புலிகளின் நாடுகடந்த திட்டத்தை முறியடிக்க சர்வதேசத்தை அணிதிரட்டி உதவ வேண்டும் – பிரதமர் ஜயரட்ன அகாஸியிடம் வேண்டுகோள்

akasi-dm.jpgஇலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்தை உருவாக்க திட்டம் தீட்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறான நாடுகள் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்தவொரு அரசுக்கும் எதிராக இலங்கையில் இருந்து செயற்பட நாம் எந்தவொரு குழுவுக்கும் இடளிக்கவில்லை. அதேபோல் இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாட்டிலும் திட்டம் தீட்டப்படுமாயின் அதனை முறியடிப்பது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் பிரதமர் கூறினார்.

புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளிலும் இந்த நிழல் அரசை உருவாக்க திட்டமிடப்பட்டுள் ளதாக தெரிய வந்துள்ளது. அடிப்படிப் பார்ர்க்கும்போது அவ்வாறான நாடுகள் இலங்கைக்கு எதிராக வஞ்சக நோக்குடன் செயற்படுகின்றனவா என்று தனக்கு சந்தேகம் எழுவதாகவும் பிரதமர் அகாஷியிடம் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தெற்கைப் போலவே வடக்கிலும் துரித அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்ப்பதற்கு அரசாங்கம் சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத் தியுள்ளது. அவை தொடர்பாக அனைத்து இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையும் நட்புறவும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்று பிரதமர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் புலிகளின் நிழல் அரசொன்று உருவாகுவதற்கான ஏதாவது பின்னணிகள் இருக்குமாயின் அதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக ஜப்பான் மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது என பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி தெரிவித்தார்.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • thurai
    thurai

    புலியின் பெயரினையே காலம்முழுவதும் சொல்வதன் மூலம் தமிழரின் உருமைகளை மறைமுகமாக அரசு மறுத்துக் கொண்டிருகின்றது. நாடு கட்ந்த அரசு வேரற்ர ஓர் செயற்கை அரச மரம். இதனை நம்பி புலத்துத் தமிழரே ஏமாறுகின்றார்கள். பலனடைவது சர்வதேசப் புலிகளேயாகும்.

    துரை

    Reply
  • Rohan
    Rohan

    இல்லை பிரதமரே… நீங்கள் ஒன்றும் கஷ்டப்பட வேண்டாம். அதைத் தமிழர்களாகிய நாங்களே பார்த்துக் கொள்வோம்.

    இதுவரை நடந்த கூத்திலேயே உங்களுக்கு எம்மீது நம்பிக்கை வரவில்லையா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…புலியின் பெயரினையே காலம்முழுவதும் சொல்வதன் மூலம் தமிழரின் உருமைகளை மறைமுகமாக அரசு மறுத்துக் கொண்டிருகின்றது…..//

    ———-
    புலியல்லாத கூட்டத்தின் அரசியல் பம்மாத்துகள் பதிவேற்றியது
    பி.இரயாகரன் Tuesday, 15 June 2010 07:43

    மக்களை அணிதிரட்ட மறுப்பது பம்மாத்து அரசியலாகும். அடையாள அரசியலும், பிரமுகர்தனமும் கொண்ட புலியல்லாத அரசியலோ, மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற அரசியல் நிலைதான், அடையாள அரசியலுக்கும் பிரமுகர்த்தன அரசியலுக்குமான மூலதனமாகும். மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதை எதிர்ப்பதில், இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரம் இப்படி முதன்மை பெறுகின்றது.

    புலிகள் இருந்தவரை, புலிகள் தான் தமது அரசியலுக்கு தடையென்றனர். தாம் போராடுவதற்கு ஜனநாயகம் வேண்டுமென்றனர். இப்படி ஜனநாயகம் வேண்டுமென்று சொன்னவர்கள், மக்களை அதன்பால் திரட்டும் அரசியலை நிராகரித்தபடியே இதைக் கோரினர். மக்களை ஜனநாயகத்தின் பின் அணிதிரட்டும் குறைந்தபட்ச அரசியலைக் கூட கைவிட்டு, மக்களை புலிகள் பின் தொடர்ந்து அணிதிரண்டு நிற்கக் கோரினர். அதேநேரம் தம்மை “முற்போக்குகள்”, “இடதுசாரிகள்”, “மார்க்சிஸ்ட்டுகள்” என்று காட்டிக்கொண்டு, தம்மை மூடிமறைக்க ஜனநாயகத்தை மூச்சுக்கு மூச்சுக்கு முன்நிறுத்தினர். இப்படி 20 வருடங்களாக மக்களை அணிதிரட்டும் அரசியலை மறுத்து, புலியல்லாத மாற்றுத் தளம் எதிர்ப்புரட்சி அரசியல்தளத்தில் பயணித்தது.

    யுத்தம் தீவிரமாகி, புலியின் அழிவு தொடங்கியவுடன், பலர் தங்கள் சொந்த 20 வருட அரசியல் பம்மாத்தை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.

    1.சிங்கள் பேரினவாத பாசிச அரசு புலியை அழிப்பதுதான், புலிப் பாசிச ஒழிப்பாகவும் ஜனநாயக மீட்பாகவும் கூறிக்கொண்ட ஒரு அரசு ஆதரவு எதிர்ப்புரட்சி கூட்டம் வெளிப்பட்டது.

    2.சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களை அழிக்கின்றது என்று கூறிக்கொண்டு, புலியை எதிர்க்காத அரசு எதிர்ப்பை முன்னிறுத்திய புலியாதரவு நிலையை மறைமுகமாக முன்னெடுத்தனர். குறிப்பாக மக்களை புலிக்கு வெளியில் தனியாக அணிதிரட்டுவதை அரசியல் ரீதியாக மறுத்தனர். மக்கள் என்று கூறிக்கொண்டு, புலிக்குப் பின்னால் நின்றனர்.

    3.அரசு மற்றும் புலியெதிர்ப்பை அடையாள அரசியலாகக் கொண்டும், பிரமுகர் அரசியலாகக் கொண்டும் சிலர் மிதந்தனர். இப்படி சிலர் திடீர் அரசியல் பேசினர். மக்களை புலியல்லாத அரசியல் மூலம் அணிதிரட்டுவதை மறுத்து, “மார்க்சிய” பிரமுகர்தனத்தையும் லும்பன் முற்போக்குத்தனத்தையும் முன்னிறுத்தினர்.

    இப்படி மூன்று போக்குகளும் மக்களை அணிதிரட்டும் அரசியலை முன்வைத்து, போராடுவதை மறுத்தனர். இவர்கள் சஞ்சிகைகளை நடத்தியவர்களாக, மக்கள் அரசியலை துறந்தோடியவர்களாக, தனிப்பட்ட வாழ்வில் மற்றவனை ஏமாற்றிப் பிழைக்கும் புத்திஜீவிகளாக, பிரமுகர்களாக, லும்பன்களாக, மக்களுக்கு வெளியில் அரசியல் பேசியபடி வாழ்ந்தனர். இப்படி தங்களைச் சுற்றி சில அடையாளங்களை முன்னிறுத்தி, மக்களுக்கு மேலானவர்களாக காட்டி பம்மாத்துகின்றனர்.

    யுத்தம் முடிந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. புலிகளின் பிடியில் இருந்த மக்களை மாற்று அரசியல் தளத்தில் வழிநடத்தும் அரசியல் முன்னெடுப்புகள், தொடர்ந்து இவர்களால் மறுக்கப்படுகின்றது. மக்கள் முன் மாற்று அரசியல் இல்லாத நிலையில், தொடர்ந்தும் புலிகள்தான் அமைப்பு ரீதியாக அரசியல் ரீதியாக மக்களை வழிநடத்துகின்றனர்.

    புலத்தில் புலிகள் என்ற வலதுசாரியமும், மண்ணில் கூட்டமைப்பு என்ற வலதுசாரியத்தின் அரசியல் எல்லையைத் தாண்டி, மக்களை அணிதிரட்டும் ஒரு மாற்று அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்வைத்து போராடும் நிலையில் அரசியல் பேசுவோர் இல்லை. மண்ணில் புதிய ஜனநாயகக் கட்சி, பிரமுகர் கட்சி என்ற எல்லையைத் தாண்டி எதையும் செய்யவில்லை, செய்யப்போவதில்லை. அது மக்களை அணிதிரட்டாத, பிரமுகர்களை தக்கவைக்கும் கடந்தகால பாதையில் அது பயணிக்கின்றது. புலத்தில் புலியல்லாத மாற்றுத் தளத்தில் உருவான பிரமுகர்கள், விமர்சகர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் தங்களை தக்கவைக்கும் பாதையில் முன்னேறுகின்றனர்.

    புலியல்லாத மாற்று அரசியல் தளத்தில், மக்களுக்கான அரசியல் கொள்கை கோட்பாட்டை முன்வைத்து, மக்களை அதன்பால் அணிதிரட்ட வேண்டும் என்ற சீரிய அரசியல் பணியை நிராகரிக்கின்ற அரசியலை தொடர்ந்து நகர்த்துகின்றனர். மக்களுக்கு எதிரான, மக்களை புலிக்கு வெளியில் அணிதிரட்டுவதற்கு தடையான, மிகவும் ஆபத்தான எதிர்ப்புரட்சி அரசியலாக மாறி இதுவும் புலிக்கு சமாந்தரமாகவே பயணிக்கின்றது.

    தன்னை இடதுசாரியம் என்றும், முற்போக்கு என்றும் காட்டிக்கொள்ளும் அடையாள மற்றும் பிரமுகர்தன இருப்பு அரசியல், மக்களை அணிதிரட்டுவதை மறுக்கின்றது. அதை மற்றவர்கள் செய்வதையும், எதிர்த்து அது செயல்படுகின்றது. அறிவு சார்ந்த பிரமுகத்தனத்தையும், லும்பன்தனத்தையும் தக்கவைக்கும், அரசியலை முன்னிறுத்தி, அதையே மாற்றாக காட்ட முனைகின்றது.

    மக்களை அணிதிரட்டாத, அதை அரசியல் நடைமுறையாக முன்னெடுக்காத, அதற்காக கிளர்ச்சி செய்யாத அனைத்தும், மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்றது. மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு அது ஆதரவானது. புலிகளின் நிகழ்ச்சி நிரலின் பின், தங்கள் அடையாள அரசியல் மூலம் பிரமுகர்தனத்தை காப்பற்றிக் கொள்ளும் ஒரு எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

    மக்கள் தான் வரலாற்றை தீர்மானிப்பவர்கள். அதற்காக உழைக்காத, போராடாத, வழிகாட்டாத அனைத்தும், பம்மாத்துதான். சாராம்சத்தில் அது மக்கள் விரோதத்தன்மை கொண்ட, அரசியல் பிழைப்புவாதம். இதை இனம் காண்பதன் மூலம் தான், மாற்றத்தை உருவாக்க முடியும்;. உண்மையாகவும், நேர்மையாகவும், மக்களுக்கான அர்ப்பணிப்புடன் உழைக்க முடியும்.

    பி.இரயாகரன்
    15.06.2010

    Reply
  • Appu hammy
    Appu hammy

    1980 களில் இலங்கையில் நிலவிய மேற்கின் செல்வாக்கை முறியடிக்கவும், தனது கட்டுபாட்டுக்குள் இலங்கையைக் கொண்டு வரவும், இந்தியா கையாண்ட அதே அரசியல் வழிமுறையை இன்று மேற்கு செய்கின்றது. அன்று இந்தியா போராளிக் குழுக்களுக்கு பயிற்சி பணம் உட்பட அரசியல் ரீதியான ஆதரவும் வழங்கி, தன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் இடது வலது என்று அனைவரையும் ஒன்றாக்கி, போராட்டத்தை சீரழித்து அவர்களை அழித்த அதே தளத்தில் இலங்கை மேலான தங்கள் சொந்த நலனையும் இந்தியா இன்று அடைந்துள்ளது. இந்த இடத்தில் இந்த இயக்கத்துக்குள் புலியைக் கையாண்ட அமெரிக்கா, தங்கள் மேற்கு நலனை புலிகள் ஊடாக பேண முனைந்தனர். புலிகள் மூலம் இந்திய நலன் சார்ந்த குழுக்களை வெற்றிகரமாக அழித்தனர். இந்திய நலனை புலிகள் ஊடாக தோற்கடித்த மேற்குக்கு எதிராக இலங்கை ஊடாக மேற்கை இந்தியா தோற்கடித்தது. இன்றைய நிலை இது. மேற்கு இந்த வகையில், தன் நலனை அடைய மீண்டும் தீவிரமாக தலையிடுகின்றது.

    அன்று இந்தியா செய்ததை, மேற்கு மறுபடியம் செய்ய முனைகின்றது. அதை முறியடிக்க, இந்தியா ஒரு அரசியல் தீர்வை வழங்கி அதை முறியடிக்க முனைகின்றது. இப்படி எதிரும் புதிருமான அரசியல் ராஜதந்திர சதி நாடகங்கள் நடக்கின்றது. எல்லாம் தமிழ் மக்களின் பெயரில் தான்.

    Reply
  • Dingiri Bannda
    Dingiri Bannda

    A panel to advise the United Nations on human rights issues arising from the civil war in Sri Lanka could be in place within days. The announcement came from the UN’s head of political affairs, Lynn Pascoe, after a two-day visit to the island.

    The Sri Lankan government is opposed to the panel, which would advise UN chief Ban Ki Moon on moves to address the grievances that fuelled the conflict.

    Mr Pascoe praised government efforts to resettle Tamils displaced by war. The UN intends that the human rights panel will advise its chief Ban Ki Moon on issues and standards of accountability arising from the 37-year conflict with the Tamil Tigers, which ended last year. The UN estimates that 100,000 people were killed in the conflict.

    ‘Bitterness and divisions’

    The panel will confront allegations of war crimes which have been levelled against both the government and the Tamil rebels. It could be in place by early next week. However, the plan has met with opposition. Speaking in March, Sri Lankan President Mahina Rajapaska described it as totally unwarranted.

    Mr Pascoe, a senior UN diplomat, said the panel was about to be appointed. He added that the UN will also be interested in the progress of an internal commission on the final years of the war, recently set up by Colombo, the Sri Lankan capital. There was an urgent need to take steps towards political reconciliation, Mr Pascoe said.

    “Bitterness and divisions that took decades to accumulate will not dissolve overnight in Sri Lanka,” Mr Pascoe said. “But now is the time to make major efforts to begin healing these wounds. The end of the conflict must be followed by a political solution that addresses the issues and grievances that fuelled the war.”

    But Mr Pascoe had praise for the authorities on another difficult theme, the resettlement of hundreds of thousands of Tamils displaced by the war. Fresh from a visit to northern regions where people are only now returning home, he said children were attending school and people had food and access to basic healthcare.
    But getting building materials for housing and shelter was still a major problem.

    – BBC

    Reply