தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்படவுள்ளன. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ராஜதந்திர கடவுச் சீட்டு ரத்து செய்யப்பட்டு சாதாரண கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்களை உடனடியாக அமுலுக்கு வரும வகையில் ரத்து செய்வதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் அபேகோன் பண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற ஆணையாளருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    றோகித போகல்லகம இனி நான் எங்கும் போகல்ல என்று கிராமத்துக்குப் வேண்டியது தான்.

    மகளின் பிறந்த நாளை அரச செலவில் கொண்டாட முடியவில்லை என்று ஒரு மன வருத்தம் இருக்கும் தான், என்ன செய்வது?

    Reply