”வன்னி மக்களுக்கு வீடமைக்கும் உதவி நேரடியாக வழங்கப்படும்” ப சிதம்பரம் – ”அது இலங்கையின் இறமையைப் பாதிக்கும் ஹெகலிய ரம்புக்வல”

Chidambaram_PKeheliya_Rambukwellaபோரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்ற இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. இவ்வாறு நேரடியாக வழங்கப்படுவது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி மூன்று நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த வேளையில், அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் விடுகளை அமைத்துக் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாவை உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருந்தது. இதன்பின் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வுதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். 0

எனினும், இதனை சிறிலங்கா அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது மறுத்துள்ளார். இந்தியாவோ வேறெந்த நாடுகளோ அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவிகளை வழங்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் உதவிகளைக் கோரியுள்ளோம். அவர்களது உதவிகள் அரசாங்கத்தினுடாகவே பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • chandran.raja
    chandran.raja

    இங்கு தான் பிரச்சனைகளே ஆரம்பமாகிறது. உலகநாடுகளில் நாட்டு மக்களையும் உடமைகளை ஈடுவைத்து வாங்கப்படும் பணம் எந்தளவில் மக்களின் வாய் வயிற்றுக்கு போய் சேருகிறது? சுனாமிப்பணம் சதம் இல்லாமல் பாதிக்கப் பட்ட மக்களுக்கே போய் சேரவேண்டியது.எமது நாட்டில் அப்படியா? நடந்தது.
    ஆகா..முதாலிளித்துவ நாடுகளின் வரிசையில்லுள்ளவர்கள் தானே! நாங்கள் சிறுதளவை மேல்நாட்டு இரசியவங்கிகளில் வைப்பு வைத்தால் ஏதுவும் குடிமூழ்கிப் போய் விடாது என்கிற நப்பாசை தானே.
    இறமையுள்ள அரசு என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம். கிடைக்கப் போகிற ஆயிரம்கோடி ரூபாவுக்கும் சதக்கணகில் கணக்கு காட்டமுடியுமா? அந்தப் பணம் பாதிக்க மக்களை சென்றடையுமா? மன்னிக்க வேண்டும்.புலிகள் அணுகிய முறை மிகமிக சரியானதே. அதற்காக எல்லாவற்றையும் நீங்கள் சரியாக அணுகுவீர்கள் என்பது சந்தேகமே. அரசு என்பது அந்த நாட்டுமக்களின் அதிகாரத்தைத்தான் குறிப்பிடுகிறது. இல்லாவிட்டால் பரவாயில்லை. இருக்கிறதை பகிர்ந்து கொள்வோம் என்பதும் உயர்தரமானதே!.
    அந்த வழியில் நடந்து அதைமுறைப்படி மக்களிடம் ஒப்படைக்கும் போது அது இறமையுள்ள அரசாகிறது.அதற்கு யார்? உத்தரவாதம் வழங்குவது. இது ஒழுங்கு முறையான கணக்குவழக்கு மூலமே சாத்தியப்படக் கூடடியதுதொன்று. இது சாத்தியமாகும் போது இறமையுள்ள அரசும் சாத்தியமாகிறது.

    Reply
  • Ajith
    Ajith

    இவ்வாறு நேரடியாக வழங்கப்படுவது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

    இறைமை??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..ஆயிரம் கோடி ரூபாவை உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருந்தது..// இதில் விவேக் ஒபராய் “வழங்கிய“ 50 மில்லியனை கழிச்சுக்கொண்டோ குடுப்பியள்?

    //…அரசு என்பது அந்த நாட்டுமக்களின் அதிகாரத்தைத்தான் குறிப்பிடுகிறது. இல்லாவிட்டால் பரவாயில்லை. இருக்கிறதை பகிர்ந்து கொள்வோம் என்பதும் உயர்தரமானதே!..”/ நல்லாத்தான் குழம்பிப்போய் இருக்கிறார்!

    //…இது ஒழுங்கு முறையான கணக்குவழக்கு மூலமே சாத்தியப்படக் கூடடியதுதொன்று. இது சாத்தியமாகும் போது இறமையுள்ள அரசும் சாத்தியமாகிறது….//
    ரான்ஸ்பரன்சி இன்ரனசனல் என்கின்ற நிறுவனம் சுனாமிகாலத்தில் கொடுத்த உதவியில் கால்வாசிக்கு கனக்கில்லை முக்கால்வாசிக்கு என்ன நடந்ததென்றே தெரியாது எனச் சொல்லி இருக்கிறது! அப்படியானால் ஸ்ரீலங்கா ‘இறமை இல்லாத நாடு’ என்கிறீர்களா?

    Reply