நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இந்தக் காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவதான நிலையம் பொது மக்களை கேட்டுள்ளது.
கடந்த இரு தினங்களில் மின்னல் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இடி மின்னல் வேளைகளில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இடி, மின்னல் வேளையில் கையடக்கத் தொலைபேசியுடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த நபர் ஒருவரை மின்னல் தாக்கியதில் நால்வர் மாத்தளை பகுதியில் காயமடைந்தனர். மின்னல் தாக்கியதில் நேற்று முன்தினம் புசல்லாவ பகுதியில் ஒருவர் இறந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார்.