நீதியான தேர்தல் அல்ல; அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் தீர்மானம் – ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க

பாராளுமன்றத் தேர்தலானது நீதியாகவோ, சுதந்திரமாகவோ இடம்பெறவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ்சாட்டியதுடன், குறிப்பிட்ட சில இடங்களில் மீள வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுப்பது தொடர்பாக தாங்கள் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறது.

வாக்காளர் அச்சுறுத்தப்பட்டமை,தேர்தல் முகவர்களை மிரட்டியமை போன்ற பல சம்பவங்கள் குறித்து தங்களுக்கு அறிக்கைகள் கிடைத்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். எதிர்க்கட்சிகளின் முகவர்கள் விரட்டப்பட்டதாகவும் அதனால் இந்தத் தேர்தலை நீதியான தேர்தல் எனக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

“இது நேர்மையான தேர்தல் அல்ல. விரைவில் என்ன நடவடிக்கை எடுப்பதென்பது குறித்து நாங்கள் கலந்துரையாடவுள்ளோம்  என அவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு வீதம் மிகவும் தாழ்ந்த மட்டத்திலிருப்பதை ஐ.தே.க.வுக்குக் கிடைத்த அறிக்கைகள் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கம் பல தேர்தல்களை நடத்தியதால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகத் தென்படுவதாக அவர் மேலும் கூறினார். இது இவ்வாறிருக்க எதிரணியின் தேர்தல் முகவர்கள் விரட்டப்பட்ட பல சம்பவங்களை தேர்தல் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அத்துடன், சில முகவர்கள் கடமைக்கு சமுகமளித்திருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to mathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • mathan
    mathan

    தோற்கிற கட்சி எப்பவும் தேர்தல் நேர்மையாய் நடக்கவில்லை என்றுதான் குறை கூறுவதுதான் வழக்கம்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    முதலில் ஜனாதிபதித்தேர்தலில் நடந்த அநீதிக்கு நீங்கள் போட்ட வழக்கு என்ன நிலையில் இருக்கிறது எனச் சொல்லுங்கள்!

    Reply
  • Ajith
    Ajith

    வாக்காளர் அச்சுறுத்தப்பட்டமை,தேர்தல் முகவர்களை மிரட்டியமை போன்ற பல சம்பவங்கள் குறித்து தங்களுக்கு அறிக்கைகள் கிடைத்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். எதிர்க்கட்சிகளின் முகவர்கள் விரட்டப்பட்டதாகவும் அதனால் இந்தத் தேர்தலை நீதியான தேர்தல் எனக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

    The election commissioner himself powerless to stop election violence. With the presidential election, he said he will leave the post. The whole law enforcing system is now working for one man who is beyond the reach of law and order. These are minor allegations in compared with the arrest of Sarath Fonseka. You may not surprise that Sarath Fonseka may contest in the next election as a Rajapakse party.

    Reply