60 வருட காலத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய அணுகுமுறை – இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAஅறுபது வருட காலத்திற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதியதொரு நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாராளுமன்றமாவது நியாயமானதும் நீதியானதுமான தீர்வைக் காணுமெனத் தாம் நம்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார். ஏழாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமான போது புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரைப் பாராட்டி உரை யாற்றினார்கள். இதன்போது சம்பந்தனும் உரையாற்றினார்.

சம்பந்தனின் உரை நேற்று முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. விபரம் வருமாறு :-

‘சபாநாயகர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற பாராளுமன்றம் முதன் முறையாகக் கூடியபோது சபாநாயகர் தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. ஆளுந் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையில் போட்டி ஏற்பட்டதால் முழு நாளும் வாக்கெடுப்பு நடந்தது.

இறுதியில் ஒரு வாக்கில் சபாநாயகர் தெரிவானார். நாம் 22 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். இம்முறை நீங்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்Zர்கள். இது இந்தச் சபை உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நான் உங்கள் தெரிவை வரவேற்கிறேன். உங்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறேன்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த நிலையில், சபை கூடுவதாகப் பிரதமர் உரையாற்றும் போது கூறினார். அது பொருத்தமான கருத்து. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது உண்மை. நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை நாம் வரவேற்கின்றோம்.

அதே சமயம், நாட்டில் சமாதானம், நீதி, நேர்மை ஏற்பட்டுவிட்டதாக நாம் கருத முடியாது, ஏற்க முடியாது. நீதி, நியாயம் மக்களுக்குக் கிடைக்க இந்தப் பாராளுமன்றம் பணியாற்ற வேண்டும். இதற்கு முன் இருந்த பாராளுமன்றங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை. கடந்த 60 வருட காலமாக நியாயமான, நீதியான தீர்வைக்காண்பதற்கு முடியவில்லை. புதிய பாராளுமன்றம் அதனை நிறைவேற்றும் என நம்புகிறேன். அரசியல் சாசனத்தையும் நிலையியற் கட்டளைகளையும் பாதுகாப்பது மாத்திரமன்றி மரபுகளும் உள்ளன.

பாராளுமன்றத்தின் கெளரவம் முழுமையாக உங்களில் (சபாநாயகரில்) தங்கியிருக்கிறது. உங்களின் கெளரவம் பாராளுமன்ற கெளரவத்தில் தங்கியிருக்கிறது. இதனைப் பிரிக்க முடியாது’ என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply to sumi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • PALLI
    PALLI

    // என நம்புகிறேன்.//
    ஆரம்பமே அபசகுனமாய் இருக்கு ஜயா,

    Reply
  • senathisenán
    senathisenán

    முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் பொதுமக்களின் கால்நடைகளைப் பிடிப்பதைக் கைவிட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

    வுன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் கால்நடைகளை இராணுவத்தினர் தமது பால் தேவைக்காகப் பிடித்து கட்டுவதைக் கைவிட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் வன்னிப்பிரதேச ஆயுதப்படைகளின் தளபதியிடமும் முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அத்துடன் வன்னிப்பிரதேசத்தில் உள்ள குளங்களில் வளரும் நன்னீர் மீன்வகைகளை வெளிமாவட்டத்தினர் பிடித்துச் செல்வதற்கு இராணுவத்தினரால் அளிக்கப்பட்டுள்ள அனுமதியையும் இரத்துச் செய்து உள்ளுர் நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு அந்த அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    வன்னிமக்களின் வாழ்வாதாரங்களில் பிரதான இடம்பிடிப்பவை விவசாயம் கடற்றொழில் கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழில்களாகும். ஏற்கனவே இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தங்கள் வசம் எஞ்சியிருக்கின்ற கால்நடைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கைச் செலவை ஓரளவிற்காவது சமாளிப்பதற்காகப் பெருமுயற்சி செய்து வருகின்றனர். இப்பொழுது அதற்கும் வழியில்லாத நிலை தோன்றியுள்ளது.

    அடையாளக் குறிகளுடன் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளைப் படையினர் தமது இராணுவ வண்டியில் வந்து ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்ட மாடுகளை ஒட்டிசுட்டான் – முல்லைத்தீவு சாலையில் ஒட்டிசுட்டானிலிருந்து சுமார் 600மீ தொலைவிலுள்ள கமநல சேவைகள் திணைக்களத்தின் பின்புறமுள்ள ஒரு இடத்தில் பண்ணை அமைத்து அதில் கொண்டுபோய் கட்டுகின்றனர்.

    24 ஆம் திகதி காலையிலும் கூட சுமார் 7.30மணியளவில் ஒரு வீட்டில் கட்டியிருந்த மூன்று எருமைமாடுகளை இராணுவத்தினர் சீருடையில் வந்து அவிழ்த்துச் சென்றுள்ளனர். ஏன் இப்படிச் செய்கின்றீர்கள் என்று உரிமையாளர் கேட்டதற்குத் தங்களது பண்ணைக்கு வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

    இராணுவத்தினரின் பால்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காககவே இவ்வாறு மாடுகள் கபளீகரம் செய்யப்படுவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    சிலர் தமது மாடுகளை அடையாளம் காட்டி விட்டுவிடுங்கள் என்று கேட்டதற்கு முறையாகப் பதில் அளிக்காமல் படையினர் உடனடியாக அந்த மாடுகளை வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு பலமாடுகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

    அடுத்ததாக வன்னி நிலப்பரப்பில் ஏராளமான குளங்கள் உள்ளன. இக்குளங்களில் நன்னீர் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன. வன்னி மக்களின் உணவில் நன்னீர் மீனும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. இராணுவத்தினர் இந்த மீன்களைப் பிடிப்பதற்கென்றே வெளிமாவட்டங்களிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே இங்குள்ள குளங்களில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதிக் குளங்களுக்குச் சொந்தமான அந்த கிராமவாசிகள் தமது தேவைக்குக்கூட மீன்களைப் பிடிக்க முடியாதுள்ளதுடன் சிங்களர்கள் பிடிக்கும் மீன்களைக்கூட இவர்கள் வாங்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. அவர்கள் பிடிக்கும் மீன்கள் முழுவதும் தென்பகுதிகளுக்குக் குளிரூட்டிய வாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதனைப்போன்றே நந்திக்கடல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளில் கடலில் இறால் பிடிப்பதற்குத் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் கைவிட்டுச் சென்ற பொருட்களை இவர்கள் எடுத்துச் செல்கின்றனர் என்று காரணம் சொல்லி கடல்மீன்பிடித் தொழிலையும் இப்பொழுது இல்லாமல் செய்துவிட்டனர்.

    ஏற்கனவே போர் அவலத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து எமது மக்கள் இடம் பெயர்ந்து ஏதுமற்றவர்களாக அங்கும் இங்கும் அலைக்கழிந்து இவர்களில் ஒருபகுதியினர் ஒருவாறாக தமது இடங்களுக்குச் சென்று தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கிக்கொள்ளலாம் என நினைத்திருக்கையில் இவ்வாறான இடையூறுகள் அவர்களை மேலும் சலிப்படையச் செய்துள்ளன.

    எமது மக்கள் விட்டுச் சென்ற வீடுகளில் இருந்து ஏராளமான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன அவர்களின் வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் கால்நடைகளும் இப்பொழுது படையினரால் கபளீகரம் செய்யப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் நல்லதொரு முடிவினைப் பெற்றுத்தருமாறு எமது மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வன்னிமாவட்ட கட்டளைத்தளபதிக்கும் முறையிட்டு நடவடிக்கை எடுக்கும்படிக் கோரியுள்ளேன்

    Reply
  • sumi
    sumi

    காக்கா பிடிப்பதற்கும் அனுபவம் வேண்டும் அல்லவா.

    Reply
  • rohan
    rohan

    தங்கேஸ்வரி கதிர்காமர் அம்மையார் சொல்லியுள்ளதைப் பார்த்தீர்களா? “ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் அதனைத் தான் பெரும்பாலான மக்கள் தொடர்ந்தும் நம்புகிறார்கள். இதனை மாற்ற முடியாது என்பதனை இப்போது புரிந்து கொண்டேன்.” என்று சொல்லியுள்ளார் அவர்.

    “படுவான்கரையிலுள்ள பெரியபுல்லுமலை என்ற பிரதேசத்தை எடுத்துப் பாருங்கள். இந்தப் பகுதிகளில் எல்லாம் மேலோட்டமான அபிவிருத்தி தான் காணப்படுகிறது. ஆனால், உள்ளே ஒன்றுமே இல்லை. கட்டுமுறி என்ற கிராமத்துக்குச் சென்று பார்த்தபோது அரசாங்கம் பல விடயங்களை வெறும் அறிக்கைகள் மூலம்தான் செய்து வருகிறதென்பதை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.” என்று வேறு தங்கேஸ்வரி கதிர்காமர் சொல்லியிருக்கிறார்.

    Reply