தமிழகத்தில் நாளை (June 23 2010) நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்தில் 14 பேராளர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான அழைப்பிதழ்கள் செம்மொழி மாநாட்டுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நெறிப்படுத்தலில் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் எம். இராசேந்திரன் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்களில் பேராசிரியர் அ.சண்முகதாசன், பேராசிரியர் சி. சிவலிங்கராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ் ஜெபநெசன், கலாநிதி இ. விசாகரூபன், கலாநிதி சி. செல்வரஞ்சிதம் ஈ. குமரன், ஆசிரிய கலாசாரல் நிலைய விரிவரையாளர் அ, லலிசன், பேராசிரியர் மு.புஸ்பரட்ணம், செல்வி. செல்வாம்பிகை நடராசா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் த.அஜந்தகுமார், செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. பத்மநாதன், ஆகியோர் உள்ளங்கியுள்ளனர்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றிங்கும் அழப்பு கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.