தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் போட்டியிட்ட சகலரும் படுதோல்வி

Pathmini Sithambaranathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.க்களான எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர். கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான சிவநாதன் கிஷோரும் ரி.கனகரட்ணமும் இம்முறை வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவர்களும் படுதோல்வியடைந்தனர்.

இதேநேரம், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான செல்வி கே.தங்கேஸ்வரி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவரும் தோல்வியடைந்தார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் புதுமுகங்களாக ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோரும் மட்டக்களப்பில் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply to Nirthanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலியாதரவினால் கூட்டமைப்பில் சங்கமமானவர்கள் எப்படி கள்ள வாக்குகள் மூலமும் புலிமிரட்டல்கள் மூலமும் வெற்றி பெற்றார்கள் என்பது நாடறிந்த விடயம். குறிப்பாக கஜேந்திரன் எப்படியெல்லாம் கள்ள வோட்டுக்களை கையாண்டார் என்பது பற்றி அப்போதைய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரே மனம் நொந்து ஒரு அறிக்கை கூட விட்டார். இதனை நிதர்சனமாக்கி இன்றைய இவர்களின் படுதோல்வி கட்டியம் கூறி நிற்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர் சிறிகாந்தா ஐரோப்பிய வானொலியொன்றில் தான் மீண்டும் வெற்றி பெறுவது தனக்குச் சாதாரண விடயமெனவும், மீண்டும் இதே வானொலியில் தமிழ் மக்களின் எம்பியாகவே மீண்டும் கலந்து கொள்வேனெனறும் சூளுரைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Reply
  • Ajith
    Ajith

    புலியாதரவினால் கூட்டமைப்பில் சங்கமமானவர்கள் எப்படி கள்ள வாக்குகள் மூலமும் புலிமிரட்டல்கள் மூலமும் வெற்றி பெற்றார்கள் என்பது நாடறிந்த விடயம்
    Exactly Douglas and Rajapkse did the worse during this forced election. Douglas forced all government servants to vote for him. In Navalapitiya Rajapakse party stole boxes from polling booths and packed them withtheir votes. In Tricomallee same. In Vanni same thing.
    During last election LTTE was not in Jaffna. Only EPDP was there with Sri Lankan Sinhala forces forcing and killing people. It is great that people had shown courage to vote TNA against the corrupt, violent Rajapkase and Douglas group.

    Reply
  • Nirthanan
    Nirthanan

    பாவம் பத்மினி. அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலை. இனி இங்கிலாந்து, அமெரிக்கா,நோர்வே என்று சிதம்பரனோட கூத்து போட ஏலாது. ஆனாலும், இவர்கள் இருவரும் பிழைக்க தெரிந்தவர்கள், ஏதாவது புதுசாக பேய் காட்டுவார்கள். பழையபடி படிப்பிக்க போனாலும் முந்தி மாதிரி மாணவர்களை பேக்காட்ட ஏலாது. பழைய பள்ளிகூடங்களும் இவர்களை சேர்க்காது.

    Reply