இன்று 13ம் திகதி யாழ்ப்பாணம் அராலியில் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளதாக இன்று பகல் யாழ்ப்பாணத்தில் பரபரப்பாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக விசாரித்தபோது ஒரு இராணுவ சிப்பாய் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்ததாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து இராணுவச்சிப்பாயை நோக்கி யார் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார்கள் என்கிற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்தன. இச்சம்பவம் மக்கள் மத்தியில் ஓரு அச்சத்தை ஏற்படுத்தின.
பின்னர் வந்த தகவல்களின் படி குறிப்பிட்ட இராணுவச்சிப்பாய் ஒரு யுவதியைக் காதலித்து வந்ததாகவும் பின்னர் அப்பெண் மனம் மாறி அவரின் காதலை மறுத்ததாகவும், இதனால் விரக்கியுற்ற அச்சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.
Londonboy
காதலுக்கு கண்ணில்லை என்பதில் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. இன மதம் தாண்டியும் இச்சிப்பாய்க்கு காதல் வந்ததும் இல்லாமல் உயிரையும் விட்டுள்ளார். ஆமிக்காரன் என்றால் கவாயில் இரத்தம் வடியும் என்று பார்க்கிற இடத்தில காதலுக்காக ஒரு சிப்பாய் உயிரையும் விட்டிருக்கிறார்.