கட்டு நாயக்காவுக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி புகையிரத சேவையை நாமல் ராஜபக்ஷ எம்.பி.நேற்று செவ்வாய்க்கிழமை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமியின் விருது வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள பொலிவூட்
நட்சத்திரங்கள் வருகைதர ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டுநாயக்காகொழும்பு கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இடம்பெற்ற ரயில் சேவை ஆரம்ப நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கொழும்புக்கான இந்த முதலாவது ரயில் பயணத்தில் அமைச்சரும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.