விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு

lttelogo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, தற்போது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என சில இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவரால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது. தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.  தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தாம் போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என்று பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதாகவும், புலிக்கொடியேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம்  Unit G11, Lombard Business Park
2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. புலிகளின் அந்த அரசியல் கட்சியின் தலைவராக மாத்தையாவின் பெயரே பதியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி அவர்கள் விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் செயலாளராகராக நியமிக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி இலங்கைத் தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்து.

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 1ம் திகதி வரை நடைபெற்றது.

1990ம் ஆண்டு ஆரம்பமான 2ம் கட்ட ஈழ யுத்தத்தைத் தொடர்ந்து இந்தக் கட்சியின் செயற்பாடு முற்றாகவே இடைநிறுத்தப்பட்டிருந்தது.

Show More
Leave a Reply to தீபன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • sumi
    sumi

    அப்படியென்றால் பிரித்தானியாவில்தான் “ரமிலீலம்” கிடைக்குமா? இலங்கையிலல்ல.எப்படியோ அங்கு வாழும் தமிழர்களுக்கு நிம்மதிதான். அது போதும்.

    Reply
  • ramohan
    ramohan

    புலிகளின் கட்சியை பதிவுசெய்யமுன், தலைவருக்ககு ஒரு அஞ்சலி நிகழ்வு ஒன்று செய்யுங்கள், அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்யுங்கல், பின்பு கட்சியை பதிவு செய்யுங்கள். பின்பு உங்கள் நிகழ்சியை அரங்கேற்ருங்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிநகம் மனிதனுக்கில்லாத போது ஆயுதம். இத்துடன் சேர்ந்ததே புலிச்சின்னம். ஒரு விடுதலை தேடும் இனத்தின் சுகந்திரக் கொடியாம். இந்த சின்னத்தின் பெயரில் நடந்த அசம்பாவிதங்களை மீண்டும் தோண்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
    இந்தக் கொடியில்-அமைக்கப் பட்டகட்சியில் கடந்தகாலத்தில் பலசாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. அந்த சாதனைகளை மீழ்நினைவு கொண்டாலே போதுமானவை. தமிழ் பிரதேசங்களின் எல்லை கிராமத்தில் இருந்த ஏழைஎழியமக்களை எழுவதுவயது இல்லை என்பது வயதுமில்லை என்று பேதம் பார்க்காமல் வெட்டிக் கொண்றார்கள். அதற்கும் புலம்பெயர் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றது.
    வேலுப்பிள்ளை மகனுக்கு சத்தியம் செய்து விடுதலைகாணப் புறப்பட்டவர்கள். உத்தரவு வந்ததும் மாற்று இயக்கத்தில் இருந்த அண்ணனைக் கொன்றார்கள். அக்கா தங்கச்சியை கொன்றாள்.ஆகப் பெரிய சாதனை தமிழனை தமிழன் அழித்தது. சுட்டது எரிச்சது வத்தல் போட்டது. இதுவே புலித்தலைச் சின்னத்தின் அதிஉயர்ந்த சாதனைகள். இந்தசாதனையின் விளைவால் உலகின் பலநாடுகளிலிலும் பையில்பல மில்லியன் பவுன்ஸ் டொலர்களை வைத்து வலம் வருகிறார்கள்.இவர்கள் மேலும் தொழில் முன்னெற்றம் காணுவோமா? என கனவுகாண்கிறார்கள். ஆகவே இவர்களுக்கு பழைய “பிராண்ட்” கட்சியும் தேவையாக இருக்கிறது. இந்த பேய்கள் குடிகொண்ட ஆலமரம் லண்டனில் விழுதுகள் பரப்பி செழிப்பாக உள்ளது. இதற்கு அங்குள்ள வெள்ளை அரசியல்வாதிகள் போதுமான உரத்தை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    இது பிரித்தானிய அரசு, தமிழ் மக்கள் வாக்குகளுக்காகவும், மீண்டும் ஒரு குழப்பல் நிலையை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தவும், நிரந்தர அடிமைகளாக தமிழர்களை மாற்றவும் செய்கின்ற முயற்சி. சிங்கள பௌத்த பேரினவாதத்தை மேலும் வலிமைப்படுத்த ஸ்ரீலங்கா அரசோடு சேர்ந்து செய்கின்ற கூட்டுச் சதி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முதலில் ஏதாவது ஆங்கில ஊடகங்களில் இவர்கள் என்ன செய்தி சொல்லியுள்ளார்கள் என்பதை ஆராயுங்கள், அதன் பின் கருத்துகளைப் பகிரலாம். ஏனெனில் ருத்திரகுமாரிலிருந்து பல ஏமாற்றுக்காரர்கள், ஆங்கிலத்தில் ஒரு கருத்தையும் தமிழில் இன்னொரு கருத்தையும் சொல்லி தமிழர்களை ஏமாளிகள் ஆக்கியே வருகின்றார்கள். உண்மையில் புலிச்சின்னத்தையும், விடுதலைப்புலிகள் என்ற பெயரையும் பாவித்தா கட்சியை ஆரம்பித்துள்ளார்கள் என்பதை உறுதிசெய்யுங்கள். இவற்றை உண்மையில் பிரித்தானிய அரசு அனுமதித்திருந்தால், வாக்கு வேட்டைக்காக பிரித்தானிய அரசின் இரட்டை வேடமும் கலைகின்றது. பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரில் எப்படி ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியும்??

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இந்தசாதனையின் விளைவால் உலகின் பலநாடுகளிலிலும் பையில்பல மில்லியன் பவுன்ஸ் டொலர்களை வைத்து வலம் வருகிறார்கள்.இவர்கள் மேலும் தொழில் முன்னெற்றம் காணுவோமா? என கனவுகாண்கிறார்கள். ஆகவே இவர்களுக்கு பழைய “பிராண்ட்” கட்சியும் தேவையாக இருக்கிறது. இந்த பேய்கள் குடிகொண்ட ஆலமரம் லண்டனில் விழுதுகள் பரப்பி செழிப்பாக உள்ளது. இதற்கு அங்குள்ள வெள்ளை அரசியல்வாதிகள் போதுமான உரத்தை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்./– சந்திரன் ராஜா.

    இலங்கைத் தமிழரையும், “டக்ளஸ் தேவானந்தாவையும்” புரிந்துக் கொள்வது மிகவும் சிரமமாகி வருகிறது. யாழ்ப்பாணத்தவர் என்றால் பணத்தில் குறியாக இருப்பவர்கள், வருமானம் வருகிறதென்றால், பழகுவோம் மற்றப்படி வேறு எந்த ஈவிரக்கமும் காட்ட வேண்டாம் என்பது மாதிரி ஆகிவிட்டது. 1980 களில் ,டக்ளஸ், தன் இரத்தத்தை விற்று அரசியலுக்கு செலவு செய்ததாக கேள்வி. பிரபாகரன் கீழே விழுந்தவுடன் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள், “செத்த பாம்பை அடித்து” பேர் வாங்கும் வீரர்களாக மாறியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வெற்றிபெற வேண்டியது டக்ளஸின் இருப்பு. அதற்க்காக, இலண்டன் வெள்ளை அரசியல் வாதிகளின் உரத்திற்கு உரம் சேர்க்கிறார் என்று அர்த்தமல்ல. அலன் தம்பதிகளை கடத்தும் போது, சுரேஸ் பிரேமசந்திரன் போலல்லாது, ஒரு உணர்ச்சிகர போராளியாகவே இருந்தார் என்று கூறலாம். விடுதலைப் புலிகளின் மக்கள் முன்ணணி இலங்கையிலேயே தடை செய்யப்படாத அமைப்பு. இலண்டனில் “சட்டத்தரணிகளாக” இருக்கும், இலங்கைத்தமிழ் “மொடாமுழுங்கிகள்”, இதை சட்ட ரீதியாக பதிவு செய்வதில் பிரச்சனையில்லை. இப்படிப் பட்ட மலிவு விளம்பரம் எதற்காக!.

    இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழரும், சிங்களவரும்,இவர்களிடம் அடிப்பட்டு, நன்றாக, கற்றறிந்துவிட்டனர். ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் அப்படியில்லை!. நன்றாக மிளகாய் அறைக்கலாம். இந்தியாவுக்கு ஏதாவது ஒரு வகையில், “புலி ஜேம்ஸ்பாண்ட் பிராண்டில்” சென்றால்தான், வெளிநாடுகளில், இந்தியாவிற்கு போனால் ஏமாறிவிடுவார்கள் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்..என்ற சினிமாவை பார்த்துவிட்டு) சமாளிக்கலாம், என்ற அரசியல் அறிவற்ற, “குசும்பு” கூட்டம்தான் இது போன்ற அமைப்பை ஆரம்பித்து இருக்கிறது. டக்ளஸ் தேவாநந்தா சொல்லும் யாழ்ப்பாணம் சரி!. ஆனால் அரசியல் உலகில் கணக்கெடுக்க முடியாத இந்த சிறிய தொகையினரை, “தமிழ்நாட்டுக்குள் புகுந்து” “கதவை திறந்துவைத்து”, தங்கள் அடையாளத்தை பூதக் கண்ணாடி போட்டு (சென்னை முதலியார்கள், தலித்தியம்) பெரிதாக காட்டி விடலாம் என்பதை விடுத்து, “யாதார்த்தத்திற்குள்” அடங்கும் ஒரு அரசியலுக்குள் தொழில்பட ஆரம்பித்தால் நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன்!.

    ……தமிழ்நாட்டுக்குள் புகுந்து” “கதவை திறந்துவைத்து”,தங்கள் அடையாளத்தை பூதக் கண்ணாடி போட்டு(சென்னை முதலியார்கள்,தலித்தியம்)பெரிதாக காட்டி விடலாம் ….(இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.

    அமரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்தியம் என்பது இன்றைக்குப் பல துருவ பிராந்திய ஏகத்துவப் பரவல்களாக விரிவடைந்து கொண்டிருக்க, புதிய அரசியற் சூழலை நோக்கி உலகம் நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது).

    Reply
  • anwar
    anwar

    இதன் பின்னணியில் ”குண்டான அப்பாக்கள்” இருப்பதாக பட்சி சொல்லுது.
    இனி புலிக்கொடி பிடிக்கலாம் எண்டு , சுரேன் சுரேந்திரர், சென் கந்தையாவிட்ட சொல்லுங்கோ.
    கட்சியின் சார்பாக , நாடு கடந்த அரசுத்தேர்தலில, குதிக்கலாமே.

    Reply
  • thurai
    thurai

    தமிழீழமென்பது இலங்கை தவிர்ந்த உலகநாடுகளில் வாழும் சில் தமிழர்களின் கற்பனையேயாகும். இந்தக் கற்பனையைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்திய, நடத்தும் கூட்டத்தினர் பல பிரிவுகளாக் செயல் படுகின்றனர்.

    வட்டுக்கோடைத்தீர்மானம் கடல் கடந்த தமிழீழ அரசு விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி

    இன்னும் 30 ஆண்டுகளில் வடக்குக் கிழக்கு மாகானங்களிலும் பார்க்க கனடாவில் தமிழர் தொகை கூடிவிடும். எனவே கனடிய ஈழக் கோசம் தொடங்கிவிடும்.

    துரை

    Reply
  • தீபன்
    தீபன்

    http://www.electoralcommission.org.uk/ என்கின்ற பிரித்தானிய உத்தியோக பூர்வ தளத்தில் http://registers.electoralcommission.org.uk/regulatory-issues/regpoliticalparties.cfm?frmGB=1&frmPartyID=950&frmType=partydetail என்ற இணைப்பில் People’s Front of Liberation Tigers என்ற கட்சி British Eelam Tamil Tigers முதலிய விபரங்களோடு 10/02/2010 இல் பதிவாகியிருக்கிறது. ஆனால் கொடிஎதுவும் பதிவுசெய்திருப்பது மாதிரித் தெரியவில்லை emblem எனும் சுட்டியில் இலச்சினையும் உள்ளது அது ஏற்கனேவே பாவனையில் இருந்ததா அல்லது புதிதாக வடிவமைக்கப்பட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான ”விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி” (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி,
    ஏற்கவே இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கட்சிதான் (பிரேமதாசா காலத்தில்) இதன் தலைவர் மாத்தையா!

    இதற்கு வேறு ஒரு சின்னமும் உண்டு!! அத்தோடு, மாத்தையா துரேகியென்று (இந்திய உளவாளி ) சுடப்பட்டதும் இதன் பின்னர்தான். இதற்குப் பிறகு இது இயங்கியதே இல்லை.

    இலங்கையில் பதிவாகிய கட்சியை, இங்கிலாந்தில் – இவர்கள் ஏதோ, ‘எம்ரனாகப்’ பதிந்ததாக? ரீல் விடுகிறார்கள்.

    புலியின் சின்னத்தை மீண்டும் பிடிப்பதற்கு, அப்பாவிப் புலம் பெயர்ந்த மக்களின் ‘ஏமாளித்தனத்தை’ தமது திறில் அரசியலாகவும், சொத்துக்களின் மெத்தைகளில் துள்ளுவதற்கும், இவர்கள் இப்பொழுது ஆசைப்படுகிறார்கள்… அவ்வளவுதான்.

    ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவன் முளைத்துக்கொண்டே தான் இருப்பான்…..

    Reply