யாழ்ப் பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 437 வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், எஞ்சியுள்ள வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
220 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டில் இரு அறைகள், ஒரு சமையலறை மற்றும் மலசல கூடமும் உள்ளடக்கப்படவுள்ளன. நிரந்தர வீடுகள் இல்லாத நிலையிலுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வமாக உள்ள சொந்த காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
யாழ். அரசாங்க அதிபர் ஒவ்வொரு வீடுகளுக்கும் 12 கூரைத் தகடுகளை வழங்கியுள் ளதுடன் இந்த மக்களின் ஜீவனோபாயத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினர் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சமூக உதவித் திட்டங்களை நாளாந்தம் மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட் டார்.
NANTHA
நம்ம TRO பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்கப் போவதாக தமிழர்களிடம் தெண்டிய பணத்தின் கதி என்ன? பத்து வீடுகள் கட்டியதாகத் தகவல்கள் இல்லை!
சாந்தன்
இருக்கிற வீட்டில் மக்களை விட்டாலே இருந்து விட்டு போவார்கள். அவற்றை உயர் பாதுகாப்பு வலயம் என சுருட்டிவிட்டு 400 வீடு கட்டுறாங்களாம். நல்ல ஜோக் தான்.
மாயா
//சாந்தன் on March 31, 2010 4:48 pm இருக்கிற வீட்டில் மக்களை விட்டாலே இருந்து விட்டு போவார்கள். அவற்றை உயர் பாதுகாப்பு வலயம் என சுருட்டிவிட்டு 400 வீடு கட்டுறாங்களாம். நல்ல ஜோக் தான். //
சில இடங்களில் வீடுகள் உண்டு. அவற்றின் நிலைகளும் இல்லை, கூரைகளும் இல்லை. அனைத்தையும் புலிகள் போகும் போதே கழட்டிக் கொண்டு போய் விட்டார்கள். அத்தோடு பல வீடுகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி சேதமாகிய நிலையில் உள்ளன. நல்ல நிலையில் உள்ள வீடுகளில் மக்கள் இருக்கிறார்கள். பல வேளைகளில் , வீடில்லாதோர் , உரிமை கோராத வீடுகளில் வாழ்கிறார்கள். கட்டப்படும் வீடுகள் , வீடில்லாதவர்களுக்குத்தான். உரிமை கோராத வீடுகள் , வீடில்லாதோருக்கு வழங்கப்படுகின்றன. உடைந்த வீடுகளைத் திருத்துவதை விட , புதிய வீடுகளை கட்டுவதும் லாபம் , அழகான ஒரு பகுதியாக குடியிருப்பாக வடிவமைப்பதும் அழகு. அத்தோடு பாதுகாப்புக்கும் உகந்தது. அதுவே வன்னியில் நடக்கிறது.
palli
சாந்தன் எல்லாத்துக்கும் அடம்பிடிக்ககுடாது; கொடுத்தால் பாராட்டுவோம்; இல்லையேல் விமர்சிப்போம்; தமிழீழ அரசைவிட இலங்கை அரசு பரவாயில்லை என்பது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களுக்காய் ஏற்ப்பது இன்றய தேவையல்லவா? சுறாவுக்கு வலை போட்டீர்கள் ஆனால் றால் தானாகவே மாட்டும் போது அதை தடுக்க வேண்டாமே,
thurai
//இருக்கிற வீட்டில் மக்களை விட்டாலே இருந்து விட்டு போவார்கள். அவற்றை உயர் பாதுகாப்பு வலயம் என சுருட்டிவிட்டு 400 வீடு கட்டுறாங்களாம். நல்ல ஜோக் தான்.// சாந்தன்
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வீட்டை விட்டு விட்டு எங்கழுடன் வாருங்கள் என் வன்னிக்கு அழைத்த புலிகள் கல் வீட்டில் இருந்தவர்களிற்கு குடிசை போட்டுக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் வன்னிக்கு புலியின் பின்னால் வந்தவ்ர் வீடு கட்ட மரம் தறித்ததற்கு
மறியலில் வைக்கப்பட்டாரென்பது எனக்கு தெரியும்.
சாந்தன், தலைவர் விட்டது தமிழீழ ஜோக், மகிந்தா விடுவது சிறிலங்கா ஜோக். எது நல்லதென இனியாவது சொல்லுங்கள்.
துரை
சாந்தன்
அதுசரி ஏன் ராணுவம் வீடு கட்ட வேண்டும்?
ராணுவத்தின் வேலை வீடுகட்டுவதல்ல.
தேசிய வீடமைப்பு சபை என்ன செய்கிறது?
மாயா
//தலைவர் விட்டது தமிழீழ ஜோக், மகிந்தா விடுவது சிறிலங்கா ஜோக். எது நல்லதென இனியாவது சொல்லுங்கள். – துரை //
தலைவர் விட்டது செந்தில் கொமடி. மகிந்த விடுவது கலைவாணர் கொமடி. சரத் விட்டது கவுண்டர் கொமடி.
நேற்று புலி பாடசாலையில் தமிழ் கற்கும் ஒரு குழந்தையின் எழுத்து பிழைகள் திருத்தியுள்ள ஒரு கொப்பியை அக் குழந்தையின் தாயார் காட்டினார். ஊஞ்சல் என குழந்தை சரியாக எழுதியதை பிழையென சொல்லி ஊஞ்ஞல் என ஆசிரியை எழுதிக் கொடுத்து அனுப்பியிருந்தார். என்ன கொடுமை? இவர்களைப் போன்றவர்களெல்லாம் புலிகளின் பாடசாலைகளில் ஆசிரியர்கள். போய்க் கேட்க வேண்டியதுதானே என்றேன். பிறகு உள்ளதும் கெட்டுவிடும் என்றார். இன்னும் மொக்கு புலி வால்கள், வளரும் பிள்ளைகளின் தமிழையும் சாகடிக்கிறார்கள். தமிழே தெரியாதவர்கள் தமிழீழம் கேட்டது சிங் காமடி மாதிரி, பெரிய காமடி.
NANTHA
ஜானக பெரேராவும் சரத் பொன்சேகாவும் புலிகளை யாழ்ப்பானத்திலிருந்து துரத்திய போது தங்களுக்கு மனித கேடயங்களாக மக்களையும் ஆடு மாடுகள் போல ஓட்டிச் சென்றார்கள். அப்போது வீட்டு கூரைகள், கதவுகள், என்பனவற்றையும் பிடுங்கிச் சென்றது புலிகள். வன்னியில் புலிக் கொலைகாரர்களின் அட்டூளியத்தொடு மரங்களின் கீழ் வாழ்வதை விட “குண்டடிபட்டு” சாவது மேல் என்று வீடு திரும்பிய மக்கள் வீடுகளின் சுவர்களியே கண்டார்கள்.
கிளிநொச்சியில் தங்களது வீட்டுக் கதவுகளையும் கூரைத் தகரங்களையும் புலிகள் விற்றுக் காசாக்கியதைக் கண்டவர்கள் அதிகம்!
உயர் பாதுகாப்பு வலயங்கள் உண்டாகக் காரணமான புலிகளை வாழ்த்தும் நபர்கள் தமிழர்களின் சமாதான வாழ்வை நிராகரிப்பவர்கள். மக்கள் மண்டையை போட்டால்த்தான் “ஈழப்” போராட்டம் வளரும் என்ற கொள்கைவாதிகள்தான் இப்போது அரசு கொடுக்கும் வீடுகள் பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.
அது சரி டி ஆர் ஓ கட்டிய வீடுகள் என்னாச்சு? குண்டு விழுந்து அழிந்து போய்விட்டது என்று “கணக்கு” விடாமல் இருந்தால் சரி!
விசுவன்
NANTHA/ நம்ம TRO பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்கப் போவதாக தமிழர்களிடம் தெண்டிய பணத்தின் கதி என்ன? பத்து வீடுகள் கட்டியதாகத் தகவல்கள் இல்லை!//
ரீஆர்ஓ தலைவர் ரெஜியின் துணைவியார் தென் ஆபிரிக்காவின் தலை நகரில் சுகபோக வாழ்விற்கு அந்த நிதி முழுவதும் சென்றடைந்துள்ளது! அவாவும் புலன் பெயர்ந்த தமிழர் தானே!!!
NANTHA
விசுவன்:
நவநீதம் பிள்ளைக்கு புலிகள் லஞ்சம் கொடுத்து ஐ நா மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக பேச வைத்தார்கள் என்று ஒரு சிங்களவர் எழுதிய கதையை முதலில் நம்பாத நானும் எனது நண்பர்களும் இப்போது நம்பலாம் என்றே தோன்றுகிறது. நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்காவை சேந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெருப்பில்லாமல் புகை இல்லை. தகவலுக்கு நன்றி.
NANTHA
ஊஞ்சல் என்பது தமிழ். ஊஞ்ஞல் என்பது மலையாளம். அந்த ஆசிரியர் பிரபாகரனின் அச்சன்(அப்பா) வேலுப்பிள்ளையின் உறவினரோ தெரியவில்லை!
பார்த்திபன்
இந்தப் புத்தாண்டிலாவது அந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்தால் மகிழ்ச்சியே. அதற்காகப் பாடுபடும் இராணுவத்தினர் உட்பட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். இது ஒரு ஆரம்பமாகத் தொடங்கி, எல்லோருக்கும் வாழ்விடமும் தொழில் தொடங்கப் போதிய நிதி வசதியையும் செய்து தர அரசு முன் வர வேண்டும். இப்படியான நிகழ்வுகள் வெறும் தேர்தல் காலப் பிரச்சார நடவடிக்கையாக மட்டும் இருந்து விடக்கூடாதென்பதையும், அரசு கவனத்தில் எடுக்குமென்று நம்புகின்றேன்.
palli
/இந்தப் புத்தாண்டிலாவது அந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்தால் மகிழ்ச்சியே. அதற்காகப் பாடுபடும் இராணுவத்தினர் உட்பட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். //
விடிவு வருவதாயின் அனைத்து இயக்க அரசியல்வாதிகளும் அரசியலை விட்டு கட்டாயமாக ஒதுக்கபட வேண்டும், புதியவர்கள் அங்கு வாழ்பவர்கள் மட்டும் அரசியலில் இருக்க வேண்டும்; புலிக்கு மட்டுமல்ல கழகத்தில் இருந்து தோழர்வரை புலம்பெயர் ஆலோசகர் கூட்டம்தான்
ஆட்டுவிக்கிறது; புலம்பெயர் தமிழர் யாரும் அரசியலில் ஈடுபடவோ அல்லது ஆலோசனை என்ற பெயரில் சிலரை ஆட்டுவிப்பதை மக்கள் வெறுக்க வேண்டும், அதுக்கான பதிலை தேர்தலில் காட்டலாம்; இபோது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் புற்றுநோய் போன்றவர்களே, இது என் கருத்து,