வெளி நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை நேரில் காண்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை தொடர்பில் உலக நாடுகளில் பல்வேறு விதமான மாற்று கருத்துக்களும் கூறப்படுகின்றன. அது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தி வருகின்றது. இந்நிலையில் நாங்கள் கூறும் விடயங்கள் தொடர்பான உண்மை நிலைமைகளை காண முடியும். தமிழக எம்.பிக்கள் குழுவை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வரும் படியும், வடக்குக்குச் சென்று அங்கு அரசினால் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பார்வையிடும்படியும் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல சுட்டிக்காட்டினார்.