ஜான்சிலா மஜீதுக்கு விருது வழங்கினார் ஹிலரி கிளின்டன்

hillary_with-majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயர் விருது இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு நேற்று வழங்கப்பட்டது.

வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி  கிளின்டன்  இந்த விருதை வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க முதற் பெண்மணி மிச்சேல் ஒபமா கலந்துகொண்டு உரையாற்றினார்.

வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காகவே ஜான்சிலா மஜீதுக்கு சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது.
 
சர்வதேச பெண்களுக்கான உயர் விருது சர்வதேச நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 பேருக்கு நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நீங்கள் விருது வழங்கும் போது,துணிச்சல் மிக்க பெண்கள் துஷ்பிரயோகம் பண்ணப்படப் போகிறார்களே என்கிற கவலையுடன், அந்தப் பெண்ணுக்கு(இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு) வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

    Reply
  • BC
    BC

    சிறந்த பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு பரிசு வழங்கியவர் பொருத்தம் அற்றவர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சிறந்த பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு பரிசு வழங்கியவர் பொருத்தம் அற்றவர்….//BC
    இவ்விருதைவழங்கிய நாட்டின் ராஜாங்க அமைசின் செயலர் (தலைவர், அமைச்சர்) பொருத்தமற்றவர் எனின் விருதை வாங்கியவர் என்ன நினைத்துக்கொண்டு அங்கு சென்றார்?

    இவ்விருதுக்கு தானே மனமுவந்து தனது அமைப்பின் செய்ற்பாடுகளை விளக்கி தனது பெயரையும் அனுப்பியதாகவும் இவ்வ்விருதை வழங்குவதற்கு முன்னர் தன்னை கொழும்ம்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சந்தித்தனர் எனவும் தன்னிடம் விருதுக்காக தன்னைப் பரிந்துரை செய்வதில் தனக்கு சம்மதமா எனக்கேட்டனர் எனவும் பின்னர் தான் தெரிவு செய்யப்பட்டதை உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்தனர் எனவும் ஒரு வாரத்தின் பின்னரே உத்தியோக பூர்வ அறிவித்தல் வந்தது என்றும் கூறிய ஜான்சிலா தனக்கு விருது வழங்கப்போவது யார் என அறிந்திருப்பார் என நினைக்கிறேன்!

    Reply
  • Ahmad Nadvi
    Ahmad Nadvi

    It is just an encourgement for woman like Jansilla Majeed to promote good relationship and understanding among Sri Lankan. Specially between Muslims and Tamils.

    It is something like Noble Prize. A mechanism to make the people get involved in certain things which may at least reduce tention between parties concerned. Therefore it has to be respected.

    I don’t understand why Hillary Clinton is not fit person to hand the prize over.I think Tamilvaatham, BC and Santhan may have something against Hillary Clinton. I personnaly don’t like or agree with Hillaay Clinton’s view on world politics but this is something different and we have to see it differently.

    I wish all the best for the future work of sister Jansilla Majeed.

    Reply
  • Alex Eravi
    Alex Eravi

    ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி!!!

    ஈழத்து மண்ணிலே பிறந்த இனமொன்று
    வாழ்கின்ற வயதிலே வளமிழந்து இடம்பெயர்ந்து
    சூழ்கின்ற துயரங்கள் சுழன்றடித்த போதினிலே -மனமும்
    பாழ்பட்டுப் போகாமல் பக்குவப் படுத்தவேண்டி
    ஆழ்ந்த சிந்தையுடன் அயராது பாடுபட்டு -தோல்வியில்
    மூழ்கிப்போய் மூலையிலே முடங்கிக் கிடக்காமல்
    வீழ்ச்சியில்லா வீறுகொண்ட வீரமான மாதரசி!
    தாழ்வில்லை உன்பணிக்கு தரணியிலே முன்னுரிமை!!

    மங்கிய பொழுதொன்றில் இருபது ஆண்டுமுன்னே
    பொங்கிவந்த கண்ணீரை வெறுங்கையால் துடைத்துவிட்டு
    எங்குதான் போவதென்ற ஏங்கிய உள்ளத்தோடே
    தங்களின் சொத்துக்களை வடக்கிலே விட்டுவிட்டு-அகதிக்கு
    பங்களிக்கும் பாசப்பூமி புத்தளம் வந்தடைந்த
    நங்கையர்கள் வாலிபர்கள் நலிந்த முதியோர்கட்கு……
    “உங்களுக்கு நாமிருக்கோம்” என்றவொரு நம்பிக்கையை
    அங்கு வழங்கினார்கள் அன்பான மானிடர்கள்.!

    ‘ஜன்சில மஜீத்” என்ற சமூகநலச் சேவகியே!
    சனங்களின் புனர்வாழ்வைச் சரித்திர நிகழ்வாக்கி
    மனம் மொழி மெய்யறிவு மாறாத தியாகச்சிந்தை…..
    இனங்களின் பாதுகாப்பை ஏற்றமாய் நடாத்துவதால்…..
    தன்நம்பிக்கை விடாமுயற்சி தளராத மனவுறுதி…..
    தன்னலம் சிறிதேனும் தலைகாட்ட முடியாத
    பொன்மனச் செல்வியெனப் பொதுமக்கள் போற்றுவரே!
    மென்மேலும் உனதுசேவை மேதினியை உயர்த்தட்டும்!!

    வாழ்த்துரை எழுதியவர் – வள்ளீயம்மை சுப்பிரமணியம்.

    Reply
  • Alex Eravi
    Alex Eravi

    புலிகளினால் அகதியாக்கப்பட்டு சர்வதேச விருது பெற்றுக்கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத்!

    எமது ஈழத்து தமிழ் முஸ்லிம் சகோதரி ஜன்சிலா மஜீத் இன்று (மார்ச் 10) 2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருதை (International Women of Courage – IWOC) அமெரிக்க இராஜாங்க செயலகத்தில் நடந்த விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலரி கிளின்டனிடமிருந்து பெற்றார்.

    முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீர் ஊற்றை பிறப்பு இடமாகக் கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள் யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி தொடர்ந்திருந்த வேளையில் 90களில் தமிழீழ விடுதலை புலிகளால் யாழ் மண்ணை விட்டு குடும்பத்துடன் விரட்டப்பட்டு புத்தளத்தில் கடந்த 20 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வரும் வேளையில் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களிக்கிடையில் சமூக நம்பிக்கை நிதியம் (Community Trust Fund) என்ற அரச சார்பற்ற அமைப்பு மூலம் நிருவாக நம்பிக்கையாளராக (managing trustee) சேவை புரிந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

    விருது வழங்கும் போது வாழ்த்து தெரிவித்த இராஜாங்கச்செயலாளர் கிலரி கிளின்டன் கூறினார், ” கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள், புத்தளம் மாவட்டத்தில் வாழும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயான ஓர் குறிப்பிடத்தக்க பெண் என்றும், புத்தளம் பிராந்திய சக நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளராக திகழ்கின்றார் என்றும், அவருக்கு இன்று கொடுக்கப்படும் விருது, அவரின் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையிரையிடயான தலைமைத்துவம், புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தவர்க்கான மீள் குடியேற்றம், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், அந்த சமூகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும், முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதற்கும் ஆகும்” எனத் தெரிவித்தார்.

    SECRETARY CLINTON: Jansila Majeed of Sri Lanka is a women who lived as an internally displaced person for almost 20 years. She became one of the few women activists working on behalf of the displaced Muslim and Tamil civilians and is the managing trustee of the Community Trust Fund in Puttalam Province. She’s being honored for her dedicated grassroots activism and minority community leadership on behalf of women and girls, their empowerment, peace building, relief work, the resettlement of internally displaced persons, and a commitment to bringing society together. Congratulations.

    ஆண்டுதோறும் தெரிவு செய்யப்படும் பத்துப் பேரில் ஒருவருக்காக இவருக்கு கிடைத்திருக்கும் இவ் விருது, 2007ஆம் ஆண்டு அப்
    போதைய இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைசினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு சர்வதேச அளவில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றும் பெண்கள் பத்துப் பேர் வருடந்தோறும் தேர்வு செய்யப்படுகின்றார்கள்

    இன்று இவ்விருதை சுக்ரியா (ஆப்கானிஸ்தான்), சபீக்கா குரைஷி (ஆப்கானிஸ்தான்), அன்ட்ரொலா ஹென்ரிக்ஸ் (சைப்ரஸ்), சோனியா பியரே (டொமினிகன் குடியரசு), ஷாடி சத்ர் (ஈரான்), ஏன் ஜோகு (கென்யா), டாக்டர். லீ அய்ரன் (கொரியா), மேரி கிளெடே நதாப் (சிரியா). ஜெஸ்டினா முகோகோ (ஸிம்பாப்வே) ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
    விருது வழங்கும் விழாவிற்கான விடியோ; சகோதரி ஜன்சிலா மஜீத் விருது பெறுவது 38 -40 நிமிடத்தில் இணைக்கபட்டுள்ளது:
    http://www.dailymirror.lk/index.php/video/2279-international-women-of-courage-awards-2010.html

    விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கிலரி கிளின்டன், அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா ஆகியோருடன் ஜென்ஸிலா மஜீத் எடுத்துக்கொண்ட படம்:
    http://sec.wbir.com/photo/0evj47N3yc2LH?q=Sri+Lanka

    துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதினை பெற்ற ஜென்சிலாவுடன் சர்வதேச பெண்கள் தின நேர்காணல்
    http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=921

    புகைப்படத் தொகுப்பு:
    http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/ms_jenzilamajeedphotos/index.htm

    – அலெக்ஸ் இரவி

    மேலும் தொடர்பான செய்திக்கு:
    http://www.state.gov/s/gwi/iwoc/2010/bio/137497.htm
    http://transcurrents.com/tc/2010/03/post_506.html
    http://www.peacemuslims.org/Jansila_Majeed_receives_prestigious_IWOC_award-20-1479.html

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /.I think Tamilvaatham, BC and Santhan may have something against Hillary Clinton……./
    Ahmad Nadvi on March 12, 2010 10:14 am

    நன்றாக வாசித்துப் பாருங்கள். மூவரின் கருத்தும் முற்றிலும் வேறு வேறு விதமானவை.
    பொதுமைப்படுத்திய முறை கவலைக்குரியது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..I think Tamilvaatham, BC and Santhan may have something against Hillary Clinton….//

    Mr.Ahamed Nadvi,

    YOU MUST BE KIDDING !
    Just go and read my comments one more time, which was made to counter BC’s comments.
    I really hate to write in English in a forum which is based in Tamil and discus mostly Tamil issues.
    But you seems to misunderstand Tamil, so I’m forced to write in English.

    I met Hillary Clinton. I really admire her for her courage and the way she put up to her ‘haters’ during her white house years,her Senate years, her Presidential candidacy year and the current tenure.

    I’m NOT like some of the people here who hate anything US but try to go to US any minute. I’m NOT like people who hate US but when they get weapons from US show full line of their teeth. I’m not like some one who hate US but when they get an award from US come up with full of praise for US.
    If you just read some of the websites/discussion forums cater the SriLankan locals and diaspora, you see full of VENOM against Ms.Jansilla Majeed, accusing her of betraying Muslims/Palestinians and agreeing with ‘LTTE loving’ white people.
    Why go that far? when this award was announced in this forum (thesamnet) one of the commentators cautioned Jansilla Majeed not to go to US since she will be harassed at the airport!

    Once again sorry for writing in English.

    Reply