மட்டக்களப்பு படமாளிகை தீக்கிரை

111.jpgமட்டக் களப்பில் அமைந்துள்ள பிரபல சினிமா படமாளிகை ஒன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள படமாளிகையே தீக்கிரையாகியுள்ளது.  இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற iifa திரைப்பட விழாவை தமிழ் திரையுலக நடிகர்கள் புறக்கணித்தமையைக் கண்டித்து இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வடகிழக்கு சினிமா திரையரங்குகளில் இந்தியத் தமிழ் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என சுதந்திர இலங்கையின் தமிழர்கள் அமைப்பு துண்டுப்பிரசுரம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் இன்று ராவணா திரையிடப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட படமாளிகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் விஜயம் செய்தார். இச் சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

111.jpg

11112.jpg

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Ajith
    Ajith

    இந்தியத் தமிழ் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என சுதந்திர இலங்கையின் தமிழர்கள் அமைப்பு துண்டுப்பிரசுரம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.

    Who are they?
    Who Protect them?
    Is this the way we propose to bring independence?

    Reply
  • மாயா
    மாயா

    புலிகள் ( நாட்டிலும் , புலத்திலும்) செய்தால் யாரென்று எவரும் கேட்கவில்லை. ஒரு சிலர் செய்தால் மட்டும் கேள்வி? இவர்களும் இலங்கை வாழ் உரிமை பெற்ற மக்களே…. இந்திய திரைப்படங்களை இலங்கை மக்கள் திரையிடாமல் தடுக்க வேண்டும். அரசு அல்ல….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….ஒரு சிலர் செய்தால் மட்டும் கேள்வி?,,,..//maya
    அந்த ‘ஒரு சிலர்’ யார் என்பதுதான் கேள்வி!

    //… இவர்களும் இலங்கை வாழ் உரிமை பெற்ற மக்களே…. //
    நல்ல வசதியான பதில்! அந்த ‘இலங்கை வாழ்’ மக்கள் ஏன் அதே இலங்கை வாழ் மக்களில் ஒருவரின் தியேட்டரை எரித்தனர்?

    Reply
  • fiona
    fiona

    புலிகள் முன்பு செய்த கூத்துக்கள் போல் உள்ளது இந்த எரிப்பு விளையாட்டு.

    Reply
  • Ajith
    Ajith

    ஒரு சிலர் செய்தால் மட்டும் கேள்வி?
    So you agree that it is here Sinhala state. So, no one should ask what Sinhala state does? What an alternative to LTTE?

    Reply