இலங்கை கிரிக்கெட் அணித் தெரிவுக் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமல் சில்வா, ரஞ்சித் பெர்ணாண்டோ, அஸ்கர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.