இன்று விகிர்தி புதுவருட பிறப்பு

new.jpgபுதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் இன்று புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் இன்று புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இப்புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்து சித்திரைப் புத்தாண்டை கொண்டாடலாம்.

Show More
Leave a Reply to T Sothilingam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • NANTHA
    NANTHA

    தமிழர்களும் சிங்களவர்களும் காலம் காலமாக ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் புது வருடத்தை கொண்டாடுவது இனி இன ஐக்கியத்தின் ஓர் திருநாளாக மலர வேண்டும் என்று எண்ணுகிறேன். சகல தேசம் நெட் ஆர்வலர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வடைகிறேன்!

    Reply
  • palli
    palli

    தேச நண்பர்கள் அனைவர்க்கும் பல்லியின் புதுவருட வாழ்த்துக்கள்.

    இந்த வருடத்திலாவது மக்கள் அழிவுக்கில்லாமல் வாழ்வுக்காய், வாதங்கள் வந்தாலும் அதை பகையாய் கொள்ளாமல் மறந்து, எம்மக்கள் வாழ யார் தடையாய் இருந்தாலும் அவர்களை விமர்சிப்போம் ஒற்றுமையாய்;

    நட்புடன் பல்லி;

    Reply
  • itam
    itam

    விகிர்தி புதுவருடப் பிறப்பானது அனைத்து வழிகளிலும் சிறப்புக்களை சேர்க்க பிரார்த்தித்துக் கொள்வதோடு அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

    Reply
  • Nackeera
    Nackeera

    சித்திரை மாதத்துப் புத்திரி வந்தாலும்
    புத்தாண்டு ஒன்று
    புதுச்சேலை புனைந்தாலும்
    செத்தாண்டை நினைத்து
    சிதைத்து போகும்
    சீர்கொணர் சாதியில்
    சினங்கொணரா சீருடைத்து
    நம்பிக்கையில் கரமுயர்த்தி
    நாணயத்தில் நாசுவைத்து
    பொங்கிடும் புத்தாண்டே
    எம்மினத்துக்காய்
    ஒளிமிளிர்வாய்.

    நோர்வே நக்கீராவின் நயமுடை வாழ்த்துக்கள்

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தேசம் வாசகர்கள் நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்
    இந்த தமிழ் சிங்கள புதுவருடம் இன ஜக்கியத்தையும் சமாதானத்தையும் வலுப்படுத்தி புதிய இலங்கையை கட்டியெழுப்பும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    தமிழ் (இந்திய) புதுவருட வாழ்த்துக்கள்.

    சித்திரை ஒன்னாந்தேதியை தவிர்த்து, அதை ஆரியர்களின் புதுவருடமாக, திராவிட கலைஞர் மு.கருணாநிதி கருதி, சிங்களவர்களை ஆரியர்களாக? முத்திரை குத்துவது, உலக செந்தமிழ்? மாநாட்டில், “முரசொலிக்கு முடிசூட்டவே!”. ஒற்றுமையின் சின்னத்துடன் அனைவரும் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள்!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Tamil Nadu Chief Minister M. Karunanidhi Tuesday piloted a bill in the state assembly to change the Tamil New Year day from April 14 to the state’s harvest festival Pongal, which falls Jan 14-15. The move has drawn much public ire.

    Karunanidhi claimed that he had consulted various Tamil scholars and cultural experts before moving the ‘Tamil Nadu Tamil New Year (Declaration) Bill 2008’.

    Reply