ஏழாவது பாராளு மன்றத்தின் பிரதி சபா நாயகராக பிரியங்கர ஜயரட்ன ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க ப்பட்டார். அதேநேரம் குழுக்களில் பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபை நடவடிக்கைகள் புதிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானபோது காலை 9.50 மணியளவில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
சபாநாயகரின் அறிவிப்பை யடுத்து முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் பிரதி சபாநாய கராகவிருந்த பிரியங்கர ஜயரட்னவின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.
வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பிரதி சபாநாயகரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குழுக்களின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிமொழிந்தார். குழுக்களின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவானார்.
பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.
sarujan
”பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.”
இதில் ஒன்றும் திருப்பமில்லை. எதிர்த்தரப்பின் கையாலாகாத புத்திசாலித்தனம்.
கடந்த காலங்களில் ஒரு ஆசனம் மட்டும் வைத்திருந்த கட்சிகளே அரசை ஆட்டிப்பார்த்தன. இப்போதெல்லாம் அது முடியாது. தென்னிலங்கை அரசியலை சிறுபான்மை கட்சிகளே தீர்மானிக்கிறார்கள் என் கதையும் முடிந்தது. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் இனி ‘அரசியல்’ நடத்திப்பியோசனமில்லை. இணக்கப்பாட்டு அரசியலும் கூட இனி பலவீனமான நிலையில்தான்.
cedric
well done. good start
kalaignar
உள்வீட்டுச் சண்டைகள், வன்முறைகள், கேலிச் சம்பவங்களுக்கு மத்தியில் இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
பெருந்தொகை மக்கள் வாக்களிப்பில் ஆர்வம்காட்டாத போதிலும், முடிவுகள் என்னவாயிருக்கும் என்பதில் கவனம் செலுத்த அவர்கள் தவறவில்லை.
சரி….அது போகட்டும்….
தேர்தல் தினம். அன்றைய வாக்களிப்பின்போது, குறிப்பிட்ட சில வாக்கெடுப்பு நிலையங்களில் நடந்த விடயங்கள் தற்போது ‘ வெளிச்சத்’ துக்கு வந்துள்ளன.
நண்பர் ஒருவர் மாளிகாவத்தையிலுள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றிருக்கிறார். அவருடைய பெயரை வாசித்தவுடன் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர்,
“நீங்கள் இந்தச் சின்னத்துக்குத் தானே வாக்களிக்கப் போகிறீர்கள்? அது இங்கே இருக்கிறது…..” எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார் கேலியாக….
தமிழர்கள் என்றால் எவ்வளவு கேவலமாய் நினைத்திருக்கிறார்கள் அவர்கள்? இப்படியான அதிகாரிகளைத் தான் நியாயவாதிகள் என அரசாங்கம் நியமித்திருக்கிறதோ?
தேர்தல் கடமையின்போது, கட்சி வேறுபாட்டை வெளிப்படுத்தாத வகையில், வெள்ளை உடை அணிந்து வருமாறு அதிகாரிகள் கேட்கப்படுகிறார்கள்.
மனதுக்குள் இத்தனை நச்சுத் தன்மையை வைத்துக்கொண்டு உடை மட்டும் வெண்மையாக இருந்து என்ன பிரயோசனம்?
இதேபோன்ற சம்பவங்கள் கொழும்பில் மட்டுமல்ல, இரத்தினபுரியிலும் மட்டக்களப்பிலும் கூட நடந்திருக்கின்றன.
“நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள். இருந்தும் உங்கள் எண்ணங்களை விட்டுக் கொடுக்க முடியவில்லை. பாதாளத்தில் விழ நீங்களே துடிக்கும்போது காப்பாற்ற நாங்கள் யார்?” என கிண்டலாக மட்டக்களப்பில் ஓர் அதிகாரி வாக்காளர் ஒருவரிடம் கேட்டிருக்கிறார்.
இந்த நாட்டில் சிறுபான்மை என்ற ஓர் இனம் இல்லை. தாய்நாட்டை நேசிக்காதவர்கள் மாத்திரமே சிறுபான்மையினத்தவர்கள் என ஜனாதிபதி ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு நேர் விரோதமாக தமிழ் மக்கள் இவ்விதமாக இழிவுபடுத்தப்படும் போது, நீதி எங்கே? நியாயம்தான் எங்கே?
இவ்வாறானவர்கள் இருக்கும் வரை தான் பிரச்சினைகளும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் சமநிலைவாதம், சுதந்திரம், நியாயம் எனக் கதைப்பதில் எந்தவித பயனும் இல்லை.
நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய காத்திரமான தேர்தலின்போது, பொறுப்புள்ள கடமையைச் செய்ய வேண்டிய இத்தகைய அதிகாரிகளின் அட்டகாசம் குறித்து தேர்தல் திணைக்களம் அவதானமாக இருப்பதுடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.
-என். அஞ்சனா