகன் விஜயவீராவின் புரட்சியால் சிங்களமக்கள் பட்ட ததுன்பத்தை நேரால் கண்டுகழித்தவன். வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த புரட்சியால் ஆட்டுக்கல்லில் அகப்பட்ட உழுந்து மாதிரி தமிழ்மக்கள் அரைபட்டு வெளிவந்தார்கள். இதற்கு பிறகும் புரட்சி வேண்டுமா?புரட்சி செய்யாமல் மக்கள் இருப்பதே புரட்சிகரமானது என்ற கொள்கையுடையவன். ஏன்னென்றால் உலகம் அந்தவிதத்தில் தான் புரட்சிக்கு அர்த்தம் கற்பித்து வைத்திருக்கிறார்கள். வரலாற்று விதி கொடுமையானதே! யாருக்கும் ஈவுஇரக்கம் காட்டுவதில்லை. மக்கள் கொடுமை வறுமை தாங்காது புரட்சி செய்யும் போது இன்றைய புரட்சிக் கதாநாயகர்கள் உறங்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

    விஷயம் இதுதான்.இலங்கையில் நடந்த யுத்தம் எம்மால் ஏற்படுத்திய யுத்தமே அனுபவித்தவனை விட அழிந்தவன் சிங்களத்திலும் தமிழ்மக்களிலும் அப்பாவி தொழிலாளி விவசாயி இராணுவ வீரர்களே!அத்துடன் இளைய தலைமுறைகளையும் பலிகொடுத்து விட்டோம். யுத்தத்தை முழுமையாக வெறுப்பதை விட வேறுவழியில்லை. மிஞ்சியிருப்பது பேச்சுவார்த்தை ஒன்று தானே! அதை இனி யார் செய்தால் தான் என்ன?.ஆயுதம் இல்லாமல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் பரவாய்யில்லை என்றுதான் திருப்திப்படவேணடியுள்ளது தற்போதைக்கு நாளைய உலகம்??

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    Almost all comments in this forum except a few deal with the main topic, purpose and content of Thesamnet’s interview with Prof Shanmugaratnam which is immensely regrettable. The purpose of Jeyabalan’s interview with him as I understand it is to discuss the circumstances surrounding the two seminars hosted by two different NGOs in Norway and the outcome of those seminars.

    I have had the opportunity to access his presentation made at the seminar which was held on 11 June 2010 at Nansen Peace Centre and find it refreshing and educational from a Tamil Speaking people’s perspective. The topic was “Revisiting Sri Lanka’s 5th Peace Process and Norway’s Role as Mediator/Facilitator” which is in the public domain for the benefit of many and available on the link below: http://www.umb.no/statisk/noragric/publications/shan_lectures/revisiting_sl_peaceproc_2010.pdf

    I would like to request Thesamnet web users to read his presentation and discuss the issues with him. I believe many would be delighted to join in the forum.

    Those who seriously contemplating becoming Generic Marxist Gurus should do well to read this power point presentation before launching into tirade of unnecessary abuses and personal attacks. The befitting words to describe those personal attacks are in football parlance “If you cannot play the ball, play the man”, a continuation of anti intellectualism from the past.

    A Tamil website which promotes Tamil nationalism has failed in its responsibility to fact check as to the veracity of its report and what exactly Prof Shan said or did not say. The failure to report the events objectively by Commission or Omission would be seen as dishonest journalism and above all disservice to the community which it claim to serve.

    My advice to those who itching to write please rub your hands on a rough surface first before pressing your fingers on the key board. Secondly please reread what you have just produced and sit on it for a while. This will make a lot of difference to the writers and the community.

    Those who believe that they have a Marx given responsibility to question each and every Tamil person’s private life are misguided and amounts to yellow journalism. It appears that the only purpose of yellow journalism (which includes sensationalism, distorted stories biased opinion,… presented as objective fact) practiced by website revolutionaries is to hide their own failings as fellow human beings. The objectives of the media are to inform, educate and entertain, contribute to growth of knowledge thus collective wisdom of the community, and the so called pseudo Marxists have failed on all count.

    Those who question Prof Shan’s integrity and his intellectual honesty should ask themselves whether in the past they have ever had any tendency to use violence against people who refused to comply with their command or allow them to rob local financial institutions. Even a minute vacillation between tendency to use violence and belief in non violence makes a lot of difference in the character and conduct of one’s purpose of life.

    Quoting any number of Marxist and Maoist versus alone would not give cover to their questionable ulterior motives in the past, present or future. Hiding behind worn out slogans, reciting Marxist mantra without understanding the perspective and finger pointing can be summarised as false consciousness of the mud slingers.

    One would never know the extent to which these websites revolutionaries derive pleasure out of perverted reporting. The only way to deny them the satisfaction is to ignore them, which does not mean the exclusion of constructive engagement or criticism.

    I take exception to a particular comment made by Kannan, which I consider as unwise, unwarranted, unnecessary and distasteful, a public scrutiny of Prof Shan’s private affairs. Let’s assume for the sake of an argument and an extension of Kannan’s logic, he is a follower of Mahatma Gandhi, then he should be marrying a women from Ram Rajiyam, If he is a Christian then he would be looking for women from kingdom of god, If he is a Muslim he would marry a women from caliphate. I am wondering if he was a Marxist where would he find a partner. For that matter where would a Maoist find his bride?

    Comment is free, but the facts are sacred
    “CP Scott wrote ‘A Hundred Years’ in 1921. The essay’s famous sentence ‘Comment is free, but facts are sacred’ has endured as the ultimate statement of values for a free press and continues to underpin the traditions of the Guardian newspaper today”- The Guardian, UK
    http://www.guardian.co.uk/commentisfree/2002/nov/29/1

    I hope many in this forum would agree with what C P Scott wrote many years ago.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    Kannan on June 23, 2010 1:38 pm “இரசியாவில் மேற்படிப்மை மேற்கொண்ட சமுத்திரன் தன்வாழ்க்கையை ஏன் வலதுசாரி நாடுகளில் மையம் கொள்ளப்பண்ணியுள்ளார்”

    As far as I know Prof Shan graduated from Predeniya University and he never studied in Russia.

    Now that may disqualify prof Shan from discussing “Left Politics” according to Kannan’s logic.

    I admire Kannan’s vivid immagination which many of us sadly do not possess.

    Reply
  • Chithraleha
    Chithraleha

    Following are the sentences written by N.Shanmugaratnam in Tamilweek soon after the murder of L.Ketheeswaran ( BY LTTE)

    “As I stood looking at the bespectacled face of the slain Kethesh lying in a coffin at Jayaratne funeral parlour, I could not help wondering why he accepted a high-ranking position at the government’s Peace Secretariat.”
    – N.Shanmugaratnam.

    This is the way of justifying the murder of Ketheeswaran by the LTTE ( Shanmugaratnam Style)

    All are parts of comical scenes of the Post Prabhakaran. We have no shortage for clowns.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    Chithraleha’s comments are revealing, not for what it said but for what did not say. As I wrote in my first comment in this forum “Commission and Omission” are part of mudslinging, melodrama for those who have nothing better to contribute. This is nothing new and won’t stop here. S/he has quoted one sentence out of a two page article. Perhaps, s/he never bothered to read the whole article through to the end. Otherwise, s/he would have grasped the content and the message enshrined in the article. Lifting a sentence from two page article and then to say “This is the way of justifying the murder of Ketheeswaran by the LTTE ( Shanmugaratnam Style)” is presumptuous. Nowhere in his article Prof Shan justified the killing of Kethesh nor did he condone it.

    He was forthright in his condemnation. Chithraleha should do well to read the whole article and then comment on issues that s/he finds disagreeable. If one is capable of writing a one-liner article why bother with two full pages?

    Let me summarise what I gathered from reading the article:

    1.Prof Shan describes his friend’s qualities and grieves for his death. He say’s “But there was no question that the killing of Kethesh, an unarmed, unprotected dissident Tamil intellectual, must be condemned.” He continues “…..I found that I was not alone in wondering what might have led to his decision to accept a political appointment. Nor am I alone in condemning his killing as a dastardly act.” The message was loud and clear that he wished the “fiercely independent Tamil nationalist and an uncompromising advocate of human rights “Kathesh to live and serve the people.

    2.He calls for “an end to political assassinations and massacres of innocent civilians in Lanka.”

    3.He names the victims of assassinations, journalists and others included.

    4.What Prof Shan said about the gun culture and I quote “The Tamil community has borne the brunt of politically motivated killings. It remains in the grip of a gun culture unleashed by rival parties. The gun was originally meant to serve the struggle for the liberation of the Tamils. But soon it took command of politics and has often been used to settle sectarian disputes by military means. I am not the first to say this, nor is this the first time I say it. Tamils need to reinvent the culture of intellectual pluralism and open political debate.” If this was not a clear message then what is?

    5.On the pathetic situation of the Tamil speaking
    people this is what he had to say “However, internecine conflicts and the violent suppression of different ideas and perspectives on the national question and its resolution have done much harm to the Tamil cause and struggle. In the eyes of his killers Kethesh was a ‘traitor’ but the world at large saw him as an intellectual with a different approach to the grievances of the Tamil people. Those who regarded him as a traitor should have taken the trouble to argue their case politically and show why his approach was wrong”.

    6. In the final paragraph Prof Shan says “My condemnation of the killing of Kethesh and my opposition to the gun culture that plagues the Tamil community cannot obviously be construed as an endorsement of government policy or the ways in which the government’s Peace Secretariat conducts its affairs.”
    Chithraleha wrote “All are parts of comical scenes of the Post Prabhakaran. We have no shortage for clowns”. Honestly I did not understand what s/he is trying to communicate?
    For the benefit of many who did not have access to Prof Shan’s article I attach it here.
    Assassinations and Counter Assassinations
    m Assassinations and Counter Assassinations:
    Reflections on the killing of Kethesh Loganathan
    By Professor N. Shanmugaratnam
    As I stood looking at the bespectacled face of the slain Kethesh lying in a coffin at Jayaratne funeral parlour, I could not help wondering why he accepted a high-ranking position at the government’s Peace Secretariat. What might have motivated this fiercely independent Tamil nationalist and an uncompromising advocate of human rights to join a highly politicised agency of the government? Did he think he could influence the government to move away from the majoritarian unitarist mindset and towards a genuine power sharing arrangement to solve the national question? Did he think he could engage President Rajapakse in a reasoned dialogue and convince him to abandon the JVP and JHU and their supremacist, militarist line? I was not sure if I was asking myself the right questions. But there was no question that the killing of Kethesh, an unarmed, unprotected dissident Tamil intellectual, must be condemned. After talking with several friends and acquaintances of Kethesh in Colombo, I found that I was not alone in wondering what might have led to his decision to accept a political appointment. Nor am I alone in condemning his killing as a dastardly act.
    However, one must go beyond condemning this particular murder and call for an end to political assassinations and massacres of innocent civilians in Lanka. Assassins had taken the lives of several Tamil politicians and activists. Many journalists have paid the ultimate price for reporting the truth, for knowing the identity of the perpetrators of extra judicial killings, or for taking the ‘wrong’ side. Nimalarajan, Sinna Bala, Nadesan, Rohana Kumara, Taraki (D.Sivaram), Relangi Selvarajah, Sampath Lakmal … . this is not the beginning or the end of the list of the fallen journalists. Humanitarian workers have been massacred, Christian priests who provided shelter to the displaced have disappeared and it is feared that they might have been killed. The state’s air force has been bombing several areas in the North-East in the name of defending what the government calls sovereignty. But it has left scores of innocent citizens of the same state dead and many more displaced. Some statements from the Peace Secretariat in the days of the Mawil Aaru conflict and after made one wonder if they were emanating from a ‘war secretariat’. How did Kethesh, the impassioned advocate of engagement and peaceful means, see his role in such an environment? I do not know the answer. Perhaps someone does.
    The Tamil community has borne the brunt of politically motivated killings. It remains in the grip of a gun culture unleashed by rival parties. The gun was originally meant to serve the struggle for the liberation of the Tamils. But soon it took command of politics and has often been used to settle sectarian disputes by military means. I am not the first to say this, nor is this the first time I say it. Tamils need to reinvent the culture of intellectual pluralism and open political debate. And that culture needs to be regenerated by us from within our own society which I have no doubt is capable of absorbing transformative ideas and values from other societies. This must happen sooner than later to safeguard the justness of the cause of the Tamil people, to sustain the struggle politically, and to build a democratic society. It is widely recognised that the armed struggle has restored to the Lankan Tamils a great measure of dignity, while drawing the attention of the world to their legitimate grievances. However, internecine conflicts and the violent suppression of different ideas and perspectives on the national question and its resolution have done much harm to the Tamil cause and struggle. In the eyes of his killers Kethesh was a ‘traitor’ but the world at large saw him as an intellectual with a different approach to the grievances of the Tamil people. Those who regarded him as a traitor should have taken the trouble to argue their case politically and show why his approach was wrong. What is the point in having so many Tamil and English websites, newspapers and magazines, TV channels and radio stations if we cannot use them for open exchange of views and for debates to develop an enlightened political culture in Tamil society?
    My condemnation of the killing of Kethesh and my opposition to the gun culture that plagues the Tamil community cannot obviously be construed as an endorsement of government policy or the ways in which the government’s Peace Secretariat conducts its affairs. The government talks of negotiations and peace without clearly stating its political stand on the national question. What emerges clearly from its practice is that it is pursuing a majoritarian supremacist agenda in the name of the sovereignty and sanctity of the unitary state. The problem with the state is that it is not just a unitary state but a communalised, desecularised, majoritarian unitary state. We cannot build a truly democratic Lankan society without restructuring the state to make it ethnically neutral (i.e. truly multiethnic) through an elaborate arrangement for autonomy and power sharing in a united Lanka. This should be the agenda of a government that is sincere and serious about achieving lasting peace in the country and to all its peoples. No government so far has had the political will to do this. The conflict cannot be transformed as long as this failure continues. Individual Tamil intellectuals like Kethesh could do very little to change this situation.
    N. Shanmugaratnam is Professor of Development Studies
    Head of Research Department of International Environment & Development Studies, Noragric, Norwegian University of Life Sciences (UMB)
    http://tamilweek.com/news-features/archives/543

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    கேள்வியும் நானே, பதிலும் நானே….!!?? (‘பாட்டும் நானே, பாவமும் நானே’ சினிமா போல..)

    ”தேசம்நெற்: யூன் 9 மற்றும் யூன் 11 முதல் 15 வரையான கருத்தரங்குகள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடவும்.

    பேராசிரியர் சண்: நீங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு நிகழ்வுகளைப் பற்றி கேட்கின்றீர்கள். யூன் 9ல் போருக்குப் பின்னான உதவியும் அபிவிருத்தியும் (Post War Relief and Development) என்ற அடிப்படையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை Norwegian Centre for Peacebuilding (NOREF) என்ற அமைப்பு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நோர்வேயில் உள்ள வடக்கு கிழக்கின் மனிதத்துவ மற்றும் அபிவிருத்தியில் அக்கறையுடைய தமிழ் அமைப்புகளையும் தமிழ் ஆர்வலர்களையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களும் கலந்து கொண்டனர். எல்ரிரிஈக்கு ஆதரவான கருத்துடையவர்களும் அதற்கு முற்றிலும் எதிரான கருத்து உடையவர்களும் கலந்துகொண்டனர். இவற்றிலிருந்து மாறுப்பட்ட கருத்துடையவர்களும் அங்கு இருந்தனர். ஆயினும் கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது. இதில் தமிழர்கள் 25 பேரும் முஸ்லீம் ஒருவரும் கலந்துகொண்டனர்.

    இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய மற்றும் மனிதாபிமான மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இக்கலந்துரையாடலின் மையப்புள்ளியாக அமைந்தது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்பதும் ஆராயப்பட்டது. இக்கருத்தரங்கு மையப்புள்ளியில் இருந்து விலகாமல் செல்வதில் வெற்றியீட்டியதுடன் இதில் கலந்துகொண்ட பலரும் ஆரோக்கியமான பங்களிப்பையும் செய்தனர் என நான் நினைக்கின்றேன்.

    யூன் 11 முதல் 15 வரை இடம்பெற்ற மாநாடு ‘சமாதானத்தில் நோர்வே’ – ‘Norway in Peace’ என்ற தலைப்பில் இடம்பெற்றது. விஞ்ஞானியாகப் பணிபுரிந்து மனித உரிமைகளை முன்னெடுத்த நான்சென் என்பவரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட Nansen Peace Centre – நான்சென் சமாதான மையம் என்ற அமைப்பினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 1938 ல் நான்சென் கல்வியியல் நிறுவனமாக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இந்த மாநாட்டில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நாடுகளின் தற்போதைய நிலை பற்றியும் அந்நாடுகளில் உள்ள முரண்பாடுகளின் எதிர்காலம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    தேசம்நெற்: இவ்விரு நிகழ்வுகள் தொடர்பாகவும் உங்களின் மதிப்பீடு என்ன?

    பேராசிரியர் சண்: இரு நிகழ்வுகளும் வேறு வேறு தளங்களில் நடைபெற்றது. யூன் 9 நிகழ்வு குறிப்பாக இலங்கையின் போருக்குப் பின்னான மனிதாபிமான உதவி வாழ்வியலைப் பலப்படுத்துவது மற்றும் அபிவிருத்தி – இவற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாத்திரம் தொடர்பானது. இது இலங்கையின் வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
    மற்றைய நிகழ்வு சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வேயின் சர்வதேசப் பங்களிப்பைப் பற்றியது. இது சர்வதேச ரீதியான நிகழ்வு. இலங்கையில் நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலும் தற்போது இலங்கை மீது சர்வதேசப் பார்வை திரும்பியுள்ள நிலையில் இலங்கை விவகாரம் அதில் ஒரு அம்சமாக அமைந்தது.

    இரு நிகழ்வுகளுக்கும் நான் அழைக்கப்பட்டு இருந்தேன். முன்னைய நிகழ்வின் ஒரு பிரிவுக்கு நான் தலைவராகவும் பயிற்சிப் பட்டறையின் ஒரு பிரிவை முன்னெடுப்பதற்கும் அழைக்கப்பட்டு இருந்தேன்.

    பின்னைய நிகழ்வில் பேச்சாளராக அழைக்கப்பட்டு இருந்தேன். ‘இலங்கையின் 5வது சமாதானச் செயற்பாடுகளுக்கு ஒரு மீள்விஜயமும் மத்தியஸ்தராக நோர்வேயின் பாத்திரமும்’ – ‘Revisiting Sri Lanka’s Fifth Peace Process and Norway’s Role as Mediator/Facilitator’, என்ற தலைப்பில் எனது உரை அமைந்தது. எனது உரைக்கு முன்னதாக சமாதான ஆய்வு நிறுவனம் Peace Research Institute Oslo (PRIO) இன் இயக்குனர் உரையாற்றி இருந்தார். அவர் கடந்த கால சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் சமாதனச் செயன்முறை வடிவம் Norway Model ஒரு பிரச்சினையானது என்ற கேள்வியை எழுப்பிச் சென்றார்.

    அடுத்து உரையாற்றிய நான் நோர்வேயின் சமாதான நடவடிக்கைகளின் தோல்வியின் விளைவாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் எல்ரிரிஈ இன் தோல்வி பற்றியும் குறிப்பாக தற்போது சிலர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு “இலங்கையின் பயங்கரவாத அழிப்பு வடிவம்” ஒன்றை Sri lanka Model யை உருவாக்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். எனது உரையின் சாரம்சத்தை அருகில் உள்ள இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம். (இதற்பான இனைப்பு கட்டுரையில் தொடுக்கப்பட்டிருக்கவில்லை! – இது எனது இணைப்பு)

    இக்கருத்தரங்கிற்கு நோர்வேயின் சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் காணப்பட்ட அறிவியல் விவாதம் என்னை வியப்படைய வைத்தது. இதில் பல பெண்களும் இளையவர்களும் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்தவர்கள் உலகின் பல்வேறு பாகங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகள் பற்றி மிகவும் அறிந்து கொண்டவர்களாக இருந்தனர்.
    இந்நிகழ்ச்சியில் சமூக விஞ்ஞானத்துறையில் கற்கின்ற மூன்று மாணவர்களும் மருத்துவப் பிரிவில் கற்கின்ற ஒரு மாணவியுமாக நான்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடனான உரையாடல் மாறுபட்டதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.”

    (இரண்டாவது நிகழ்வு நோர்வேயின் சாதாரன குடிமகனுக்குத் தகவல் அறியும் உரிமையை நிறைவு செய்த நிகழ்வாகும்! – சட்ட திட்டத்தின் படி)

    சண்னிடம் இரண்டு பிரதானமான கேள்விகள்:

    1. முதலாவது கலந்துரையாடல் பற்றியே ‘தீவான்’ தனது கேள்விகளை எழுப்பியுள்ளார்? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

    2. இரண்டாவது நிகழ்வில் நீங்கள் உரையாற்ற இருப்பதாக…(ஆங்கிலம்)-இது முன்னரே நிகழ்சி நிரலாக வெளியிடப்பட்டும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உரையின் பின்னர்… , ‘மீடியாக்களில்’ 17ம் திகதி முதல் ” நோர்வேயின் மத்தியஸ்தத்தை இந்திய மற்றும் முக்கியமாக ஜப்பான் விரும்பவில்லை” என்ற பொருள்படவே எடுத்துச் சென்றிருந்தன. (தாங்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டதற்கும், இதற்கும் முரண்பாடாக இருப்பதேன்?)

    பி.கு: முதலாவது நிகழ்வில்… (சுட்டி)

    1. ”யூன் 9 நிகழ்வு குறிப்பாக இலங்கையின் போருக்குப் பின்னான மனிதாபிமான உதவி வாழ்வியலைப் பலப்படுத்துவது மற்றும் அபிவிருத்தி – இவற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாத்திரம் தொடர்பானது. இது இலங்கையின் வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.”

    2. ” இதில் தமிழர்கள் 25 பேரும் முஸ்லீம் ஒருவரும் கலந்துகொண்டனர்”

    இவைகள் இரண்டும் தங்களது கருத்துக்கள்.

    இதில் ஒரே ஒரு முஸ்லீம் (மட்டுமே) கலந்து கொண்டார் என்றதற்கும், ந.பத்மநாதனின் பின்னூடத்தை எடுதால்: ” இலங்கைத் தமிழ் மக்களிற்கு சார்பான கருத்தரங்கமாகவே அதை நான் பார்க்கின்றேன்.” என்றும் – மேலும், ” கலந்துரையாடலுக்கு பேராசிரியர் சண்முகரத்தினத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியதே.”

    இக்கருத்துக்கள் பற்றி ‘சண்’ ஏதாவது கூறவிரும்புகிறாரா?

    முடிவாக
    ஆங்கிலத்தில் எழுதுபவர்களின் பின்னூட்டங்களை விளங்கிக் கொள்ளும் அறிவு எனக்கில்லை! அவற்றை ‘மொழி பெயர்ப்பு’ கருவிகளால் (சரிவர) விளங்கிக் கொள்ளும் போது… மீண்டும் பதில் எழுதுகின்றேன்.

    ப்பிரசன்னா 30 06 10

    Reply