தமிழ்த் தேசியத்தின் போராளியான மகரசிங்கம் இன்று (யூன் 4 2010ல்) காலமானார். யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை இனப் பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்த மிக ஆரம்பகாலத்தவர் ஆவார். தென்கிழக்கு லண்டனில் உள்ள மருத்துவ இல்லத்தில் தனது 87வது வயதில் உயிர் நீத்துள்ளார்.
பிரித்தானியாவில் தமிழ் தேசியத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்ததில் மகரசிங்கம் குறிப்பிடத்தக்கவர். இவரே பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு எதிராக முதன் முதலில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.
பிரித்தானியாவுக்கு தமிழ் மக்கள் அரசியல் தஞ்சம்கோரிப் புலம்பெயர்ந்த போது அவர்களுக்கான உதவி நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். தமிழ் அக்சன் கொமிட்டி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக அரசியல் தஞ்சம் கோரிப் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்தார். தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு எதிராகவும் அகதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் மகரசிங்கம் ஐநா வின் வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தவர்.
1980க்களின் இறுதிப்பகுதியில் பிரித்தானியத் தமிழர்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக் கொண்ட மகரசிங்கம் அதற்கான கையெழுத்து வேட்டையையும் நடாத்தி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வன்னியில் இருந்திருந்தால் மகரசிங்கம் அவர்கள் நாட்டுப் பற்றாளராக கெளரவிக்கப்பட்டு இருப்பார்.
lamba
நாட்டுப் பற்றாளர் பட்டம் வழங்கலை இனி நாடு கடந்த தமிழீழத்தினர் கையில் எடுக்கலாமே?? அப்பப்ப நீங்களும் ஏதோ செய்த மாதிரி மற்றும் இருப்பை உறுதிசெய்யுமாப் போலையும் காட்டிக் கொள்ளலாம்.
Notice
திரு சின்னப்பு மகரசிங்கம் காலமானார்
கடந்த 48 ஆண்டுகளாக பெரிய பிரித்தானியாவில் வாழ்ந்து இலங்கைத் தமிழர் வாழ்வுடன் இரண்டறக் கலந்து எமது உரிமைப் போராட்டத்தின் முதன்மைக் குரலாகத் திகழ்ந்த திரு சின்னப்பு மகரசிங்கம் அவர்கள் நேற்றுப் புதன்கிழமை இரவு பத்து மணியளவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
1925 மே மாதம் 12ம் திகதி மானிப்பாயில் பிறந்த திரு மகரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். கல்லூரியின் உதைபந்தாட்டடக் குழுவின் சிறப்புமிக்க உறுப்பினர். இலங்கையில் சில காலம் அரசாங்க சேவையில் சேவையாற்றிய பின் பெரிய பிரித்தானியாவிற்குக் குடிபெயர்ந்தார்.
ஆரம்பத்தில் இந்தமண்ணிற்கு மாணவர்களாக வாந்தவர்களை இணைத்துத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களை நடாத்தினார். ஆரம்ப காலத்தில் எம்மவர் மத்தியில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் திரு மகரசிங்கம் அவர்கள் முன்னின்று செயற்பட்டார். தமிழ் வழக்குரைஞர்கள் இங்குவருவதற்கு முன்னதாக, இந்த மண்ணிற்கு ஆரம்பத்தில் வந்தவர்கள் எதிர்நோக்கிய குடிவரவுப் பிரச்சனைகளில் தனது ஆங்கில அறிவைப் பயன்படுத்தி உதவினார். இந்தப் பிரச்சினைகளில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரபுக்கள் சபை உறுப்பினர்களையும் பயன்படுத்தியதன் மூலம் அவர்களை இலங்கைத் தமிழர் பிரச்சனைகளில் அக்கறை கொள்ள வைத்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும்
தொடர்புகளிற்கு: Mrs Maharasingham, 11 Keighley Park Avenue, New Eltham
London SE9 2HF Tel: 020 8859 3600