இந்திய பொலிஸாரால் தேடப்பட்ட சுவாமி நித்யானந்தா கைது!

nithya.jpgபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சர்ச்சைக்குள்ளான நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிள்ளன. இமாச்சலத்தில் உள்ள சோலன் என்னுமிடத்தில் அவரை கர்நாடக பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.

Show More
Leave a Reply to meerabharathy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • Suman
    Suman

    /நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது/ உல்லாசமாக இருப்பது குற்றமென்றால் ஜெயலலிதா அம்மையாரில் இருந்து கருணாநிதி பூட்டன் வரை நடத்திய உலாசத்திருவிளையாடல்களை எந்தக் கோட்டில் ஏற்றப்போகிறீர்கள்? சாமியார் உல்லாசமாக இருக்கக்கூடாது என்ற எங்கு சட்டம் இருக்கிறது. ஒரு நடிகை சாமியாரை விரும்பக் கூடாது என்று எங்கேயும் சட்டமில்லை. பேரின்பத்தைப் போதிக்கும் மதம் சிற்றின்பமறியாமல் பேரின்பத்தை அடையுமுடியாது என்றும் சொல்கிறது. கமராவை களவாக வெத்துப் படமெடுப்பது சர்வதேசக் குற்றம். அதை மன்னிக்கும் இந்திய நீதிமன்றம் சாமியாரைத் தண்டிக்க நிற்கிறது. இந்துமதம் காமத்துக்கு எதிரானது அல்ல. கமத்தினூடாகவும் கடவுளை அடையாலாம் என்பதை கூறுவதோடு காமத்தை புனிதமாக்கி அதனூடாக வரும் ஆத்மாவை மரியாதைக்குரியதாக்கிய ஒரே மதமும் இந்து மதம்தான். விரல்விட்டு விமர்கிக்கலாம் என்பதால் கன்னா பின்னா என்று எல்லாம் எழுதித் தள்ளுகிறீர்கள். இதை ஒரு முஸ்லீம் முல்லாவுக்குச் செய்வீர்களா?

    Reply
  • மாயா
    மாயா

    ஊடல் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் மிக முக்கிய யோக நிலை. இந்துக்களின் கோயில்களிலேயே பலவிதமான களியாட்ட நிலைகளை முன்னவர்கள் சிற்பமாக செதுக்கினார்கள். அவை அடுத்தவர்களுக்கும் பாடமாக வேண்டும் என்பதற்காகத்தான். பலாத்காரம் மோசமானது. இது அப்படியில்லை. எனவே இவர்களது ஊடலில் எவருக்கும் பாதகமில்லை என்றே கருதுகிறேன்.

    Reply
  • palli
    palli

    suman உங்கள் சொற்பொழிவு மிக அருமை, நீங்களே உங்கள் சுவாமிஜிக்கு வக்கிலாக போகலாம்,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….ஊடல் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் மிக முக்கிய யோக நிலை….//suman
    ஊடல் என்பது பிரிவால் வரும் நிலை. அது வேதனை, மனஉளைச்சலைத்தருவது. மாறாக ”கூடல்” என வரவேண்டும். இந்யோக நிலையையே புகழ்பெற்ற அமெரிக்க சாமி ‘ரஜ்நீஷ்’ பின்பற்றினார்!

    //…..விரல்விட்டு விமர்கிக்கலாம் என்பதால் கன்னா பின்னா என்று எல்லாம் எழுதித் தள்ளுகிறீர்கள். இதை ஒரு முஸ்லீம் முல்லாவுக்குச் செய்வீர்களா?….//
    எல்லாம் சரியாக எழுதிவிட்டு கடைசி இரு வரிகளில் தடம் புரள்கிறீர்கள். இங்கு யாரும் ’விரல்விட்டு’ விமர்சிக்கவில்லை. செய்வது ‘தமிழ்க்காவலர்’ கலைஞருக்கு ‘சொந்தமான’ சன் ரி.வி யே. முல்லாவை விமர்சிக்க மாட்டீர்கள் என நீங்கள் கேட்பது ’முஸ்லீம் எதிர்ப்பு’ புலிகளை எதிர்க்கும் ‘ஜனநாயகவாதி, களிடம் தானே!

    Reply
  • meerabharathy

    காமம் பிரம்மச்சாரியம் மனிதர்கள் சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1
    ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். …………..

    காமம் பாலுறவுகள் சமூகம் மற்றும் குழந்தைகளும் வாலிப வயதினரும் – ஒரு பார்வை- பகுதி 2

    காமம், ஆண்கள், (ளின்) சமூகம், பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

    தொடர்ந்தும் வாசிக்க..awakeningawareness.org

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்நியாசிகள் என்போர் சகலதையும் “துறந்தவர்கள்” என்றுதான் அர்த்தம். இந்து மத கோட்பாடுகளில் சந்நியாசம் கொள்பவர்கள் ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பது விதி. நித்யானந்தாவும் பிரசங்கம் பண்ணியதும் அந்த அடிப்படையிலேயே. ஆனால் அவரால் ஆசைகளை அடக்க முடியாது போனது மட்டுமின்றி இந்துக்களின் நம்பிக்கைகளை உபயோகித்து “மோசடி” செய்தார் என்பதுதான் உண்மை. அவருக்கு “பெண்” உறவு தேவை என்றால், சந்நியாசி நிலையிலிருந்து விலகி போய் அதனைச் செய்திருக்கலாம். இந்து மதம் தடை விதிக்கவும் மாட்டாது வெறுக்கவும் போவதில்லை.

    காமத்திநூடாக கடவுளைக் காணலாம் என்று இந்து மதத்தில் எங்கும் கிடையாது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //‘தமிழ்க்காவலர்’ கலைஞருக்கு ‘சொந்தமான’ சன் ரி.வி யே. முல்லாவை- சாந்தன்//

    சாந்தன் எப்ப தொடக்கம் சண் தொலைக்காட்சி கலைஞருக்கு சொந்தமானது. அப்போ கலைஞர் தொலைக்காட்சி கலாநிதி மாறனுக்கு சொந்தமானதோ??. சண் தொலைக்காட்சி நித்தியாணந்தரின் காமக் களியாட்டங்களை வெளிக்கொணர்நததில் என்ன தப்பு?? அமெரிக்காவிலுள்ள நித்தியானந்தரரின் ஆச்சிரமத்திலுள்ள ஆலயக் கற்பக்கிருகத்தின் அருகிலேயே அவர் காமக் களியாட்டம் நடாத்த ஒரு பள்ளியறையை வைத்துள்ளாராம். அந்த அறைக்கு ஒவ்வொரு நாளும் எந்தப் பெண்ணை அனுப்பதென்பதை நித்தியானந்தாவின் உதவியாளரான பெண்ணொருவரே முடிவெடுப்பாராம். இதைச் சொன்னது சண் தொலைக்காட்சியல்ல அமெரிக்க வெள்ளையினப் பெண்மணியொருவர். பிரம்ச்சரியம் பற்றி மற்றவர்களுக்கு போதித்துக் கொண்டு நித்தியானந்தா காமக் களியாட்டத்தை நடாத்தியதை தங்களைப் போன்றோர் வக்காலத்து வாங்குவது ஆச்சரியமானதல்ல. ரஞ்சிதா தன்னுடன் லயித்திருந்தபோது தான் சமாதி நிலையில் இருந்ததாக நித்தியானந்தா சொல்லியுள்ளார். சமாதி நிலையிலிருப்பவர் துள்ளிக் குதிப்பதும் கட்டியணைப்பதையும் எப்படிச் செய்ய முடியுமென்பதும் அவருக்குதான் வெளிச்சம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சண் தொலைக்காட்சி நித்தியாணந்தரின் காமக் களியாட்டங்களை வெளிக்கொணர்நததில் என்ன தப்பு?…// பார்த்திபன்,

    ஏன் அவசரப்பட்டு என்னை அற்றாக் பண்ணுகிறீர்கள். நான் இந்த சாமியார், ஐயர், மத பீடம், தேர்முட்டிக்கு காசு கொடுத்தல், கும்பாபிசேக நன்கொடை கொடுத்தல் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவன். மேலும் இலெக்சன் காலத்தில் தாம் முன்னர் செய்த திருகுதாளங்களை மறைக்க கோவில்களுக்கு நன்கொடை செக்குகள் கொடுப்பதை ‘ஏதோ மக்களுடன் நிற்கிறார்’ என்ற போர்வையில் ஆதரிப்பவனுமல்ல.

    ஆனாலும் இங்கே சுமன் சொன்ன சில விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. முதலாவது யாரும் தனிப்பட்ட விடயங்களை அவருக்குத் தெரியாமல் அம்பலப்படுத்தக்கூடாது. அது குற்றச்செயல்.முக்கியமாக படுக்கையறை விடயங்கள். இதில் மாட்டுப்பட்ட சாமியார்மீது ‘நம்பிக்கை மோசடி’ குற்றச்சாட்டில் மட்டுமே வழக்குத்தாக்கல் செய்யலாம். அதாவது பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கிறேன் எனச் சொல்லி ஏமாற்றியது. ஆனால் அவர் தன்னை ஏமாற்றி ஒழித்துவைத்த கமராவின் மூலம் தனது அந்தரங்கத்தில் ஊடுருவல் செய்ததாக பதில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசு ‘இமியூனிற்றி’ வழங்குவதன் மூலமே அவர் தப்பிக்கலாம்.

    மேலும் கருணாநிதி மனைவி உயிருடன் இருக்கும்போது ‘துணைவி’ வைத்திருக்கிறார். இது இந்திய சட்டப்படி குற்றம். ஏன் தண்டிக்கப்படவில்லை எனற சுமனின் கேள்வி நியாயமானதே. இல்லையா? இதை அம்பலப்படுத்த ‘முன்னாள் பங்குதாரர்’ கருணாநிதியின் சன் ரீ.வீ முன்வருமா?
    இன்றைக்கு அவர் தனது ‘பங்குகளை’ விற்று மனைவிக்கும் துணைவிக்கும் பகிர்ந்தளித்திருக்கலாம், ஆனால் சன் ரி.வி என்றால் கருணாநிதி என்பது மறுக்க முடியாது. ரெக்னிக்கலாக அவர் பங்காளராக இல்லாமல் இருக்கலாம், அனால் கலைஞர் ரி.வி ஆரம்பம் பற்றி நீஙகள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    ///….தங்களைப் போன்றோர் வக்காலத்து வாங்குவது ஆச்சரியமானதல்ல….//
    இது மணி!! சிறிலங்கா ராணுவம் நிர்வாணமாக்கி கைதிகளை படுகொலை செய்த வீடியோவில் தாடி இருக்குது, சாகிறவன் ஷேவெடுக்கவில்லை என வக்காலத்து வாங்கியவர்களிலும் நான் ஒன்றும் குறந்துபோகவில்லை. ஒரு நடிகை விரும்பி ஒரு ‘சாமியாருடன்’ ‘காம’ , ‘களியாட்டம்’ நடத்தியதை வக்காலத்து வாங்குவது (சட்டப்படி) ஒன்றும் குறைந்து போகாது!

    Reply
  • BC
    BC

    காவியை கண்டாலே ஏமாற தாயாரக இருக்கும் பெரும்பான்மையை கொண்ட மக்களிடம் மோசடி நித்யானந்தாவை அம்பலபடுத்தி உண்மையை உணரவைத்த சண் ரிவியை எவ்வளவும் பாராட்டலாம்.

    Reply
  • PALLI
    PALLI

    நித்தியானந்தா சின்ன பையந்தானே அவர் வயது கோளாறில் ஏதோ செய்துவிட்டார் அதை ஏன் நாம் அலட்டிக்குவான், ஆனாலும் பார்த்திபன் சொன்ன துள்ளல் நித்தியானத்தாவுக்கு சிறிது ஓவர்தான்;

    Reply