200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!

Jaffna_Hospitalமே 28ல் மருத்துவ கலாநிதி நிமால் காரயவாசம் தலைமையிலான லிற்றில் எயட் சமூகப் பணியாளர்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு 200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களைக் கையளித்தனர். பொதுவான நோய்களுக்கான அன்ரிபயோரிக்ஸ் மற்று அலர்ஜிக்கிற்கான அன்ரிகெஸ்ரமின்ஸ் ஆகியனவும் இந்த மருத்துவ அன்பளிப்பில் அடங்கி இருந்தது. யாழ் பொது வைத்தியசாலையின் மருத்தவ இயக்குனர் டொக்டர் பவான் லிற்றில் எய்ட் இன் அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்.

Medicine_to_Jaffna_LA‘‘யாழ்ப்பான பொது வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் இந்தக் காலகட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டது மிக முக்கியமான விடயம்’’, என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி பொன்னையா அழ்வாப்பிள்ளை லிற்றில் எய்ட்க்கு தெரிவித்துள்ளார். ‘‘அண்மையில் வன்னியில் இடம்பெற்ற வன்முறைக் குழப்பத்தால் உதவி வேண்டியவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை நான் கண்டுள்ளேன்””, எனத் தெரிவித்த கலாநிதி அழ்வாப்பிள்ளை ‘‘லிற்றில் எய்ட் சரியான தருணத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு மருத்துவ ரீதியில் உதவியளித்துள்ளது’’, எனத் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் எல்லையற்ற மருத்துவ அமைப்பான மெடிசின் வித்தவுட் பொர்டர்ஸ் அமைப்பு இம்மருந்துப் பொருட்களை லிற்றில் எய்ட்க்கு வழங்கி இருந்தது. வழமையாக இவ்வளது தொiகாயான மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சே பொறுப்பேற்று விநியொகிப்பது நடைமுறை. ஆனால் இந்த அனுமதி லிற்றில் எய்ட் இன் பொறுப்பான நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையால் லிற்றில் எய்ட்க்கு வழங்கப்பட்டு இருந்து. அதனால் லிற்றில் எய்டே யாழ்ப்பாணத்திற்கான மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்கொண்டு இருந்தது.

இதுவரை லிற்றில் எய்ட் 1.52 மில்லியன் பவுண் பெறுமதியான மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணம், வவுனியா, நாவலப்பிட்டிய, பமுனுகம ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து இருந்தது. மேலும் மன்னார் மற்றும் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கும் மருந்துப் பொருட்களை இம்மாதம் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட வைத்தியசாலைகளுடன் லிற்றில் எய்ட் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதுடன் அன்பளிக்கப்பட்ட மருந்துப் பொருட்களின் முறையான பயன்பாட்டை லிற்றில் எய்ட்டும் மெடிசின் வித்தவுட் போடர்ஸ் அமைப்பும் அவதானித்து வருகின்றது. இதுதொடர்பான விஜயம் ஒன்றை குளோபல் மெடிகல் எய்ட் மற்றும் லிற்றில் எயட் என்பன இலங்கைக்கு மேற்கொள்ள இருக்கின்றன. லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் குளோபல் மெடிகல் எய்ட்டுடன் யூன் 17 இலங்கை செல்லவுள்ளார். இவர்கள் மருத்துப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்வதுடன் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் சந்திப்பர். http://www.youtube.com/watch?v=ZB7bTcM_Nzg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    புரட்சி என்பது சமூகமாற்றத்திற்காக மக்கள் தமது தேவைக்காக தாமே ஏற்படுத்திக் கொள்வது. இதுவே மனிதவரலாற்றில் உலகம் பூராவும் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதில் அரைகுறை படிப்பாளிகளின் கனவுகள் அபிலாஷைகளின் விருப்பத்தின் பேரிலும் சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அதற்கு புரட்சி என்றும் பேரிடுவதும் உண்டு. எள்ளத்தணையும் சுயநலமில்லாது மக்களின் நலன்களில் ஈடுபாடும் செயல்தன்தமையும் ஏற்படும் போதும் அதுவே மகத்தான புரட்சியாகிறது. ஆயுதங்கள் புரட்சியை ஏற்படுத்தவதில்லை. அது எதை தோற்றுவிக்கிறது என்பதை இக்காலகட்டத்தில் கண்டுகழித்து வருகிறோம்.

    அறிவே! ஒருசமூகத்தின் பேராயுதமாகும். கல்வியையும் மருந்தும் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய தன்னை அர்பணித்து செயல்லூக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற “லிற்றில் ஏயிற்” க்கு பாராட்டு தெரிவிற்பதைவிட மானிடத்தின் தேவையை பூர்த்திசெய்யும் தாங்கள் உழைப்பிற்கான ஊதியத்தையும் பெறுவீர்கள் என்று சொல்வதே சாலச்சிறந்தது.

    Reply