புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.
புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும், இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.
சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.
மாயா
இது இன்றியமையாதது. இல்லாவிட்டால் புலத்தில் உள்ள இளைஞர்களும், தாயகத்தில் ஏற்பட்டது போன்றதொரு விதத்தில், ஏதோ ஓரு விததத்தில் பயங்கரவாதிகளாகும் நிலை உருவாகும். அத்தோடு வெளிநாடுகளில் நிம்மதியாக வாழும் அனைவரது அமைதியை கெடுக்கும். சிலரது வாழ்வுக்காக , பலரது உயிர் பறியாகும் நிலை ஏற்படும். இவை தவிர்க்கப்பட வேண்டுமானால் புலத்து புலம்பல் புலிகளையும் மெளனிக்க வைக்கவேண்டும்.
thurai
ஈழத்தமிழர் நலன்களிலோ அல்லது பக்கத்து வீட்டில்வாழும் ஒரு தமிழனின் நன்மை தீமைகளிலோ எந்த வகையான சிந்தனையுமற்ரவர்களே அநேகமான புலத்துப்புலிகள். இவர்களிற்கு பணம் தங்கள் கைகளிலும் தமிழரிடையே பேரும் புகழும் இருப்பதையே விரும்புபவர்கள்.
இப்போதும் குடும்பத்தலைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்துவிட்டு கணவனை கொல்லுவித்த ஒருவனையே தமிழ் பெண்கள் அமைப்புகள் தலைவனாக ஏற்று தேர்தல் பிரச்சாரம் செய்வதிலிருந்து இவர்களின் கொடூரமனங்கள் வெளிச்சமாகின்றன். இவர்களால் தமிழினத்திற்கே பெரும் அவமானம். கோத்தபாயாவின் நடவடிக்கைக்கு தமிழனை உலகம் மனிதனாக மதிக்க விரும்பும் ஒவ்வொருவரும் ஆதரவளிக்க வேண்டும்.
துரை
Ajith
Yes, it is alright that we should help Gotapaya to completely wipe out all the tamils within Sri Lanka and outside Sri Lanka. The initial step and guidance started by Mr Sothilingam in his recent article. We were successful in killing over 200,000 tamils, destroy the livelihood of their life since 1948. I wish to express my best wishes and Congratulations for your continued contributions to Sinhala kingdoms in this effort. I am sure with your support Rajpakse kingdom will make a clean Sinhala buddhist nation of criminals.
NANTHA
பணம் பத்தும் செய்யும். இந்த வெளினாட்டு உண்டியல் காவிகளால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் துயரங்கள் தொலையப் போவதில்லை என்பது தெரிகிறது.
மீண்டும் அதே கொள்ளைக் கும்பல் புறப்படுள்ளது. கொள்ளைக்காக.
thurai
தமிழர் தன்னைத் தானே ஆழ வேண்டுமானால் அதற்கு ஓர் தகுதி வேண்டும். பல சமூகங்களையும், ஏற்ரத் தாழ்வுகளையும், மேலாதிக்கங்களையும் உள்ளடக்கியுள்ளதே ஈழத்தமிழர். இவர்கள் ஒரே மொழி பேசினாலும் நடைமுறையில் இனம்மென்னும் ஒற்றுமையில்லாதவர்கள். இதுவே விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததற்குக் காரணம்.
படித்த சமூகம் கல்வி மேம்பாடடைந்தவ்ர்கள், அமெரிக்காவிலும், லண்டனிலும் உலக்முழுவதும் உயர் பதவிவகிப்பவர்கள் எங்களிற்கு நாடு ஆழ வேணும் என்று கேட்பதும் ஓர் இனத்தின் விடுதலை என்பதும் இரு வேறான விடய்ங்கள். இதனை தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுக்கும் புலிகளின் சாதாரண ஆதரவாளர்கள் புரிவத்ற்கும் சிந்திப்பதற்கும் இன்னும் 100 வருடமமாகும்.
ஈழத்தமிழரின் சக்திக்ள் புலியிடமிருந்து தமிழரைக்காக்கவே அதிகம் செலவாகிவிட்டது. புலிகளின் பேச்சு உள்ள வரை சிங்கள அரசு தமிழரின் உருமைபற்ரிய பேச்சை கணக்கிலெடுக்காது.
துரை
Ajith
தமிழர் தன்னைத் தானே ஆழ வேண்டுமானால் அதற்கு ஓர் தகுதி வேண்டும்
So, tamils are only eligible to work as slaves of Sinhala masters. Sinhala people have the right to rule themselves and rule tamils and muslims. This is the philosopy our friends are working towards. Gotapaya’s announcement of every inch of tamil homeland should be established with SInhala military is our frineds aim. It is easy for them to completely wipe out tamils from their homes, abductions and raping and murdering tamils. Best wishes.
thurai
தமிழைனத்தை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் தாங்களே தமிழினத்தின் காவலர்கள் என்போர் தங்கள் சுயந்லஙளை அனுபவிப்பதோடு நின்ற்விடாமல் தமிழரின் அழிவிற்கும் காரண்மாகவிருக்கின்றனர்.
இந்த நிலமையை முதலில் தமிழரிடமிருந்து அகற்ரிய பின்னரே சிங்களவர் தமிழர்களிற்கெதிராக என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்ரிக் கதைப்பது பொருத்தமானது.
துரை
Ajith
thurai
So, What you imply is to completely wipe out all the tamilsand make Sri Lanka as a nation of Sinhala only.
thurai
அஜீத், ஈழத்தமிழர்கள் யாவரும் தமிழ் மொழியைப் பேசினாலும் தாம் ஓர் இனம் என்னும் உணர்வுடன் வாழாதவர்கள். தமிழரிடையே பேரளிவைச் சரித்திரத்தில் எழுதியது தமிழீழப் போராட்டமேயாகும். இதற்கு என்ன காரணமென்பதை முதலில் ஆராய வேண்டும். நடந்த தவறை என்னவென அறியாமல் சிங்களவர்களை குற்ரம் சுமத்துவதால் மேலும் மேலும் தமிழினம் பிரச்சினைகளையே சந்திக்கும்.
துரை