புலி துதிபாடிகள் வன்னிப் படுகொலைகளை நினைவு கூரத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு பிரபாகரன் கோமணத்துடன் வீழ்ந்து கிடந்த நாள்தான் நினைவிற்கு வருகின்றது. இந்த வியாபாரிகளுக்கு அரச இராணுவத்தாலும் புலிகளாலும் கொல்லப்பட்ட எம் சகோதரர்கள் மேல் எந்தவித நினைவும் இல்லை.
மனித நேயத்தின் அடிப்படையில்தான் பிறர் மீது அன்பு செலுத்துவது ஆகும். பாசிச புலித்தலைமைக்கு அது பற்றி கவலை ஒரு போதும் இருந்ததில்லை. அவர்களுக்கு புலியினது இருப்பே பிரதானமானது. புலி அமைப்பு என்பது மக்களுக்காகவே அன்றி புலிக்காக மக்கள் அல்ல. மாறாக புலி மக்களின் அழிவில் தம்மை பாதுகாக்க முயன்றனர் என்பது உங்களுக்கு தெரிந்ததே.
மறுபக்கமாக மனித நேயத்தின் அடிப்படையில் புலிகளின் இந்த மனித விரோத நடவடிக்கைகளை விமர்சித்த ஜனநாயக வெங்காயங்கள் வன்னி படுகொலைகளை மறுத்து மறைக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது.
நண்பர்களே! ஏங்களுக்கு இந்த படுகொலைகளை கண்டித்து நினைவு கூர மிகுந்த விருப்பம் உண்டு. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும் வரை அவர்கள் இப்படுகொலையில் புலிகளின் பங்கை ஏற்கும் வரையில் அவர்களுடன் இணைந்து நினைவு கூருவது சாத்தியமில்லை.
ஐயோ என் சொந்தங்களே, உங்களை எண்ணி அழக் கூட முடியவில்லை. ஏனெனில் அதற்கு கூட இங்கு வியாபாரிகள் உண்டு!
aras
நீங்கள் ஏன் அவர்களை எதிர்பார்க்கிறீர்கள்? நீங்களாகவே ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதானே? உங்களை யார் தடுக்கப் போகிறார்கள்?
Pandiyan
அட இந்த இரங்கல் நிகழ்வுக்குமா இரண்டு குழுவாக பிரிந்து போய் அஞ்சலி செலுத்த வேண்டும்?
ram
படுகொலைகளை நடத்தியவர்களோடூ கூட இருந்தவர்களுக்கு மனச்சாட்சி சுடத்தான் செய்யும்.
BC
மக்களின் அழிவில் புலிகளை பாதுகாத்த புலி வியாபாரிகள் நடத்தும் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வது இயலாத விடயமே.
ram
One year since the end of war: Sri Lanka’s minorities need justice, security and lasting peace
http://www.reliefweb.int/rw/rwb.nsf/db900SID/VDUX-85KR2P