வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்ட 53 ஜோடிகளுக்கு நேற்று அரச அனுசரணையில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாம் மைதானத்தில் நேற்றுக் காலை இந்நிகழ்வு விமரிசையாக நடைபெற்றதுடன் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், டியூ குண சேகர ஆகியோரும் கலந்துகொண்டு சாட்சிக் கையொப்பமிட்டனர்.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான டிலான் பெரேரா விஜித் விஜயமுனி சொய்ஸா, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பதிதிகளாகக் கலந்துகொண்டுள்ளதுடன் அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள், மதத் தலைவர்கள், மணமுடித்த தம்பதிகளின் பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வைபவத்தின் போது 40 ஜோடிகளுக்கு இந்து மத முறைப்படியும் மேலும் 13 ஜோடிகளுக்கு கிறிஸ்தவ மத முறைப்படியும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதுடன் திருமணப் பதிவு சான்றிதழ்கள் உடனடியாகவே கையளிக்கப்பட்டன. புதுமணத் தம்பதிகளுக்குத் தலா 10,000 ரூபா வழங்கப்பட்டது இதனை கொழும்பிலிருந்து வருகை தந்த ஸ்ரீ அம்மா பகவானின் இயக்கத்தினர் வழங்கினர்.
இவர்களுக்கான வைப்புக்கணக்கு வவுனியா மக்கள் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கப்பட்டு இந்தப் பணம் அதில் வைப்பிலிடப்பட்டது. ட்ரைஸ்டார் நிறுவனம் 53 ஜோடிகளுக்கும் கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கியதுடன் புதுமணத் தம்பதிகளுக்கு மேலும் பல பரிசுப் பொருட்களும் இவ்வைபவத்தின் போது வழங்கப்பட்டன. நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த புதுத் தம்பதிகளுக்கு தற்காலிகமாக தங்குவதற்கென தனித்தனி வீடுகளும் வழங்கப்பட்டன.
இத்திருமண நிகழ்வில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபரோயும் கலந்து சிறப்பித்தார். அவருடன் இலங்கையின் முன்னணி நடிகை அனோஜா வீரசிங்கவிடம் நடனப் பயிற்சிபெற்ற ஜோடிகளும் இணைந்து நடனமாடியமை திருமண வைபவத்தை மேலும் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Varathan
இத்திருமண நிகழ்வில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபரோயும் கலந்து சிறப்பித்தார் இலங்கையின் முன்னணி நடிகை அனோஜா வீரசிங்கவிடம் நடனப் பயிற்சிபெற்ற ஜோடிகளும் இணைந்து நடனமாடியமை திருமண வைபவத்தை மேலும் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது??
Wedding is not a carnival.
பல்லி
கரும் (கடும்)புலியாய் களம் இறக்கபட வேண்டியவர்கள் ஏதோ அவர்களது நல்லவேளை குடும்பமாய்வாழ வழிகிடைத்துள்ளது, இதை மனிதனாய் வாழ்த்துவதே மனிதநேயம்; அதை விவேக் செய்துள்ளார், இந்தருணத்தில் பல்லி குடும்ப வாழ்த்துக்களும்;
கரும்புலியாய் வெடித்து சிதறும்போது வெடி வெடித்து மகிழ்ந்தவர்க்கு அவர்கள் வாழ புறப்படுவதை ஏற்ப்பது கடினம்தான்,
BC
//கரும் (கடும்)புலியாய் களம் இறக்கபட வேண்டியவர்கள் ஏதோ அவர்களது நல்லவேளை குடும்பமாய்வாழ வழிகிடைத்துள்ளது. இதை மனிதனாய் வாழ்த்துவதே மனிதநேயம். அதை விவேக் செய்துள்ளார். இந்தருணத்தில் பல்லி குடும்ப வாழ்த்துக்கள்.//
இவர்களை வாழ்த்திய பல்லி குடும்பத்துக்கும் மனித நேயர் விவேக் ஒபரோய்க்கும் எனது நன்றிகள்.
chandran.raja
இதுவரை காலமும் சினிமா நடிகர்கள் நடிகைள் என்றால் கீழ்தரமான எண்ணங்களே மனதில் வந்து போகும். ஆனால் இந்த விவேக் ஒபரோய் என்பவர் நடிகர்கள் இப்படியும் இருக்கமுடியும் என காட்டிவிட்டார். நடிகர் நடிகைகளும் மனிதர்கள் தான். அவர்களுக்ள்ளும் மனிதமனம் உண்டு என்பதை தனது செயல் நடவடிக்கை மூலம் நிரூபித்துவிட்டார். வாழ்க! விவேக் ஒபராய்.