பிரிட்டனின் செயற்பாடு இலங்கையின் இறைமை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்

gl_1.jpgஇலங் கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வெறெந்த நாட்டுக்கோ தார்மீக உரிமை கிடையாது. புலிகளுக்குச் சார்பான உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றியதன் மூலம் அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். பிரிட்டனின் செயற்பாட்டின் மூலம் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ஜீ. எல். பீரிஸ் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இலங்கைக்கு வெளியில் புலிகள் இயக்கத்தை நிறுவ வேண்டுமென்று கூறிவரும் உலகத் தமிழ் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்றது மிகவும் தவறாகும். பிரிட்டனில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அந்நாட்டு அமைச்சருக்கு உரிமை உள்ளது. ஆனால், இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேசுவதற்கு அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் தெளிவான தீர்வு வழங்கியுள்ளனர். இந்த நாட்டுக்கு எத்தகைய தீர்வு தேவை என்பதை இந்த நாட்டு மக்கள் முடிவு செய்வர். ஒரு நாட்டின் விடயம் தொடர்பில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கலாம். ஆனால், அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாட்டையும் உரையையும் நாம் கண்டிக்கிறோம். இதேவேளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளை கொள்வனவு செய்யாது பகிஷ்கரிக்குமாறு மேற்படி அமைப்பு அங்குள்ள தமிழ் மக்களை கேட்டுள்ளது. இதனூடாக எமது நாட்டு பொருளாதாரத்தை அழிக்க சதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • thurai
    thurai

    உலகத் தமிழர் பேரவை இலங்கைக்கு மட்டும் கெடுதல் தேடும் அமைப்பல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிற்கும் உலகநாடுகள் அனைத்திற்குமே இவர்கள் ஆபத்தானவர்கள் உலகத் தமிழர் பேரவை பயங்கரவாதப் புலிகளின் மாற்றுப் பெயர் என்பது யாவரிற்கும் தெரிந்த விடயம்.

    இப்படியிருந்தும் இவர்களிற்கு சில அரசாங்கங்கள் ஆதரவு கொடுக்கின்றன என்றால் அது தமிழரின் நன்மைக்காகவல்ல. புலத்தில் வாழும் தமிழர்களின் பணத்திலும், ஈழத்தமிழரின் உயிகளின் அழிவிலும் தங்களை வளர்த்தவர்களே உலகத்தமிழ் பேரவையினர். புலியின் கொடியையும் தலைவரின் படத்தினையும் வணங்குபவ்ர்களே இவர்கள்.

    இவர்கள் சமூக அந்தஸ்தை தமிழரிடம் பெறுவதற்கும், தொடர்ந்தும் மக்களை ஏமாற்ரி பணம் சேர்த்து உலகெங்கும் முதலீட்டினைச் செய்வதற்குமே உலகத் தமிழர் பேரவை.

    விடுதலை கேட்டு போராடியவர்கள், குடும்ப வாழ்வையே விரும்பாத ஒரு கத்தோலிக்க பாதிரியாரை தலைவராக்கியதே இவர்களின் ஏமாற்றுக்கு உதாரணம். இவரின் பின்னால் எத்தனை கொலைகாரர், மோசடிக்காரர் மறைந்திருக்கின்றனரென இவரிற்குத் தெரியுமோ, தெரியாதோ ஆனால் உலகம் இவர்களிற்கு பாடம் புகட்டும் நாள் விரைவில் வரும்,

    துரை

    Reply
  • rohan
    rohan

    //விடுதலை கேட்டு போராடியவர்கள், குடும்ப வாழ்வையே விரும்பாத ஒரு கத்தோலிக்க பாதிரியாரை தலைவராக்கியதே இவர்களின் ஏமாற்றுக்கு உதாரணம்.//

    இப்படியே எல்லோரையும் demonise பண்ணிக் கொண்டு காலத்தைக் கடத்துவோமாக.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    …..விடுதலை கேட்டு போராடியவர்கள், குடும்ப வாழ்வையே விரும்பாத ஒரு கத்தோலிக்க பாதிரியாரை தலைவராக்கியதே இவர்களின் ஏமாற்றுக்கு உதாரணம்…..

    இந்திய விடுதலைப்போராட்டத்துக்கு பால்யத்திருமணம் செய்து மனைவியைக்கேளாமல் பிரம்மச்சார்யம் மேற்கொண்டு பெற்ற பிள்ளைகளையே கவனிக்காமல் ஊதாரிகளாக அலையவிட்ட ஒருவரை உங்களுக்குத் தெரியுமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இப்படியே எல்லோரையும் demonise பண்ணிக் கொண்டு காலத்தைக் கடத்துவோமாக.//

    அதானே நாங்க கல்லாவை நிரப்ப வழியைத் தேடினால், இவங்க கல்லாவை பூட்டுற வழியைச் சொல்லுறாங்க.

    Reply
  • rohan
    rohan

    //அதானே நாங்க கல்லாவை நிரப்ப வழியைத் தேடினால், இவங்க கல்லாவை பூட்டுற வழியைச் சொல்லுறாங்க.//

    இப்ப்டி முன்னால் வருபவர்களிலெல்லாம் குறை கண்டால், யார் எமக்காக முன்னால் வரப் போகிறார்கள் என்பது எனது கேள்வி.

    புலி போய் விட்டது – இனி எமது இராச்சியம் – இனி நாங்கள் நமது கல்லாவை நிரப்பலாம் – என்று நாங்கள் இருக்க புதிது புதிதாக யாரெல்லாமோ வருகிறார்கள் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் இருக்கிறது என்று கறுவிக் கொள்பவர்களை என்ன சொல்வது?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இப்ப்டி முன்னால் வருபவர்களிலெல்லாம் குறை கண்டால், யார் எமக்காக முன்னால் வரப் போகிறார்கள் என்பது எனது கேள்வி.//

    இவர்கள் தான் முன்பும் சுருட்டலைச் செய்து விட்டு, இன்று மீண்டும் அமைப்புப் பெயர்களை புதிதாக மாற்றி விட்டு, புதிய மொந்தையில் பழைய கள் போல மீண்டும் சுருட்ட வருகின்றார்கள். இவர்களின் கடந்த கால வரலாற்றில் இவர்களால்ச் சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணங்களை, இவர்கள் என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தை தங்களால்த் தர முடியுமா??

    //புலி போய் விட்டது – இனி எமது இராச்சியம் – இனி நாங்கள் நமது கல்லாவை நிரப்பலாம் – என்று நாங்கள் இருக்க புதிது புதிதாக யாரெல்லாமோ வருகிறார்கள் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் இருக்கிறது என்று கறுவிக் கொள்பவர்களை என்ன சொல்வது?//

    இன்றும் புலிப்பினாமிகளை விடுத்து, புதிதாக யார் சுருட்ட வந்தார்கள் என்ற பதிலைத் தெளிவாகத் தந்தால், அதற்குரிய பதிலை எம்மாலும் தர முடியும்.

    Reply
  • thurai
    thurai

    ஈழத் தமிழரின் விடுதலை எனக்கூறி போர் செய்து இறுதியில் கண்டதென்ன. இலங்கையில் வாழும் தமிழர் எல்லோரையும் கருத்திலும் கவனத்திலும் கொண்டு போராட்டம் தொடஙகவில்லை.

    உலக்த் தமிழர் பேரவை பய்ங்கரவாத்ப் புலிகளின் மறு உருவமேயாகும். ஈழ விடுதலை கேட்டு தமிழரைப் பலி கொடுத்தவர்கள் இப்போது உலகத் தமிழர்களிற்கு விடுதலையா கொடுக்கப் போகின்றார்கள்?. ஏன் ஈழத்தமிழர் பேரவையெனெ பெயர் சூட்டாமல் உலகத் தமிழர் பேரவையெனெ
    பெயர் வைத்துள்ளார்களெனெ யாராவது விளக்கம் கொடுஙக்ள் முதலில்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    ஈழத் தமிழரின் விடுதலை எனக்கூறி போர் செய்து இறுதியில் கண்டதென்ன. இலங்கையில் வாழும் தமிழர் எல்லோரையும் கருத்திலும் கவனத்திலும் கொண்டு போராட்டம் தொடஙகவில்லை.

    So why don’t you start one now?

    Reply
  • thurai
    thurai

    தலைவர் நாலு பேர்களையே கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாமல் ஆரம்பத்திலிருந்தே மரணதண்டனை வழங்கினார். இவர் நடத்தியது விடுதலைப் போராட்டமா? தற்பாதுகாப்புப் போராட்டமேயாகும். இதுவே இறுதியில் வன்னித் தமிழரையும் பலிகொடுத்து புலிகளைக் காப்பாறர முடியாமல் போனது.

    ஒவ்வொரு தமிழனாகப் பிறந்தவனிற்கும் விடுதலையென்றால் என்னவென்று மனதில் ஊட்டுபவனே தலைவன். துப்பாக்கி முனையில் வழிநடத்துபவன் தலைவனாகவும் முடியாது வழிநடத்தவும் முடியாது.

    ஒவ்வொரு தமிழனும் நடந்த தவறுகளை உணர்ந்து, ஏமாற்றுக்காரர்களிற்கு இடம் கொடுக்காமல் நடந்தாலே விடுதலையின் முதற் படியில் கால் வைத்தவனாவன். போரினால் இராணுவத்தை வெல்வதோ, சட்டமூலம் உருமையைப் பெறுவதோ விடுதலையாகாது.

    விடுதலையென்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்வோடு இணந்ததே விடுதலை. பிறந்த மண்ணில் வாழும் மக்களே தங்களிற்கு எந்த விடுதலை வேண்டுமெனத் தீர்மானிப்பது.

    துரை

    Reply
  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    மாற்று கருத்து தமிழீழ தோழர்களின் எண்ணப்பாங்கு புலப்படுகிறது..

    இலங்கையர் என்ற எண்ண பாங்கு இங்கு முக்கியமானது.. இலங்கையே நமது தேசியம் ..அதுவே நமது ஒருமைப்பாடு என்ற எண்ணத்திற்கு தோழர்கள் முன்வரவேண்டும்.பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் அனுசரித்து வாழ பழகி கொள்ளவேண்டும்.. இன விடுதலை .. தமிழ்.. தமிழ் தேசியம்.. புரட்சி .. வர்க்க போராட்டம் ஆகியவை காலத்திற்கு ஒவ்வாத முறைகளாகும். அது அரு வெறுப்பானது.. ஏன் தமிழ்நாட்டு தமிழர்களான நாங்களே இந்தியத்தை ஏற்று கொண்டு வாழவில்லையா? இங்கும் தான் டெல்லி வாலாக்கள் தமிழர் நிலங்களை வாங்கி போட்டு கொண்டு தமிழர்களை அடிமையாக வேலை வாங்குகின்றனர் .அதை நாங்கள் புன்முறுவலோடு ஏற்று கொள்ளவில்லையா? அதை போல் இருந்தால் என்ன சிக்கல் வர போகிறது? அதுவே அமைதியான வாழ்கைக்கு வழிகோலும்..

    அதற்கும் சிக்கல் என்றால் போராட்டம் .. உண்ணாவிரதம் என்று அமைதி வழியை கடைபிடிக்கலாமே? எதற்கு துப்பாக்கி தோட்டாக்கள்?.. ஜனநாயக சோசலிச இலங்கை அரசு அனைத்து ஜனநாயக வழிமுறை போராட்டங்களையும் கனிவோடு கவனித்து ஆக்க பூர்வமான செயல்பாடுகளுக்கு தயாராகத்தானே உள்ளது?

    Reply
  • rohan
    rohan

    பார்த்திபன் //இன்றும் புலிப்பினாமிகளை விடுத்து, புதிதாக யார் சுருட்ட வந்தார்கள் என்ற பதிலைத் தெளிவாகத் தந்தால், அதற்குரிய பதிலை எம்மாலும் தர முடியும்.//

    கொஞ்சம் எட்டி நமது தோழரைப் பாருங்கள். யாருடைய பணத்தில் அவரது சாம்ராஜ்ஜியம் ஓடுகிறது?

    ஏன் எல்லாவற்றையும் ‘சுருட்டல்’ மொழியில் அணுகுகிறோம்? சுனாமியின் போதும் முள்ளிவாய்க்கால் முடிந்த பின்னரும் பல அமைப்புகள் பணம் சேர்த்தன. எனது நாட்டில் வாழும் முன்னைநாள் புலிப் பின்னணி கொண்ட பலர் இணைந்து இப்போது பணம் திரட்டி அங்குள்ள தர்ம அமைப்புகள் ஊடாக வீடுகள் கட்டுவதும் பண உதவிகள் செய்வதும் ‘எனக்குத்’ தெரிந்தவை.

    சிலருக்கு மற்றவர்கள் நன்மைக்காக இயங்குவது கூடப் பிறந்த ஒன்று. அவர்களுள் சிலர் புலியுடன் சேர்ந்து அப்போது இயங்கினர். சிலர் புலியினால் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுள் சிலர் புலி இல்லாததால் சுயமாகத் தமது தொண்டு வேலைகளைத் தொடர்கின்றனர்.

    இப்படியே, “இவர்களுக்கு இதில் ஏதும் நன்மை இல்லாவிட்டல் இவர்கள் ஏன் இதில் இருக்கப் போகிறார்கள்” என்று லொஜிக் பேசியே தொண்டு செய்ய வருபவர்களையும் தொந்தரவு செய்ய நாமெல்லாம் தயாராக இருந்தால் எமது இனம் நிச்சயம் உருப்படும்!

    Reply